மலபார் பரோட்டா
TO VIEW IN ENGLISH : PLS CLICK
HERE
வணக்கம்,
மலபார் பரோட்டா !! சால்னா ரெசிபி நேற்று போஸ்ட் செய்தேன் , பரோட்டா இல்லாத சால்னா குற்றமாகும் அதனால் இன்று பரோட்டா ரெசிபி.
எனது வாசகர் திருமதி .மணிமேகலை இந்த ரெசிபிஐ கேட்டுருந்தார்,அனால் நேரமின்மை காரணமாக இன்று தான் போஸ்ட் செய்ய முடிந்தது.
இன்று நான் பரோட்டா முட்டையுடன் போஸ்ட் செய்கிறேன் , வரும்வாரத்தில் முட்டை இல்லாத பரோட்டா ரெசிபி போஸ்ட் செய்கிறேன் .
சுவையான , பிரபலமான , மலபார் பரோட்டா ரெசிபி உங்களுக்காக ,
எண்ணிக்கை : 4 பரோட்டாக்கள்.
தேவையானவை :
மைதா – 2 கப்.
தயிர் – 2 தேக்கரண்டி.
முட்டை – 1 .
உப்பு – 1 தேக்கரண்டி.
சர்க்கரை – 1 தேக்கரண்டி.
நெய் – 2 1 /2 தேக்கரண்டி.
தண்ணீர் – தேவையானஅளவு.
எண்ணெய் – 4 தேக்கரண்டி.
செய்முறை :
௧) ஒரு பாத்திரத்தில் முட்டை , உப்பு , சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
௨) இன்னொரு பாத்திரத்தில் மைதா , 2 தேக்கரண்டி நெய் சேர்த்து கலக்கவும்.
௩) மைதாவின் நடுவில் குழி செய்து ,தயிர் , முட்டை கலவை சேர்த்து நன்றாக பிசையவும்.தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து பிசு பிசுப்பான பதத்திற்கு பிசையவும்.
௪) இப்பொழுது 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்றாக 10 நிமிடம் பிசையவும்.
௫) மாவு நன்றாக உருண்டு ,பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்வரை பிசையவும்.
௬) ஒரு ஈர துணியை கொண்டு மாவை மூடி 1 மணி நேரம் வைக்கவும்.
௮) 1 மணி நேரத்திற்கு பிறகு , ஒரு சமமான இடத்தில் 1 தேக்கரண்டி எண்ணெய் தடவி , மாவை அதில் வைத்து 5 நிமிடம் பிசையவும்.
௯) பின்பு மாவை பந்து அளவில் உருண்டைகள் செய்து இன்னும் 10 நிமிடம் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
௧௦) ஒவ்வொரு உருண்டைகளாக எடுத்து சமமான எண்ணெய் தடவிய இடத்தில் வைத்து , பூரி கட்டை அல்லது கையால் மெலிதாக தேய்க்கவும்( நான் கையால் தள்ளினேன் ).கீழ நிலம் தெரியும் அளவு மெலிதாக இருக்கவேண்டும்.
௧௧)தேய்த்த மாவின் மேல் என்னை தடவி ,சேலை மடிப்பு போல் ஒரு முனையிலிருந்து மடித்து வரவும்.மடித்த மாவை சுருட்டி வைக்கவும்.
௧௩)அவ்வாறு அனைத்து பந்துகளையும் தேய்த்து ,சுருட்டி வைக்கவும்.
௧௪) முதலில் சுருட்டிய மாவை எடுத்து மெதுவாக , சற்று தடினமான பரோட்டாவாக தேய்க்கவும்.மிகவும் மெலிதாகே தேய்க்கக்கூடாது , மிகவும் அழுத்தமாகவும் தேய்க்கக்கூடாது.
௧௫)தோசை கல்லை சூடாக்கி ,வெண்ணை தடவி ,தேய்த்த பரோட்டாவை கல்லில் வைத்து , குறைந்த சூட்டில் 5 நிமிடம் வேகவிடவும்.
௧௬) பின்பு மறுபக்கம் திருப்பி 5 நிமிடம் வேகவிடவும்.
௧௭) இப்பொழுது பரோட்டா நன்றாக வெந்தபிறகு , சூட்டை அதிகப்படுத்தி இரு பக்கமும் 2 நிமிடம் வேகவிடவும்.
௧௮) பொன்னிறமாக வெந்தவுடன் , கல்லில் இருந்து எடுத்துவிடவும்.இதே போல் அணைத்து பரோட்டாக்களையும் சுட்டு வைத்தபிறகு , நான்கு பரோட்டாக்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி , இரு கைகளையும் வைத்து இரு பக்கம் நன்றாக அமுக்கி தட்டவும்.
௧௯) பரோட்டாக்கள் நன்றாக மிருதுவாகி , இதழ் இதழாகிவிடும் .
௨௦ ) பரோட்டா ரெடி , சூடாக உங்கள் விருப்பமான சால்னாவுடன் பரிமாறவும்.
௨௧) நான் விருதுநகர் சால்னாவுடன் பரிமாறினேன் , தாங்கள் மட்டன் நெய் வறுவல் , காய்கறி குருமா அல்லது சிக்கன் குருமாவுடன் பரிமாறலாம் .
%20Gecko%2F20100101%20Firefox%2F56.0&webpageName=%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%20%E2%80%93%20HAPPY%20COOKING!!&ref=&url=http%3A%2F%2Fmyhappykitchen.in%2F%3Fp%3D358&width=1366&height=768&rand=654)
No comments:
Post a Comment