Tuesday 16 January 2018

உடனடி அடை மிஃஸ்

உடனடி அடை மிஃஸ்

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
நான் கடைகளில் உடனடி தோசை மிஃஸ் பார்த்துளேன் ஆனால் அதில் மாவு கெட்டுப்போகாமல் இருக்க அவர்கள் பதப்படுத்தும் ரசாயனம் சேர்த்திருப்பதால் நான் வாங்குவதில்லை.
அதனால் நான் இன்ஸ்டன்ட் பொடிகளை வீட்டிலையே செய்ய முடிவெடுத்தேன்.
முதலில் அடை தோசை பொடி செய்தேன்.சுலபமாக ,மேலும் காலை நேர சமையலுக்கு எனக்கு டென்ஷன் இல்லை.
சுலபமான அடை மாவு பொடி செய்முறை உங்களுக்காக ,

தேவையானவை :
பச்சரிசி – 1 / 2 கப்.
இட்லி அரிசி – 1 / 2 கப்.
துவரம் பருப்பு – 1/4கப்.
பாசிபயிறு -2 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு -2 மேஜைக்கரண்டி
வெந்தயம் – 1தேக்கரண்டி.
பெருங்காயம் – 1/8 தேக்கரண்டி .
வரமிளகாய் – 5
சீரகம் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி .
அவல் / போக – 2 தேக்கரண்டி .
ஓட்ஸ் -2 தேக்கரண்டி .
உப்பு – 1தேக்கரண்டி.
தோசை செய்வதற்கு :
அடை மாவு – 4 மேஜைக்கரண்டி
தயிர் – 1 மேஜைக்கரண்டி
தண்ணீர் – தேவையானஅளவு
வெங்காயம் – 1 ( பொடியாக நறுக்கியது ).
எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி .

செய்முறை :
அ) அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி , நிழலில் ஒரு மணிநேரம் காயவிடுங்கள்.
ஆ) பின்னர் காய்ந்த பொருட்களை வாணலியில் வறுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

இ) ஓட்ஸ், அவல் , சீரகம் , வரமிளகாய் ஆகியவற்றை தனி தனியாக வறுத்து அனைத்தையும் ஆறவைக்கவும் .

ஈ) மேலே குறிப்பிட்டுள்ள அணைத்து பொருட்களையும் மஞ்சள் தூள் , பெருங்காயம் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்து கொள்ளவும் .
உ) உப்பு சேர்த்து கலக்கி , கனமான ஜாடிகளில் அடைத்து தேவைக்கேற்ப உபோயோகப்படுத்திக்கொள்ளவும் .

தோசை செய்வதற்கு :
அ) மாவுடன் , தயிர் , தண்ணீர் சேர்த்து கலக்கி 30 நிமிடம் வைக்கவும் .
ஆ) தோசை கல்லை சூடாக்கி , எண்ணெய் தேய்த்து சிறிய வட்டங்களாக மாவை ஊற்றவும் .

இ) வெங்காயம் தூவி , எண்ணெய் தெளித்து ,பொன்னிறமாக வேகவிடவும் .

ஈ ) மறுபக்கம் திருப்பி சிறிது நேரம் வெந்தபிறகு , சூடாக பரிமாறவும் .

குறிப்பு :
அ) மாவை கரகரப்பாக அரைத்து கொள்ளவும் .
ஆ) அரிசி மற்றும் பருப்பை கழுவாமலும் அரைக்கலாம் ஆனால் நான் நன்றாக கழுவிவிடுவது வழக்கம்.
இ) எனக்கு அடை தோசையின் பச்சை வாடை பிடிக்காது அதனால் தயிர் சேர்த்தேன் , நீங்கள் வெறும் தண்ணீர் மட்டும் சேர்த்து கலக்கலாம் .
ஈ) மாவை தண்ணீருடன் இரவே கலக்கி பிரிட்ஜ்ல் வைத்துக்கொள்ளலாம்.
உ) உங்களுக்கு பிடித்தமான பருப்புகளை சேர்த்துக்கொள்ளலாம் .

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...