கேரளா செமீன் ஆச்சர் ( கேரளா இறால் ஊறுகாய் )
TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,நாங்கள் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு கேரளா வந்துள்ளோம் .
நேற்று ஆலப்புழா சென்று வந்தோம்.மிகவும் அருமையான கோடை விடுமுறை :)) .
கேரளாவில் இருப்பதால் இன்று ஒரு கேரளா டிஷ் உங்களுக்காக .
இன்று நான் கேரளா செமீன் ஆச்சர் ( கேரளா இறால் ஊறுகாய் ) குக்கர் செய்முறையில் செய்தேன் ( OPOS ) .
நீங்கள் OPOS முறையில் சமைப்பதற்கு முன்பு OPOS பற்றி கூகிள் சேர்ச்சில் கற்று பின்பு செய்யவும் . OPOS மிகவும் எளிதான மற்றும் மிகவும் சுவையான சமையல் செய்முறை.
OPOS செய்முறை உருவாக்கியவர் : திரு .ராமகிருஷ்ணன்.
அளவு : 3 நபர்களுக்கு பரிமாறலாம்.
தேவையானவை :
இறால் – 500 கிராம் .
உப்பு – 2 தேக்கரண்டி .
மிளகாய் பொடி -2 தேக்கரண்டி .
வெந்தய பொடி -1/4 தேக்கரண்டி .
மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி .
பெருங்காயப்பொடி -1/4 தேக்கரண்டி .
தேங்காய்எண்ணெய் -1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது -6 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 1/8 கப்
செய்முறை :
அ) இறாலை நன்றாக கழுவி ,நடுவில் இருக்கும் பச்சை நிற நரம்பை எடுத்துவிடவும்.
ஆ) அத்துடன் மிளகாய் பொடி , மஞ்சள் பொடி , வெந்தய பொடி , பெருங்காயம் , உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
இ) 2 லிட்டர் குக்கர்இல் எண்ணெய் சேர்த்து , இஞ்சி பூண்டு விழுது , இறால் ,புளி கரைசல் சேர்த்து(கலக்கவேண்டாம்) 2 விசில் விடவும் .
ஈ) விசில் அடைகியவுடன் , குக்கர்ஐ திறந்து கலந்து பரிமாறவும் .
குறிப்பு :
அ ) நான் பேலியோ டயட்இல் இருப்பதால் தேங்காய் எண்ணெய் சேர்த்துள்ளேன் ,நீங்கள் நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம் .
ஆ) புளிக்கரைசலை இறால் வெந்தவுடன் சேர்க்கலாம் , எனக்கு புளி வாடை பிடிக்காததால் இறால் வேகும் பொழுதே சேர்த்து விட்டேன்.
இ) OPOS ரெசிபி கார்டை கீழேயே இணைத்துள்ளேன் .
No comments:
Post a Comment