Wednesday, 10 January 2018

ஆயுர்வேத குளியல் பொடி ( குழந்தைகளுக்கு ) / நலுங்கு பொடி

ஆயுர்வேத குளியல் பொடி ( குழந்தைகளுக்கு ) / நலுங்கு பொடி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
இந்த ஆயுர்வேத பொடி எனது மகள் சிறுகுழந்தையாக இருந்த பொழுதிலிருந்தே உபயோகப்படுத்திக்கொண்டிருக்கிறேன் .வெய்யில் காலங்களில் வரும் சரும பிரச்சனைகளிலிருந்து இந்த குளியல் பொடி காப்பாற்றும்.
எங்கள் வீட்டில் இதை நலுங்கு பொடி என்று கூறுவார்கள் , ஒரு வயது வரை மட்டுமே இந்த பொடியை உபயோகப்படுத்துவார்கள் ஆனால் நான் இன்று வரை உபயோகப்படுத்தி வருகிறேன்.பெரியவர்களும் உபயோகப்படுத்தக்கூடிய சரும குளியல் பொடி செய்முறை கீழே,
தேவையானவை :
கத்ரி மஞ்சள் – 100 கிராம் .
கொட்ட மஞ்சள் – 100 கிராம்.
பூலாங்கிழங்கு – 50 கிராம்.
பாசிப்பயிறு – 250 கிராம்.
கசகாசா – 25 கிராம்.
வேப்ப இலை – ஒரு கொத்து.
திருநீர்ப்பத்தினி இலை – ஒரு கொத்து ( இருந்தால் சேர்க்கலாம் )

செய்முறை :

அ) மேலே உள்ள அணைத்து பொருட்களையும் வெய்யிலில் நன்றாக 4 நாட்களுக்கு ,நன்றாக காயும் வரை காயவைக்கவும்.
ஆ) காயவைத்த அனைத்து பொருட்களையும் பொடியாக அரைக்கவும் .

இ) தண்ணீர் படாமல் வைத்திருந்தால் ஒரு வருடம் ஆனாலும் கெடாமல் இருக்கும்.
ஈ) ஒரு தேக்கரண்டி குளியல் பொடியுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி ,குழந்தையை குளிப்பாட்டிய பிறகு இந்த குளியல் பேஸ்டை குழந்தை உடல் முழுவதும் தேய்த்து (கண்களுக்கு படாமல் ) கழுவிவிடவும்.
உ) கசகசா ஒரு வருடத்திற்கு பிறகு சேர்க்கலாம் , குழந்தை ஒரு வருடம் ஆகும் வரை கசகசா வேண்டாம்.
ஊ) பெரியவர்களும் இந்த பொடியை ,சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கி ,முகத்தில் தேய்த்து காய்ந்ததும் கழுவலாம் .
எ) பசிப்பயிறுடன் கொண்டைகளையும் சேர்க்கலாம் ,அவ்வாறு சேர்ப்பதாக இருந்தால் 125 கிராம் பாசிப்பயிறு ,125 கிராம் கொண்டக்கடலை சேர்க்கலாம் .
 

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...