Friday 27 October 2017

இஞ்சி பூண்டு தொக்கு

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
இஞ்சி பூண்டு  தொக்கு ! இந்த ரெசிபியை Betterbutter குழுமத்தில் பாலா திரு அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். மிகவும் எளிமையாக , ஜீரணத்திற்கு மிகவும் நன்மையான தொக்கு.
ஆரோகியமான இஞ்சி பூண்டு தொக்கு செய்முறை உங்களுக்காக ,
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
நபர்கள் : 3 

தேவையானவை :
இஞ்சி 1”- 7 துண்டு
பூண்டு - 1/8 கப்
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
புளி- எலுமிச்சை அளவு
வெல்லம் - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையானளவு
நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெய்/ நெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1தேக்கரண்டி .

செய்முறை :
) இஞ்சி , பூண்டு , புளி , மஞ்சள் , மிளகாய் , உப்பு அகையவற்றை சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , கடுகு , அரைத்த விழுது , வெல்லம் சேர்த்து , எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கி இறக்கவும்.
) சூடான இட்லி,தோசை, சப்பாத்திஉடன் பரிமாற நன்றாக இருக்கும் .
) பிரிட்ஜ்ல் வைத்து ஒரு வாரம் வரை உபோயோகப்படுத்தலாம்.


Tuesday 24 October 2017

மட்டன் நெய் வறுவல்

மட்டன் நெய் வறுவல்


TO VIEW RECIPE IN ENGLISH : CLICK HERE
வணக்கம்,
மட்டன் நெய் வறுவல் !! காரசாரமான, நெய் நறுமணத்துடனான ,சுவையான ஆட்டு வறுவல்..இந்த வறுவல் செய்தவுடன் சமையல் அறை முழுவதும் சிறந்த நாவை சுண்டியிழுக்கும் நறுமணம் பரவியது.சப்பாத்தி மற்றும் தோசையுடன் சுவைக்க அருமையாக இருந்தது.
சுவையான மட்டன் நெய் வறுவல் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
ஆட்டுக்கறி / மட்டன் – 1 கிலோ.
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்.
மஞ்சள் பொடி – 1 / 2 டீஸ்பூன்.
மிளகாய் பொடி – 2 டீஸ்பூன்.
தயிர் – 3 டீஸ்பூன்.
உப்பு – தேவைக்கேற்ப.
கருவேப்பில்லை – ஒரு கொத்து .
மல்லி இலை – ஒரு கொத்து .
நெய் – 5 டீஸ்பூன்.
வறுத்து அரைக்க :
மிளகு – 1 டீஸ்பூன்.
முழு மல்லி – 1 டீஸ்பூன்.
சோம்பு – 1 டீஸ்பூன்.
சீரகம் – 2 டீஸ்பூன்.
பட்டை – 1 ” துண்டு .
கிராம்பு – 4 .
நட்சத்திர சோம்பு – 1 .
இஞ்சி – 1 ” துண்டு .
பூண்டு – 4 பல்.
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்.
செய்முறை :
௧) வாணலியில் மிளகு , சீரகம் , சோம்பு ,பட்டை , கிராம்பு ,நட்சத்திர சோம்பு , முழு மல்லி ஆகியவற்றை நறுமணம் வரும்வரை வறுத்து ஆறவிடவும்.
௨) அத்துடன் இஞ்சி , பூண்டு , எலுமிச்சை சாறு சேர்த்து ,தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
௩) குக்கர்இல் நெய்யை சூடாக்கி , இஞ்சி ,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி , மட்டன் ,மஞ்சள் பொடி,சிறிது உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
௪) குக்கர்ஐ மூடி 5 விசில் அல்லது மட்டன் வேகும் வரை விடவும் .
௫) மட்டன் வெந்தவுடன் மட்டன் தண்ணீரை தனியான எடுத்துவைக்கவும்.
௬) வாணலில் நெய் , அரைத்த மசாலா ,மிளகாய் பொடி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
௭) பின்பு தயிர் சேர்த்து 1 நிமிடம் மசாலா நன்றாக சுருள வதக்கவும்.
௮) அதனுடன் வேகவைத்த மட்டன் சேர்த்து நன்றாக , ஈர பதம் வற்றும் வரை வதக்கி கருவேப்பிலை , மல்லி தூவி இறக்கவும்.
௯) சுவையான , சூடான மட்டன் வறுவல் தயார்.



