பேலியோ சுரைக்காய் கூட்டு
TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
பேலியோ சுரைக்காய் கூட்டு ! எப்பொழுதும் எனது பிரிட்ஜ்ல் சுரைக்காய் இருக்கும்.இந்த கூட்டை நான் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்துவிடுவேன்.மிக குறைந்த நேரத்தில் ,திருப்திகரமாக சாப்பிடக்கூடிய பேலியோ உணவு.மேலும் சுரைக்காய் எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.எனது விருப்பமான பேலியோ உணவு செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
சுரைக்காய் – 2 கப்.
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி .
உப்பு – தேவையானஅளவு.
தேங்காய் – 1/8 கப்.
வர மிளகாய் -4
தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி.
கருவேப்பிலை – ஒரு கொத்து.
கடுகு – 1/4 தேக்கரண்டி.
செய்முறை :
அ) சுரைக்காயினை தோல் சீவி , விதைகளை நீக்கிவிட்டு , சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஆ) பாத்திரத்தில் உப்பு , மஞ்சள் தூள் , தேவையான அளவு தண்ணீருடன் சுரைக்காய்ஐ வேகவைக்கவும்.
இ) தேங்காய் , வரமிளகாய் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
ஊ) தாளித்த பொருட்களை சுரைக்காயுடன் சேர்த்து ஒருமுறை கிளறி , பரிமாறவும்.
எ) நான் டயட்இல் இருப்பதால் ஆம்லெட்யுடன் உண்டேன் , நீங்கள் சாதத்துடன் ,சாம்பார் சாதத்துடன் , தோசை , சப்பாத்திஉடன் பரிமாறலாம்.
ஏ) தேங்காய் எண்ணெய் மட்டுமே இந்த கூட்டிற்கு நன்றாக இருக்கும் , வேறு எண்ணெய் வேண்டாம்.
ஐ ) தேங்காய் விழுது சேர்த்தபிறகு அதிகநேரம் கொதிக்கவைக்கவேண்டாம் , அதனால் தேங்காய்ஐ கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

No comments:
Post a Comment