Wednesday, 10 January 2018

கடலை பருப்பு சட்னி


 கடலை பருப்பு சட்னி

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
சென்ற வாரம் , எனது வீட்டில் சட்னி செய்வதற்கு ஒன்றுமே இல்லை , ஒரு சிறிய தக்காளி ,மற்றும் சில பூண்டு மட்டுமே இருந்தது .அதனால் கடலை பருப்பு சட்னி செய்தேன் .
மிகவும் சுலபமான சட்னி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி .
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி .
தக்காளி – 1 சிறியது .
பூண்டு – 4 பல்.
வரமிளகாய் – 2 .
உப்பு – தேவையானவை .
பெருங்காயப்பொடி – 1 / 8 தேக்கரண்டி .
தேங்காய் – 2 தேக்கரண்டி ( தேவையென்றால் சேர்க்கலாம் ).
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி .
தாளிப்பதற்கு :
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி .
கடுகு – 1 / 8 தேக்கரண்டி .
கருவேப்பில்லை – சிறிது .
உளுந்தம் பருப்பு – 1 / 2 தேக்கரண்டி .
வரமிளகாய் – 1 .
செய்முறை :

அ) வாணலியில் சிறிது எண்ணெய் சூடாக்கி கடலை பருப்பு , உளுந்தம் பருப்பு,வரமிளகாய் , பூண்டு சேர்த்து , குறைந்த சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.


ஆ) இறுதியாக பெருங்காயப்பொடி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

இ) வாணலியில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.


ஈ) முதலில் பருப்பு கலவையை கரகரப்பாக அரைக்கவும்.அத்துடன் வதக்கிய தக்காளியை சேர்த்து அரைக்கவும்.

உ) மிகவும் மைய அரைக்காமல் சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
ஊ) வாணலியில் சிறிது எண்ணெய் சூடாக்கி கடுகு , கருவேப்பில்லை , உளுந்தம் பருப்பு , வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து சட்னியுடன் சேர்த்து கலக்கி பரிமாறவும்.
 
குறிப்பு :
அ) குறைந்த சூட்டில் எப்பொழுதும் வறுக்கவேண்டும்.
ஆ) தக்காளிக்கு பதில் புளியும் சேர்க்கலாம்.
இ) தேங்காய் சேர்ப்பதாக இருந்தால் ,அரைக்கும் பொழுது சேர்க்கலாம்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...