 

Monday 23 October 2017

பச்சை மிளகாய் அல்வா

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
கொச்சினில் இருக்கும் எனது சகோதரி இந்த அல்வாவை எங்களுக்கு வாங்கிவந்தார். பெயரே வித்யாசமாக இருந்தது , சுவையும் தான்.
உடனே செய்துபார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து , ஒரு முயற்சிக்கு பிறகு , கடையில் வாங்கிய அல்வாவை விட அருமையாக இருந்தது.

சுவையான , வித்யாசமான பச்சை மிளகாய் அல்வா செய்முறை உங்களுக்காக ,
சமையல் நேரம் : 1 மணிநேரம்
நபர்கள் : 5

தேவையானவை :
சோள மாவு - 1/4 கப்.
மைதா -1/4 கப்
பச்சை மிளகாய் - 4
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் -5 மேஜைக்கரண்டி
ஏலக்காய்- 3 (1/4 தேக்கரண்டி )
பச்சை கலர் - சிறிது ( தேவையென்றால் ).

செய்முறை :
) பச்சை மிளகாயினை கீறி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும்.
) வாணலியில் 1/4 கப் தண்ணீர் , 1 தேக்கரண்டி சர்க்கரை , பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
) தண்ணீரை வடித்துவிட்டு , மீண்டும் மிளகாயினை தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து வடிக்கவும் . இவ்வாறு 3 முதல் 4 முறை , மிளகாய் நிறம் மாறும்வரை கொதிக்கவைத்து வடிக்கவும் .
) மிளகாயினை சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
) ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு , மிளகாய் விழுது , கலர் பொடி( தேவையென்றால் ) , 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
) வாணலிலில் நெய் சூடாக்கி , அதில் மேலே கூறிய மாவு கலவையை சேர்த்து , மிதமான சூட்டில் வேகவிடவும்.
) அல்வா கெட்டியாகும் பொழுது , முந்திரி , ஏலப்பொடி சேர்த்து , நன்றாக எண்ணெய் திரண்டு வரும்வரை கிளறவும்.
) அல்வா வாணலியில் ஒட்டாமல் , திரண்டு வரும்பொழுது , நெய் தடவிய தட்டில் மாற்றி ஆறவிடவும்.
) ஆறியபின் வேண்டுமளவு வெட்டி பரிமாறவும்.
குறிப்பு :
) பச்சைமிளகாய் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
) அல்வாவின் நிறம் பச்சைமிளகாயின் நிறத்திற்கேற்றாற்போல் இருக்கும் , அதனால் நிறம் சேர்த்துக்கொள்ளலாம்.
) நெய் அளவை குறைக்காதீர்கள்.

Friday 20 October 2017

இனிப்பு போண்டா

TO VIEW IN ENGLISH : PLS CLICK  HERE
வணக்கம் ,
இந்த இனிப்பு போண்டாவை ஆயுத பூஜா அன்று செய்தேன்.வேலை பளுவின் காரணமாக ரெசிபி போஸ்ட் செய்ய முடியவில்லை.
எளிதான , சத்தான இனிப்பு போண்டா செய்முறை கீழே,
தேவையானவை :
பச்சரிசி - 1 கப்
உளுந்து பருப்பு -1/2 கப்
சமையல் சோடா- ஒரு சிட்டிகை
உப்பு -ஒரு சிட்டிகை
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 3/4 கப்
எலுமிச்சை சாறு - 3 துளி
எண்ணெய்- பொரிப்பதற்கு
சிவப்பு கலர் -ஒரு சிட்டிகை

