Tuesday 16 January 2018

முட்டைகோஸ் பொரியல்

முட்டைகோஸ் பொரியல்



TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
முட்டைகோஸ் பொரியல்! நான் ஏற்கனவே எனது ஆங்கில ப்ளோகில் முட்டைகோஸ் வெள்ளை பொரியல் செய்முறை போஸ்ட் செய்துளேன்.இப்பொழுது முட்டைகோஸ் மஞ்சள் பொரியல் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
முட்டைகோஸ் -2 கப் (நறுக்கியது )
மிளகாய் பொடி -1 தேக்கரண்டி
மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1/2தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 1/2தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
வெங்காயம் -1 (நறுக்கியது).
கடுகு -1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு.
தேங்காய் -1/4 கப் ( துருவியது).
தேங்காய் எண்ணெய் – 1தேக்கரண்டி
செய்முறை :
அ) வாணலியில் 1 கப் தண்ணீர் கொதிக்கவைத்து , அதில் நறுக்கிய முட்டைகோஸ் , மஞ்சள் தூள் , மிளகாய் தூள் சேர்த்து ,வாணலியை மூடிவைத்து கோஸ் வேகும் வரை வேகவிடவும்.
ஆ) ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொறிந்தபின் , கடலை பருப்பு ,உளுந்தம்பருப்பு ,கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

இ) அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கியபின் , துருவிய தேங்காய் சேர்த்து ஒரு முறை வதக்கவும்.
ஈ) வதங்கிய பொருட்களை , முட்டைகோஸுடன் சேர்த்து ஒரு முறை கலக்கி , அடுப்பில் இருந்து இறக்கவும்.
உ) சாதம் , சாம்பாருடன் பரிமாறலாம்.

பேலியோ சுரைக்காய் கூட்டு

பேலியோ சுரைக்காய் கூட்டு

TO VIEW IN ENGLISH : PLS CLICK 

வணக்கம் ,

பேலியோ சுரைக்காய் கூட்டு ! எப்பொழுதும் எனது பிரிட்ஜ்ல் சுரைக்காய் இருக்கும்.இந்த கூட்டை நான் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்துவிடுவேன்.மிக குறைந்த நேரத்தில் ,திருப்திகரமாக சாப்பிடக்கூடிய பேலியோ உணவு.மேலும் சுரைக்காய் எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
எனது விருப்பமான பேலியோ உணவு செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
சுரைக்காய் – 2 கப்.
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி .
உப்பு – தேவையானஅளவு.
தேங்காய் – 1/8 கப்.
வர மிளகாய் -4
தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி.
கருவேப்பிலை – ஒரு கொத்து.
கடுகு – 1/4 தேக்கரண்டி.
செய்முறை :
அ) சுரைக்காயினை தோல் சீவி , விதைகளை நீக்கிவிட்டு , சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஆ) பாத்திரத்தில் உப்பு , மஞ்சள் தூள் , தேவையான அளவு தண்ணீருடன் சுரைக்காய்ஐ வேகவைக்கவும்.

இ) தேங்காய் , வரமிளகாய் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
ஈ) அரைத்த விழுதை வெந்த சுரைக்காயுடன் சேர்த்து , கெட்டியாகும் வரை சிறிது நேரம் வேகவிட்டு , அடுப்பில் இருந்து இறக்கவும்.
உ) ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி , கடுகு சேர்த்து , பொறிந்த பின்னர் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் .

