Showing posts with label மதுரை கறிவடை. Show all posts
Showing posts with label மதுரை கறிவடை. Show all posts

Wednesday, 1 November 2017

மதுரை கறிவடை

TO VIEW IN ENGLISH : PLS CLICK

மதுரை கறிவடை

Posted in : DRY SIDEDISHES, SIDEDISH RECIPES, SNACKS on by : Saranya Arun Tags: , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
மதுரை கறிவடை! எனது அப்பாவுக்கு இந்த கறிவடை மிகவும் பிடிக்கும்.
எனது  பாட்டி கறிவடையை அருமையாக செய்வார்கள் , அவர்கள் ஆட்டுக்கல்லில் கறியை கையால் ஆட்டுவார்கள் .இவ்வாறு கையால் ஆட்டுவதனால் சுவை அருமையாக இருக்கும்,ஆனால் இப்பொழுது பாரம்பரிய முறைப்படி செய்வது என்பது முடியாது என்பதால் நான் சுலபமான வழியில் செய்துவிடுவேன் .
சுவையான மட்டன் கறிவடை செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
மட்டன் கொத்து கறி – 500 கிராம்.
முட்டை – 1
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவைக்கேற்ப
சோம்பு – 1தேக்கரண்டி
பட்டை 1”-2துண்டு
கிராம்பு – 3
கசகசா – 1/2தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
மல்லியிலை – ஒரு கைப்பிடி
இஞ்சி – 1துண்டு
பூண்டு – 4பல்
தேங்காய் – 1/8கப்
சின்ன வெங்காயம் – 20
வறுத்த கடலை -2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4தேக்கரண்டி
எண்ணெய் – பொறிப்பதற்கு
செய்முறை :
அ) மட்டன் கறியை நன்றாக கழுவி , தண்ணீரை முழுவதுமாக வடித்துவிடவும்.வெங்காயம்,கருவேப்பிலை , மல்லி ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஆ) வாணலியில் பட்டை , கிராம்பு ,கசகசா , சோம்பு ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
இ) வறுத்த பொருள்களோடு , இஞ்சி ,பூண்டு , பச்சை மிளகாய் ,கடலை ,தேங்காய் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்துக்கொள்ளவும்.
ஈ) ஒரு பாத்திரத்தில் கொத்து கறி , அரைத்த விழுது , வெங்காயம் , மல்லி , கருவேப்பிலை ,உப்பு ,முட்டை,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
உ) சிறு உருண்டைகளாக பிடித்து , எண்ணையில் பொறித்தெடுத்து பரிமாறவும்.

பேலியோ டயட் :
அ) வறுத்த கடலைக்கு பதில் பாதாம் பவுடர் சேர்க்கவும்.
ஆ) எண்ணெய் பொரித்தெடுப்பதற்கு பதில் பணியார கல்லை சூடாக்கி சிறிது நெய் தடவி ,வடை உருண்டைகளை அதில் வைத்து பொறித்தெடுக்கவும்.

இ) எண்ணையில் பொரித்தெடுப்பதற்கு சிறிது நேரம் பிடிக்கும் ஆனால் பணியார கல்லில் செய்வது 15 நிமிடங்கள் ஆகும் ஆனாலும் மிகவும் சத்தானது.
ஈ) பணியார கல்லில் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு வடையை திருப்பி விட்டு , பொன்னிறமாகும் வரை குறைத்த சூட்டில் பொறித்தெடுக்கவும்.

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...