செய்முறை :
அ) அரிசி மற்றும் உளுந்து பருப்பை 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஆ) ஊறவைத்த அரிசி , பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்துக்கொள்ளவும்.
இ) அரைத்த மாவுடன், உப்பு, சோடா, கலர் நன்றாக கலக்கவும்.
ஈ) ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கலங்கும் வரை அதிக சூட்டில் கொதிக்கவிடவும்.
உ) நெருப்பை குறைந்த சூட்டில் வைத்து ஒரு கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும்.
ஊ) அடுப்பை அணைத்துவிட்டு , எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கிவிடுங்கள்.
எ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , மாவு கலவையை சிறு உருண்டைகளாக எண்ணையில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஏ) எண்ணெய் வடித்துவிட்டு சர்க்கரை பாகில் ஊறவைக்கவும்.
ஐ) ஒரு நாள் ஊறிய பின்பு ,வேறு பாத்திரத்தில் மாற்றி , ஒரு வாரம் வரை சுவைக்கலாம்.












































மட்டன் கிரேவ்ய்

TO VIEW IN ENGLISH PLS CLICK HERE.

மட்டன் கிரேவ்ய்

வணக்கம் ,
இன்றைய நமது ரெசிபி மிகவும் எளிமையான மட்டன் கிரேவ்ய்.இந்த ரெசிபி எனக்கு எனது ஹாஸ்டல் குக் கலா அக்கா  கற்றுக்கொடுத்தது ஆகும்.அவரது சமையல் எப்போதும் எளிமையாகவும் ,மிகவும் சுவையாகமும் இருக்கும் .
எனது மிகவும் விருப்பமான சிம்பிள் மட்டன் கிரேவ்ய் ரெசிபி உங்களுக்கு ,

தேவையானவை:
மட்டன் / ஆடு இறைச்சி – 1 /2 கேஜி.
பெரிய வெங்காயம் – 2 .
தக்காளி – 2 .
கருவேப்பில்லை – சிறிது
மஞ்சள் போடி – 1 / 4 தேக்கரண்டி
மிளகாய் போடி – 2 தேக்கரண்டி
மல்லி போடி – 2 தேக்கரண்டி
சிக்கன் மசாலா (அ) மட்டன் மசாலா – 1 தேக்கரண்டி.
உப்பு – தேவையானவை
எண்ணெய் – 1 தேக்கரண்டி.
அரைப்பதற்கு :
சோம்பு – 1  தேக்கரண்டி.
சீரகம் – 1 தேக்கரண்டி.
இஞ்சி – 1 ” – 1 .
பூண்டு – 6 பல் .
பட்டை – 1 .
கிராம்பு – 1 .
காச காச – 1 / 2 தேக்கரண்டி.
தேங்காய் – 3  தேக்கரண்டி .
செய்முறை :
௧) அரைக்கும் பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

௨ ) குக்கர்இல் எண்ணெய் விட்டு ,நறுக்கிய  வெங்காயம்  , கருவேப்பிலை போட்டு , பொன்னிறமாக வதக்கவும்.

௩) பிறகு நறுக்கிய தக்காளி இட்டு நன்றாக வதக்கவும்.தொடர்ந்து மஞ்சள் போடி , மிளகாய் போடி , மல்லி போடி,சிக்கன் (அ) மட்டன் மசாலா  சேர்த்து ஒரு நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும்.

௪) சுத்தம் செய்த மட்டன்,உப்பு சேர்த்து , மட்டன் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி , அரைத்த மசாலாவை சேர்த்து , 5 விசில் விடவும்.

௫) விசில் அடங்கியவுடன் குக்கர் ஐ திறந்து ,கொத்துமல்லி தலை தூவி இறக்கவும்.

௬) தேவை என்றால் தங்களுக்கு தேவையான பதத்திற்கு சுண்டவைத்து கொள்ளவும்.

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...