ஊ) தாளித்த பொருட்களை சுரைக்காயுடன் சேர்த்து ஒருமுறை கிளறி , பரிமாறவும்.
எ) நான் டயட்இல் இருப்பதால் ஆம்லெட்யுடன் உண்டேன் , நீங்கள் சாதத்துடன் ,சாம்பார் சாதத்துடன் , தோசை , சப்பாத்திஉடன் பரிமாறலாம்.
ஏ) தேங்காய் எண்ணெய் மட்டுமே இந்த கூட்டிற்கு நன்றாக இருக்கும் , வேறு எண்ணெய் வேண்டாம்.
ஐ ) தேங்காய் விழுது சேர்த்தபிறகு அதிகநேரம் கொதிக்கவைக்கவேண்டாம் , அதனால் தேங்காய்ஐ கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

ராகி சாக்லேட் மால்ட்











ராகி சாக்லேட் மால்ட்


TO VIEW IN ENGLISH :  PLS CLICK

வணக்கம் ,
ராகி சாக்லேட் மால்ட் !! எனது மகள் சிறு குழந்தையாக இருந்த பொழுது ராகி கூல் கொடுத்தேன்.இப்பொழுது அவளுக்கு ராகி பிடிப்பதில்லை அதனால் கோகோ பவுடர் சேர்த்து ராகி சாக்லேட் மால்ட் செய்துவிட்டேன்.
இந்த சுவை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது .தினமும் காலையில் என்னிடம் அவளே கோகோ மில்க் வேண்டும் என்று கேட்கிறாள் .
சுவையான , சத்தான குழந்தைகளுக்கு ஏற்ற ராகி சாக்லேட் மால்ட் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
முளைகட்டிய ராகி பொடி – 1/2 கப் .
கோகோ பவுடர் -1/4 கப்.
ஏலம் – 3
முந்திரி -1 தேக்கரண்டி
பாதாம் – 2 தேக்கரண்டி ( 12 )
பிஸ்தா – 2 தேக்கரண்டி (12)
மால்ட் செய்வதற்கு :
பால் – 1 கப்.
நாட்டு சர்க்கரை – 1 தேக்கரண்டி .
ராகி கோகோ பவுடர் – 1 தேக்கரண்டி .
செய்முறை :

) பாதாம் , முந்திரி , பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியாக குறைந்த சூட்டில் லேசாக வறுத்துவைத்துக்கொள்ளவும்.

) ராகி பொடியையும் குறைந்த சூட்டில் நறுமணம் வரும்வரை வறுத்துவைத்துக்கொள்ளவும்.

) சூடாறியபின்பு ராகி போடி மற்றும் கோகோ பௌடெரை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.நன்றாக கலங்கிய பொடிகளை ஒரு தட்டில் மாற்றவும் .
) பின்பு மிக்ஸியில் வறுத்த பாதாம் , முந்திரி , பிஸ்தா , ஏலம் சேர்த்து பல்ஸ் மோடில் 30 வினாடிகள் சுற்றவும்.இடையில் பொடியாகிவிட்டதா என்று பார்த்து பொடியாகும் வரை சுற்றவும் .

) இப்பொழுது அணைத்து பொடிகளையும் ஒன்றாக கலக்கி ,சலித்து கொள்ளவும் .

) சளித்தபிறகு மீதமிருக்கும் குருணைகளை மீண்டும் மிக்ஸியில் அரைத்து சலிக்கவும்.அனைத்தும் நன்றாக அரைக்கும் வரை மீண்டும் அரைத்து சலிக்கவும் .

) நன்றாக சலித்த பொடியை டப்பாவில் அடைத்து கொள்ளவும் .


ராகி மால்ட் செய்வதற்கு :
) பாலை பொங்கும் வரை கொதிக்கவைக்கவும்.
) 2 தேக்கரண்டி பாலில் 1 தேக்கரண்டி ராகி பொடியை சேர்த்து நன்றாக கரையுமாறு கலக்கவும் .
) ராகி கலக்கிய பாலை ,கொதித்துக்கொண்டிருக்கும் பாலுடன் சேர்த்து ,ஒரு கொதி விடவும்.

