Wednesday 8 November 2017

முட்டை குழம்பு

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம்  ,
முட்டை குழம்பு ! நான் மிகவும் எளிதாக , வாரத்தில் இரண்டு முறை செய்யக்கூடிய குழம்பு. மேலும் அனைவர்க்கும் மிகவும் பிடித்த குழம்பு செய்முறை உங்களுக்காக ,

சமைக்கும் நேரம் :20 நிமிடம்
நபர்கள் :  4
தேவையானவை :
முட்டை - 6
வெங்காயம் - 1/2
கடுகு - 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
எண்ணெய்- 1 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு

வறுத்து அரைப்பதற்கு :
வெங்காயம் -2
காய்ந்த மிளகாய் - 4
பட்டை -2
கிராம்பு - 3
சோம்பு - 1 தேக்கரண்டி
கசகசா -1/4 தேக்கரண்டி
இஞ்சி - 1" துண்டு
பூண்டு -6 பல்
முழு மல்லி -4 தேக்கரண்டி
சீரகம் -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை - சிறிது
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
தேங்காய் - 1/8 கப்
எண்ணெய் -1 தேக்கரண்டி

செய்முறை :
 ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , தேங்காய், கடலை தவிர மற்ற அணைத்து அரைக்கும் பொருட்களையும் பொன்னிறமாக வறுக்கவும், அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் மற்றும் கடலை சேர்த்து , கலக்கி ஆற விடவும் .
) ஆறியபின் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
 
) முட்டையை வேகவைத்து, ஓடு உரித்துக்கொள்ளவும். பின்னர் கத்தியால் முட்டையை சுற்றியும் கீறிவிடவும்.
) பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி , கடுகு , கருவேப்பிலை சேர்த்து தாளித்து , வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
) அரைத்த மசாலா, உப்பு சேர்த்து ஒருகொதி விடவும் .
) குழம்பு கொதிக்காரம்பித்தவுடன், முட்டை சேர்த்து , தேவையான பதத்திற்கு கொதிக்கவிடவும்.
) இறுதியாக , மல்லியிலை தூவி , அடுப்பில் இருந்து இறக்கவும்.
) சாதம், இட்லி ,தோசை , சப்பாத்தியுடன் சுவைக்கலாம்.


