Showing posts with label கார பூரி. Show all posts
Showing posts with label கார பூரி. Show all posts

Friday, 5 January 2018

கார பூரி

கார பூரி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
எப்பொழுதும் சாதாரண பூரி செய்யும் நமக்கு என்றாவது ஒரு நாள் அந்த பூரியில் எதாவது வித்யாசமாக செய்யலாம் என்று தோன்றும்.
எனக்கு அவ்வாறு தோன்றிய பொழுது இந்த ரெசிபி நினைவில் வந்தது .
இந்த ரெசிபி எனது சகோதரி ஹைதெராபாத்தில் வசித்தபொழுது அவரது தோழி அவருக்கு கற்றுத்தந்த ரெசிபியாகும் .எனக்கு ஒரு முறை சொல்லியிருக்கிறார் அனால் நான் இப்பொழுது தான் செய்தேன் .
சாதாரண பூரியை விடவும் இந்த காரபூரி சுவையாகவும் , வித்தியாசமாகவும் இருந்தது .
காரப்பூரி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
கோதுமை மாவு – 1 1 / 2 கப்.
பெருங்காயம் – 1 / 8 தேக்கரண்டி .
மிளகு – 1 / 2 தேக்கரண்டி.
சீரகம் – 1 தேக்கரண்டி.
வரமிளகாய் – 2 .
கருவேப்பில்லை – சிறிது .
உப்பு – 1 தேக்கரண்டி.
தண்ணீர் – 3 / 4 கப்.
எண்ணெய் – பொரித்து எடுக்க.
செய்முறை :
௧) மிளகு , சீரகம் , மிளகாய் அனைத்தையும் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
௨) ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , உப்பு , பெருங்காயம் , அரைத்த போடி ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

௩) அத்துடன் தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசையவும்.

௪) பிசைந்த மாவை 15 நிமிடம் வைத்து அதன் பின்னர் சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

௫) ஒவொரு உருண்டையையும் சிறிய ,தடிமனான தட்டைகளாக தேய்த்து சூடான எண்ணையில் இருபக்கமும் பொல்லும் வரை பொரித்து எடுக்கவும்.
௬) பொன்னிறமாக வெந்த பூரியை  எண்ணையை வடித்து சூடாக பரிமாறவும்.நான் தக்காளி முட்டை மசாலாவுடன் பரிமாறினேன் , நீங்கள் உங்கள் விருப்பம் போல் எந்த மசாலாவுடன் பரிமாறலாம் .


குறிப்பு :
௧) வரமிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.
௨) உப்பு மற்றும் தண்ணீர் ஒவொரு மாவிற்கும் வேறுபாடும் அதனால் தேவையான அளவு சேர்க்கவும்.
௩) எண்ணெய் நன்றாக சூடான பின்பு பூரியை போடவும் , இல்லையென்றால் பூரி பொல்லாது மேலும் எண்ணெய் பிடிக்கும் .            

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...