Saturday 30 September 2017

அசோகா அல்வா / பாசிப்பருப்பு அல்வா

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
பல வாரங்களுக்கு பிறகு ரெசிபி போஸ்ட் செய்கிறேன் , வேலை பளு காரணமாக முடியவில்லை.
அசோகா அல்வா , மிகவும் எளிதாக, சீக்கிரம் செய்யக்கூடிய அல்வா.
செய்முறை கீழே ,
சமைக்கும் நேரம் : 1 மணிநேரம்
நபர்கள் : 30 நபர்கள்  


தேவையானவை :
பாசிப்பருப்பு - 2 கப்.
சர்க்கரை -3 1/2 கப்
கோதுமை மாவு -1/2 கப் ( தேவையென்றால் )
ஏலம்- 4
முந்திரி - 1மேஜைக்கரண்டி
நெய் (அல்லது ) சமையல் எண்ணெய்- 2 1/2கப்.
கலர் - சில துளிகள் ( தேவையென்றால் )

செய்முறை :
) பாசிப்பருப்பை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, 3 விசில் அல்லது வேகும் வரை விடவும்.
) பின்பு நன்று , குருணையில்லாமல் மசித்துக்கொள்ளவும்.
) பருப்பு சூடாக இருக்கும்பொழுதே , சர்க்கரை சேர்த்து , கரையும் வரை கலக்கவும்.
) அடிப்பாகம் கனமான வாணலியில் நெய் சேர்த்து, கோதுமை மாவை சேர்த்து பச்சை வாடை போய், நறுமணம் வரும் வரை வறுக்கவும்.
) முந்திரி சேர்த்து ஒருநிமிடம் வறுத்து, பருப்பு கலவையை சேர்க்கவும்.
) குறைந்த சூட்டில் , அடிபிடிக்காமல் 2 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.
) ஏலப்பொடி ,கலர் ,சேர்த்து சுமார் 30 - 45 நிமிடம் கிளறிக்கொண்டே இருந்தால் அல்வா நன்றாக வெந்து, எண்ணெய் விடும்.
) அல்வா திரண்டு , பாத்திரத்தில் ஒட்டாமல் , எண்ணெய் வெளியே வரும் பதத்தில் , அடுப்பில் இருந்து இறக்கவும்.
) சூடாகவோ அல்லது பிரிட்ஜ்ல் வைத்தும் சுவைக்கலாம்.
) 10 நாட்கள் வரை கெடாது.

குறிப்பு :
) அடிப்பாகம் கனமான பாத்திரம் அல்லது நான்- ஸ்டிக் பாத்திரம் உபயோகிக்கவும்.
) கலர் மற்றும் கோதுமை சேர்க்காமலும் செய்யலாம் , கோதுமை அல்வா சீக்கிரம் கெட்டியாக உதவும்.
) எண்ணெய் / நெய் கொஞ்சம் தாராளமாக சேர்க்கலாம் , நான் 2 கப் நெய் , 1 / 2 கப் எண்ணெய் சேர்த்தேன்.


2 comments:

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...