) பின்பு அடுப்பில் இருந்து இறக்கி , சர்க்கரை சேர்த்து கலக்கி அருந்தவும்.
குறிப்பு :
) பாதாம் ,முந்திரியை அதிக நேரம் வறுத்தால் எண்ணெய் விட்டு பிசுபிசுப்பாகிவிடும் . அதனால் சூடாகும் வரை வறுத்தால் போதும்.
) அதே போல் அரைக்கும் பொழுதும் பாதாம் முந்திரி அதிகம் அரைத்தால் எண்ணெய் விட்டுவிடும் , உதிரியான பொடி கிடைக்காது அதனால் நிறுத்தி அரைக்கவும் .
) ராகி பொடியை கொதித்துக்கொண்டிருக்கும் பாலில் நேரடியாக சேர்க்காதீர்கள், ராகி கட்டி சேர்ந்துவிடும் .தனியாக சிறிதளவு பாலில் கலந்து பின்பு கொதிக்கவிடுங்கள் .
) நாட்டுசர்கரைக்கு பதில் வெள்ளை சர்க்கரையும் சேர்க்கலாம் .
) நான் முளைகட்டிய ராகி பொடியை சேர்த்தேன் ,நீங்கள் சாதாரண ராகி பொடியையும் சேர்க்கலாம்.

ஆந்திரா பருப்பு பொடி

ஆந்திரா பருப்பு பொடி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
ஆந்திரா பருப்பு பொடி !! நாங்கள் சென்னையிலிருந்த பொழுது அங்கே உள்ள ஒரு ஆந்திர மெஸ்ஸில் பருப்பு பொடி அருணுக்கு மிகவும் பிடிக்கும்.நான் பல முறை முயற்சி செய்தும் அந்த சுவை எனக்கு கிடைக்கவில்லை .கடைசியாக இந்த ரெசிபி சரியாக வந்தது , அதே சுவை என்று கணவர் ஒப்புக்கொண்டார்(இறுதியாக!!) .பருப்புப்பொடியை நான் இரண்டு வாரங்களுக்கு மேல் வைப்பதில்லை , பருப்புப்பொடி மாதத்திற்கு வைத்தாலும் கெட்டுப்போகாது ஆனால் எனக்கு அவ்வப்போது அரைக்கும் பருப்பு பொடியின் மணம் பிடிக்கும் என்பதால் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அரைத்துவைத்துக்கொள்வேன்.
சுவையான ஆந்திர பருப்பு பொடி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
துவரம் பருப்பு – 3/4 கப்.
பொட்டுக்கடலை / உடைத்தக்கடலை – 1/2 கப்
பூண்டு – 5 பல்
சீரகம் -1 தேக்கரண்டி .
வரமிளகாய் – 6
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி .
கருவேப்பில்லை ஒரு கொத்து
உப்பு தேவையானஅளவு
நெய் – 1/2 தேக்கரண்டி.
செய்முறை :

) எண்ணெய் சேர்க்காமல் வாணலியில் பருப்பு , கடலை , பூண்டு ஆகியவற்றை தனித்தனியாக குறைந்த சூட்டில் பொன்னிறமாக ,மணம் வரும்வரை வறுத்துவைத்துக்கொள்ளவும்.
) பின்பு சீரகம் மற்றும் கருவேப்பில்லை ஒன்றாக பொன்னிறமாக வறுத்துவைத்துக்கொள்ளவும்.

) வாணலியில் நெய் சேர்த்து வரமிளகாய்ஐ நெய்யில் வறுத்து , அடுப்பில் இருந்து இறக்கிவிடவும் .

) மேலே வறுத்த அனைத்து பொருட்கள் மற்றும் உப்பு , பொருங்காயம் அனைத்தையும் வரமிளகாயுடன் சேர்த்து கலக்கி ஆறவிடவும்.

) அறியபின்பு சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும் .

) சூடான சாதத்திற்கு , நெய்யுடன் பரிமாற சுவையாக இருக்கும் . 
குறிப்பு :
) எப்பொழுதும் குறைத்த சூட்டில் வறுக்கவும் , இதனால் சுவை கூடுவதுடன் , சமமாக வறுக்கஇயலும்.
) நெய்க்கு பதிலாக வெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம்.