Tuesday 7 November 2017

மலபார் பரோட்டா

மலபார் பரோட்டா



TO VIEW IN ENGLISH : PLS CLICK  HERE
வணக்கம்,
மலபார் பரோட்டா !! சால்னா ரெசிபி நேற்று போஸ்ட் செய்தேன் , பரோட்டா இல்லாத சால்னா குற்றமாகும் அதனால் இன்று பரோட்டா ரெசிபி.
எனது வாசகர் திருமதி .மணிமேகலை இந்த ரெசிபிஐ கேட்டுருந்தார்,அனால் நேரமின்மை காரணமாக இன்று தான் போஸ்ட் செய்ய முடிந்தது.
இன்று  நான் பரோட்டா முட்டையுடன் போஸ்ட் செய்கிறேன் , வரும்வாரத்தில் முட்டை இல்லாத பரோட்டா ரெசிபி போஸ்ட் செய்கிறேன் .
சுவையான , பிரபலமான , மலபார் பரோட்டா ரெசிபி உங்களுக்காக ,
எண்ணிக்கை : 4 பரோட்டாக்கள்.
தேவையானவை :
மைதா – 2 கப்.
தயிர் – 2 தேக்கரண்டி.
முட்டை – 1 .
உப்பு – 1 தேக்கரண்டி.
சர்க்கரை – 1 தேக்கரண்டி.
நெய் – 2 1 /2 தேக்கரண்டி.
தண்ணீர் தேவையானஅளவு.
எண்ணெய் – 4 தேக்கரண்டி.
செய்முறை :
) ஒரு பாத்திரத்தில் முட்டை , உப்பு , சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
) இன்னொரு பாத்திரத்தில் மைதா , 2 தேக்கரண்டி நெய் சேர்த்து கலக்கவும்.
) மைதாவின் நடுவில் குழி செய்து ,தயிர் , முட்டை கலவை சேர்த்து நன்றாக பிசையவும்.தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து பிசு பிசுப்பான பதத்திற்கு பிசையவும்.
) இப்பொழுது 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக 10 நிமிடம் பிசையவும்.
) மாவு நன்றாக உருண்டு ,பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை பிசையவும்.
) ஒரு ஈர துணியை கொண்டு மாவை மூடி 1 மணி நேரம் வைக்கவும்.
) 1 மணி நேரத்திற்கு பிறகு , ஒரு சமமான இடத்தில் 1 தேக்கரண்டி எண்ணெய் தடவி , மாவை அதில் வைத்து 5 நிமிடம் பிசையவும்.
) பின்பு மாவை பந்து அளவில் உருண்டைகள் செய்து இன்னும் 10 நிமிடம் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
௧௦) ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து சமமான எண்ணெய் தடவிய இடத்தில் வைத்து , பூரி கட்டை அல்லது கையால் மெலிதாக தேய்க்கவும்( நான் கையால் தள்ளினேன் ).கீழ நிலம் தெரியும் அளவு மெலிதாக இருக்கவேண்டும்.
௧௧)தேய்த்த மாவின் மேல் என்னை தடவி ,சேலை மடிப்பு போல் ஒரு முனையிலிருந்து மடித்து வரவும்.மடித்த மாவை சுருட்டி வைக்கவும்.
௧௩)அவ்வாறு அனைத்து பந்துகளையும் தேய்த்து ,சுருட்டி வைக்கவும்.
௧௪) முதலில் சுருட்டிய மாவை எடுத்து மெதுவாக , சற்று தடினமான பரோட்டாவாக தேய்க்கவும்.மிகவும் மெலிதாகே தேய்க்கக்கூடாது , மிகவும் அழுத்தமாகவும் தேய்க்கக்கூடாது.
௧௫)தோசை கல்லை சூடாக்கி ,வெண்ணை தடவி ,தேய்த்த பரோட்டாவை கல்லில் வைத்து , குறைந்த சூட்டில் 5 நிமிடம் வேகவிடவும்.
௧௬) பின்பு மறுபக்கம் திருப்பி 5 நிமிடம் வேகவிடவும்.
௧௭) இப்பொழுது பரோட்டா நன்றாக வெந்தபிறகு , சூட்டை அதிகப்படுத்தி இரு பக்கமும் 2 நிமிடம் வேகவிடவும்.
௧௮) பொன்னிறமாக வெந்தவுடன் , கல்லில் இருந்து எடுத்துவிடவும்.இதே போல் அணைத்து பரோட்டாக்களையும் சுட்டு வைத்தபிறகு , நான்கு பரோட்டாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி , இரு கைகளையும் வைத்து இரு பக்கம் நன்றாக அமுக்கி தட்டவும்.
௧௯) பரோட்டாக்கள் நன்றாக மிருதுவாகி , இதழ் இதழாகிவிடும் .
௨௦ ) பரோட்டா ரெடி , சூடாக உங்கள் விருப்பமான சால்னாவுடன் பரிமாறவும்.
௨௧) நான் விருதுநகர் சால்னாவுடன் பரிமாறினேன் , தாங்கள் மட்டன் நெய் வறுவல் , காய்கறி குருமா அல்லது சிக்கன் குருமாவுடன் பரிமாறலாம் .
  
W3Counter Web Stats

கதம்ப தோசை

கதம்ப தோசை


TO VIEW THE RECIPE IN ENGLISH CLICK HERE
வணக்கம்,
கதம்ப தோசை ,பல சமயம் திடீர்ரென்று இன்று என்ன செய்வது என்று குழம்பி போய் விடுவது உண்டு. அவ்வாறான சமயங்களில் இந்த தோசை நமக்கு கைகொடுக்கும்.தங்களுக்கு தேவையான பயிறு எதை வேண்டுமானாலும் தோசையுடன் சேர்க்கலாம்.
எளிமையான தோசை ரெசிபி இங்கே,

