ராகி சாக்லேட் மால்ட்
TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,ராகி சாக்லேட் மால்ட் !! எனது மகள் சிறு குழந்தையாக இருந்த பொழுது ராகி கூல் கொடுத்தேன்.இப்பொழுது அவளுக்கு ராகி பிடிப்பதில்லை அதனால் கோகோ பவுடர் சேர்த்து ராகி சாக்லேட் மால்ட் செய்துவிட்டேன்.
இந்த சுவை அவளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது .தினமும் காலையில் என்னிடம் அவளே கோகோ மில்க் வேண்டும் என்று கேட்கிறாள் .
சுவையான , சத்தான குழந்தைகளுக்கு ஏற்ற ராகி சாக்லேட் மால்ட் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
முளைகட்டிய ராகி பொடி – 1/2 கப் .
கோகோ பவுடர் -1/4 கப்.
ஏலம் – 3
முந்திரி -1 தேக்கரண்டி
பாதாம் – 2 தேக்கரண்டி ( 12 )
பிஸ்தா – 2 தேக்கரண்டி (12)
மால்ட் செய்வதற்கு :
பால் – 1 கப்.
நாட்டு சர்க்கரை – 1 தேக்கரண்டி .
ராகி கோகோ பவுடர் – 1 தேக்கரண்டி .
செய்முறை :
அ) பாதாம் , முந்திரி , பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியாக குறைந்த சூட்டில் லேசாக வறுத்துவைத்துக்கொள்ளவும்.
இ) சூடாறியபின்பு ராகி போடி மற்றும் கோகோ பௌடெரை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.நன்றாக கலங்கிய பொடிகளை ஒரு தட்டில் மாற்றவும் .
உ) இப்பொழுது அணைத்து பொடிகளையும் ஒன்றாக கலக்கி ,சலித்து கொள்ளவும் .
ஊ) சளித்தபிறகு மீதமிருக்கும் குருணைகளை மீண்டும் மிக்ஸியில் அரைத்து சலிக்கவும்.அனைத்தும் நன்றாக அரைக்கும் வரை மீண்டும் அரைத்து சலிக்கவும் .
எ) நன்றாக சலித்த பொடியை டப்பாவில் அடைத்து கொள்ளவும் .

ராகி மால்ட் செய்வதற்கு :
அ) பாலை பொங்கும் வரை கொதிக்கவைக்கவும்.
ஆ) 2 தேக்கரண்டி பாலில் 1 தேக்கரண்டி ராகி பொடியை சேர்த்து நன்றாக கரையுமாறு கலக்கவும் .
இ) ராகி கலக்கிய பாலை ,கொதித்துக்கொண்டிருக்கும் பாலுடன் சேர்த்து ,ஒரு கொதி விடவும்.
ஈ) பின்பு அடுப்பில் இருந்து இறக்கி , சர்க்கரை சேர்த்து கலக்கி அருந்தவும்.
குறிப்பு :
அ) பாதாம் ,முந்திரியை அதிக நேரம் வறுத்தால் எண்ணெய் விட்டு பிசுபிசுப்பாகிவிடும் . அதனால் சூடாகும் வரை வறுத்தால் போதும்.
ஆ) அதே போல் அரைக்கும் பொழுதும் பாதாம் முந்திரி அதிகம் அரைத்தால் எண்ணெய் விட்டுவிடும் , உதிரியான பொடி கிடைக்காது அதனால் நிறுத்தி அரைக்கவும் .
இ) ராகி பொடியை கொதித்துக்கொண்டிருக்கும் பாலில் நேரடியாக சேர்க்காதீர்கள், ராகி கட்டி சேர்ந்துவிடும் .தனியாக சிறிதளவு பாலில் கலந்து பின்பு கொதிக்கவிடுங்கள் .
ஈ) நாட்டுசர்கரைக்கு பதில் வெள்ளை சர்க்கரையும் சேர்க்கலாம் .
உ) நான் முளைகட்டிய ராகி பொடியை சேர்த்தேன் ,நீங்கள் சாதாரண ராகி பொடியையும் சேர்க்கலாம்.

No comments:
Post a Comment