உடனடி அடை மிஃஸ்

உடனடி அடை மிஃஸ்

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
நான் கடைகளில் உடனடி தோசை மிஃஸ் பார்த்துளேன் ஆனால் அதில் மாவு கெட்டுப்போகாமல் இருக்க அவர்கள் பதப்படுத்தும் ரசாயனம் சேர்த்திருப்பதால் நான் வாங்குவதில்லை.
அதனால் நான் இன்ஸ்டன்ட் பொடிகளை வீட்டிலையே செய்ய முடிவெடுத்தேன்.
முதலில் அடை தோசை பொடி செய்தேன்.சுலபமாக ,மேலும் காலை நேர சமையலுக்கு எனக்கு டென்ஷன் இல்லை.
சுலபமான அடை மாவு பொடி செய்முறை உங்களுக்காக ,

தேவையானவை :
பச்சரிசி – 1 / 2 கப்.
இட்லி அரிசி – 1 / 2 கப்.
துவரம் பருப்பு – 1/4கப்.
பாசிபயிறு -2 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு -2 மேஜைக்கரண்டி
வெந்தயம் – 1தேக்கரண்டி.
பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி .
வரமிளகாய் – 5
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி .
அவல் / போக – 2 தேக்கரண்டி .
ஓட்ஸ் -2 தேக்கரண்டி .
உப்பு – 1தேக்கரண்டி.
தோசை செய்வதற்கு :
அடை மாவு – 4 மேஜைக்கரண்டி
தயிர் – 1 மேஜைக்கரண்டி
தண்ணீர் – தேவையானஅளவு
வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது ).
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி .

செய்முறை :
அ) அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி , நிழலில் ஒரு மணிநேரம் காயவிடுங்கள்.
ஆ) பின்னர் காய்ந்த பொருட்களை வாணலியில் வறுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

இ) ஓட்ஸ், அவல் , சீரகம் , வரமிளகாய் ஆகியவற்றை தனி தனியாக வறுத்து அனைத்தையும் ஆறவைக்கவும் .

ஈ) மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து பொருட்களையும் மஞ்சள் தூள் , பெருங்காயம் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும் .
உ) உப்பு சேர்த்து கலக்கி , கனமான ஜாடிகளில் அடைத்து தேவைக்கேற்ப உபோயோகப்படுத்திக்கொள்ளவும் .

தோசை செய்வதற்கு :
அ) மாவுடன் , தயிர் , தண்ணீர் சேர்த்து கலக்கி 30 நிமிடம் வைக்கவும் .
ஆ) தோசை கல்லை சூடாக்கி , எண்ணெய் தேய்த்து சிறிய வட்டங்களாக மாவை ஊற்றவும் .

இ) வெங்காயம் தூவி , எண்ணெய் தெளித்து ,பொன்னிறமாக வேகவிடவும் .

ஈ ) மறுபக்கம் திருப்பி சிறிது நேரம் வெந்தபிறகு , சூடாக பரிமாறவும் .

குறிப்பு :
அ) மாவை கரகரப்பாக அரைத்து கொள்ளவும் .
ஆ) அரிசி மற்றும் பருப்பை கழுவாமலும் அரைக்கலாம் ஆனால் நான் நன்றாக கழுவிவிடுவது வழக்கம்.
இ) எனக்கு அடை தோசையின் பச்சை வாடை பிடிக்காது அதனால் தயிர் சேர்த்தேன் , நீங்கள் வெறும் தண்ணீர் மட்டும் சேர்த்து கலக்கலாம் .
ஈ) மாவை தண்ணீருடன் இரவே கலக்கி பிரிட்ஜ்ல் வைத்துக்கொள்ளலாம்.
உ) உங்களுக்கு பிடித்தமான பருப்புகளை சேர்த்துக்கொள்ளலாம் .

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...