Monday 23 October 2017

பச்சை மிளகாய் அல்வா

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
கொச்சினில் இருக்கும் எனது சகோதரி இந்த அல்வாவை எங்களுக்கு வாங்கிவந்தார். பெயரே வித்யாசமாக இருந்தது , சுவையும் தான்.
உடனே செய்துபார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து , ஒரு முயற்சிக்கு பிறகு , கடையில் வாங்கிய அல்வாவை விட அருமையாக இருந்தது.

சுவையான , வித்யாசமான பச்சை மிளகாய் அல்வா செய்முறை உங்களுக்காக ,
சமையல் நேரம் : 1 மணிநேரம்
நபர்கள் : 5

தேவையானவை :
சோள மாவு - 1/4 கப்.
மைதா -1/4 கப்
பச்சை மிளகாய் - 4
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் -5 மேஜைக்கரண்டி
ஏலக்காய்- 3 (1/4 தேக்கரண்டி )
பச்சை கலர் - சிறிது ( தேவையென்றால் ).

செய்முறை :
) பச்சை மிளகாயினை கீறி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும்.
) வாணலியில் 1/4 கப் தண்ணீர் , 1 தேக்கரண்டி சர்க்கரை , பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
) தண்ணீரை வடித்துவிட்டு , மீண்டும் மிளகாயினை தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து வடிக்கவும் . இவ்வாறு 3 முதல் 4 முறை , மிளகாய் நிறம் மாறும்வரை கொதிக்கவைத்து வடிக்கவும் .
) மிளகாயினை சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
) ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு , மிளகாய் விழுது , கலர் பொடி( தேவையென்றால் ) , 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
) வாணலிலில் நெய் சூடாக்கி , அதில் மேலே கூறிய மாவு கலவையை சேர்த்து , மிதமான சூட்டில் வேகவிடவும்.
) அல்வா கெட்டியாகும் பொழுது , முந்திரி , ஏலப்பொடி சேர்த்து , நன்றாக எண்ணெய் திரண்டு வரும்வரை கிளறவும்.
) அல்வா வாணலியில் ஒட்டாமல் , திரண்டு வரும்பொழுது , நெய் தடவிய தட்டில் மாற்றி ஆறவிடவும்.
) ஆறியபின் வேண்டுமளவு வெட்டி பரிமாறவும்.
குறிப்பு :
) பச்சைமிளகாய் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
) அல்வாவின் நிறம் பச்சைமிளகாயின் நிறத்திற்கேற்றாற்போல் இருக்கும் , அதனால் நிறம் சேர்த்துக்கொள்ளலாம்.
) நெய் அளவை குறைக்காதீர்கள்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...