தேவையானவை :
தோசை மாவு :
.அரிசி – 1 கப்.
உளுந்து – 1 / 4 கப்.
.பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்.
து.பருப்பு -2 டேபிள்ஸ்பூன்.
கொள்ளு – 2 டேபிள்ஸ்பூன்.
பாசிப்பயிறு – 2 டேபிள்ஸ்பூன்.
கொ.கடலை – 2 டேபிள்ஸ்பூன்.
ஓட்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்.
ஆளி விதை – 2 டேபிள்ஸ்பூன்.
வெந்தயம் – 1 டிஸ்பூன்.
வரமிளகாய் – 5 .
கருவேப்பில்லை சிறிது.
பெருங்காயம் – 1 / 4 டீஸ்பூன்.
.பொடி – 1 / 4 டீஸ்பூன்.
சீரகம் – 1 டீஸ்பூன்.
உப்பு தேவையான அளவு.
வெங்காயம் – 1 .
எண்ணெய் சிறிது .

செய்முறை :
1 ) அரிசி,வெந்தயம் மற்றும் பருப்பு வகைகள் அனைத்தும் 8 மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும்.


2 ) அத்துடன் வரமிளகாய் , சீரகம் ,கருவேப்பிலை, பெருங்காயம் ,உப்பு அரைத்து மாவுடன் சேர்த்து கலக்கவும்.


3 ) தோசை கல்லை சூடாக்கி , எண்ணெய் தடவி ,தோசை மாவை ஊற்றி ,வெங்காயம் தூவி ,சிறிது எண்ணெய் தெளித்து வேகவிடவும்.


4 ) தோசை வெந்ததும் திருப்பி போட்டு 2 நிமிடம் வேகவிடவும்.

5 ) வெந்ததும் சூடாக பரிமாறவும்.  

நிலக்கடலை சுண்டல்

நிலக்கடலை சுண்டல்


TO VIEW IN ENGLISH :  PLS CLICK

வணக்கம் ,
நிலக்கடலை சுண்டல் ! சிறுவயதில் எங்கள் தோட்டத்தில் நிலக்கடலை விளைவிப்போம்,ஒவ்வொரு முறையும் அறுவடை முடிந்ததும் நிலக்கடலையை தரம் பிரிப்போம்.முதல் தர முத்துக்களை விதை முத்துக்களாகவும் , அடுத்த தர முத்துக்களை எங்கள் உபயோகத்திற்கும்,சந்தைக்கும் அனுப்பிவிடுவோம்.
புதிய நிலக்கடலை சுண்டல் சுவை அருமையாக இருக்கும்.
அந்த சுவையான நிலக்கடலை சுண்டல் செய்முறை உங்களுக்காக ,
சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
நபர்கள் : 3
தேவையானவை :
நிலக்கடலை – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
துருவிய தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையானளவு
தேங்காய் எண்ணெய் – 2தேக்கரண்டி
கடுகு -1/8 தேக்கரண்டி
வெல்லம் -1 தேக்கரண்டி
செய்முறை :
அ) நிலக்கடலையை தண்ணீரில் 5 மணிநேரம் ஊறவைக்கவும்.

ஆ) தண்ணீரை வடித்துவிட்டு , குக்கர்இல் நிலக்கடலை , 2 கப் தண்ணீர் , உப்பு சேர்த்து 5 விசில் விடவும் .விசில் அடங்கியவுடன் தண்ணீர் வடித்து , கடலையை தனியாக வைக்கவும்.

இ) வெங்காயம் , மிளகாய் , கருவேப்பிலை ஆகியவற்றை நறுக்கிவைக்கவும்.

ஈ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , கடுகு , பச்சை மிளகாய் , வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
உ) பின்பு நிலக்கடலையை சேர்த்து , ஒரு முறை கிளறி , உப்பு , தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.
ஊ) அடுப்பில் இருந்து இறக்கி , வெல்லத்துடன் பரிமாறவும்.

குறிப்பு :
அ) வெல்லம் செரிமானத்திற்கு உதவும் , நிலக்கடலை செரிமானத்திற்கு அதிகநேரம் ஆகும் , அதனால் வெல்லத்துடன் உண்டால் எளிதாக செரிமானம் ஆகும்.

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...