Tuesday, 9 January 2018

பட்டர்கிரீம்

பட்டர்கிரீம்

Posted in : BASIC RECIPES on by : Saranya Arun Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம்,
பட்டர்கிரீம்! நான் இந்த பட்டர்கிரீமை மாம்பழ ரவா கேக் மேல் அலங்காரம் செய்வதற்காக செய்தேன்.ஆனால் பட்டர்கிரீம் மற்றும் மாம்பழ கேக் காம்பினேஷன் மிக அருமையாக இருந்தது.சுலபமான பட்டர்கிரீம் செய்முறை உங்களுக்காக கீழே,
தேவையானவை :
வெண்ணை – 1கப்.
சர்க்கரை பொடி -2 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 1தேக்கரண்டி
பால் – சிறிது .
செய்முறை :
அ) வெண்ணையை பிரிட்ஜ்லிருந்து வெளியே எடுத்து ஒரு 30 நிமிடம் அல்லது வெண்ணை மெதுமெதுப்பாகும் வெளியே வைக்கவும்.

ஆ) பின்னர் வெண்ணையை நன்றாக பீட்டரில் லேசாக மற்றும் வெண்மை நிறமாகும் வரை அடிக்கவும் .
இ) இத்துடன் சர்க்கரை பொடியை சிறிது சிறிதாக சேர்த்து அடிக்கவும்.

ஈ) சர்க்கரை கலங்கியவுடன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து அதிக வேகத்தில் 5 நிமிடம் அடிக்கவும் , மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது பால் சேர்த்துக்கொள்ளலாம்.


உ) வெண்ணை லேசாகி , கூம்பு வடிவத்தில் நிற்கவேண்டும் , இந்த பக்குவத்தில் அடிப்பதை நிறுத்தி , கேக்கின் மேல் தடவவும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...