Showing posts with label MUTTON KHEEMA MASALA. Show all posts
Showing posts with label MUTTON KHEEMA MASALA. Show all posts

Wednesday, 1 November 2017

மதுரை கறிவடை

TO VIEW IN ENGLISH : PLS CLICK

மதுரை கறிவடை

Posted in : DRY SIDEDISHES, SIDEDISH RECIPES, SNACKS on by : Saranya Arun Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
மதுரை கறிவடை! எனது அப்பாவுக்கு இந்த கறிவடை மிகவும் பிடிக்கும்.
எனது  பாட்டி கறிவடையை அருமையாக செய்வார்கள் , அவர்கள் ஆட்டுக்கல்லில் கறியை கையால் ஆட்டுவார்கள் .இவ்வாறு கையால் ஆட்டுவதனால் சுவை அருமையாக இருக்கும்,ஆனால் இப்பொழுது பாரம்பரிய முறைப்படி செய்வது என்பது முடியாது என்பதால் நான் சுலபமான வழியில் செய்துவிடுவேன் .
சுவையான மட்டன் கறிவடை செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
மட்டன் கொத்து கறி – 500 கிராம்.
முட்டை – 1
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவைக்கேற்ப
சோம்பு – 1தேக்கரண்டி
பட்டை 1”-2துண்டு
கிராம்பு – 3
கசகசா – 1/2தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
மல்லியிலை – ஒரு கைப்பிடி
இஞ்சி – 1துண்டு
பூண்டு – 4பல்
தேங்காய் – 1/8கப்
சின்ன வெங்காயம் – 20
வறுத்த கடலை -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4தேக்கரண்டி
எண்ணெய் – பொறிப்பதற்கு
செய்முறை :
அ) மட்டன் கறியை நன்றாக கழுவி , தண்ணீரை முழுவதுமாக வடித்துவிடவும்.வெங்காயம்,கருவேப்பிலை , மல்லி ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஆ) வாணலியில் பட்டை , கிராம்பு ,கசகசா , சோம்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
இ) வறுத்த பொருள்களோடு , இஞ்சி ,பூண்டு , பச்சை மிளகாய் ,கடலை ,தேங்காய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்துக்கொள்ளவும்.
ஈ) ஒரு பாத்திரத்தில் கொத்து கறி , அரைத்த விழுது , வெங்காயம் , மல்லி , கருவேப்பிலை ,உப்பு ,முட்டை,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
உ) சிறு உருண்டைகளாக பிடித்து , எண்ணையில் பொறித்தெடுத்து பரிமாறவும்.

பேலியோ டயட் :
அ) வறுத்த கடலைக்கு பதில் பாதாம் பவுடர் சேர்க்கவும்.
ஆ) எண்ணெய் பொரித்தெடுப்பதற்கு பதில் பணியார கல்லை சூடாக்கி சிறிது நெய் தடவி ,வடை உருண்டைகளை அதில் வைத்து பொறித்தெடுக்கவும்.

இ) எண்ணையில் பொரித்தெடுப்பதற்கு சிறிது நேரம் பிடிக்கும் ஆனால் பணியார கல்லில் செய்வது 15 நிமிடங்கள் ஆகும் ஆனாலும் மிகவும் சத்தானது.
ஈ) பணியார கல்லில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு வடையை திருப்பி விட்டு , பொன்னிறமாகும் வரை குறைத்த சூட்டில் பொறித்தெடுக்கவும்.

மட்டன் கீமா கட்லெட் மசாலா

TO VIEW IN ENGLISH : PLS CLICK

மட்டன் கீமா கட்லெட் மசாலா


வணக்கம் ,
மட்டன் கீமா கட்லெட் மசாலா !! மட்டனில் செய்வதற்கு நிறைய ரெசிபிக்கள் உள்ளன.நான் ஒவ்வொரு முறையும் எதாவது புதியதாக முயற்சி செய்வது வழக்கம்.இம்முறை கட்லெட் மசாலா செய்தேன்.
மிகவும் எளிதாக , மற்றும் புதுமையான மட்டன் கட்லெட் மசாலா செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
மசாலா :
வெங்காயம் – 1 .
இஞ்சி பூண்டு விழுது – 1 / 2 தேக்கரண்டி .
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி .
கரம் மசாலா – 1 / 2 தேக்கரண்டி .
மஞ்சள் பொடி – 1/ 4 தேக்கரண்டி
கொத்தமல்லி பொடி – 1 / 2 தேக்கரண்டி .
மிளகு பொடி – 1 / 4 தேக்கரண்டி .
தக்காளி – 3 .
உப்பு – தேவையானஅளவு.
கொத்தமல்லி இலை – சிறிதளவு .
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி .
தேங்காய் எண்ணெய் / ஆயில் – 1 தேக்கரண்டி .
கட்லட்டிற்காக :
மட்டன் கொத்துக்கறி -1 / 2 கிலோகிராம் .
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி .
கரம் மசாலா – 1 / 2 தேக்கரண்டி .
உப்பு – சிறிதளவு .
முட்டை – 1 .
தேங்காய் எண்ணெய் / ஆயில் – 1 தேக்கரண்டி .
அரைப்பதற்கு :
புதினா இலை – ஒரு கையளவு .
பாதாம் (அ) முந்திரி – 3 .
இஞ்சி – 1 / 2 ” – 1 .
பூண்டு – 5 பல்.
பச்சை மிளகாய் – 3 .
செய்முறை :
அ) புதினா , பாதாம் (அ ) முந்திரி , இஞ்சி , பூண்டு , பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும்.
ஆ ) கொட்டுக்கறியை சுத்தம் செய்து , உப்பு , அரைத்த விழுது , மிளகாய் பொடி , கரம் மசாலா ,முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இ) தோசை கல்லை சூடாக்கி சிறிது எண்ணெய் தடவி , கறியை சிறு தடைகளாக தட்டி கல்லில் வைக்கவும்.

ஈ) மேலே எண்ணெய் தெளித்து , மூடிவைத்து 5 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைக்கவும்.

உ ) பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

ஊ ) இதே போல் இருபக்கமும் திருப்பி பொன்னிறமாகும் வரை வேகவிடவும்.


மசாலா :
அ) வாணலியில் எண்ணெய் சேர்த்து சீரகம் , நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
ஆ ) அத்துடன் இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் பொடி , மல்லி பொடி , கரம் மசாலா ,மஞ்சள் பொடி சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
இ ) பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
ஈ ) அத்துடன் 1 / 4 கப் தண்ணீர் சேர்த்து ,உப்பு ,மல்லி இலை சேர்த்து சிறிது நேரம் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

உ ) இறுதியாக மட்டன் கட்லட்டை சேர்த்து , நிதானமாக கிளறி , பரிமாறவும்.

ஊ ) நான் மட்டன் பிரியாணியுடன் பரிமாறினேன்.
குறிப்பு :
அ ) கட்லட்டை தனியாக சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
ஆ ) தக்காளியை அரைத்தும் சேர்க்கலாம்.

W3Counter Web Stats

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...