சிதம்பரம் கொத்சு

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,சிதம்பரம் கொத்சு ! சிதம்பரம் நாராஜப்பெருமாளுக்கு படைக்கப்படும் நெய்வைத்தியங்களில் இந்த கொத்சுவும் , சாம்பார் சாதமும் பிரபலம்.
இந்த கொத்சுவை ,சாம்பார் சாதத்துடன் படைப்பார்கள், அதனால் இந்த கொத்சு சிதம்பரத்தில் மிகவும் பிரபலம் . எனக்கு எப்பொழுதும் சட்னி ,சாம்பார் செய்வதில் குழப்பம் இருந்துகொண்டே இருக்கும் ,எது செய்தாலும் அலுத்துக்கொள்ளும் ,அதனால் ஏதாவது புதிதாக செய்ய தேடிக்கொண்டே இருப்பேன்.
அப்படி தேடும்பொழுது இந்த கொத்சு செய்முறை கிடைத்தது , மிகவும் அருமையாக இருந்ததனால் செய்முறையை உங்களுக்காக எழுதிவைத்தேன்.
சுவையான சிதம்பரம் கொத்சு செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
பிஞ்சு கத்திரிக்காய் – 10
வெங்காயம் – 1
புளி – கோலியுருண்டை அளவு
மிளகாய் தூள் – 1தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – தேவையானளவு
நல்லெண்ணை – 5தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
வறுத்து அரைப்பதற்கு :
சீரகம் – 1 தேக்கரண்டி
முழு மல்லி – 1 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு துளி .
செய்முறை :
அ) வெங்காயம் , கத்தரிக்காய் ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஆ) புளியை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவைத்து , சாறு எடுத்துக்கொள்ளவும்.

இ) வாணலியில் வறுக்கும் பொருட்களை – சீரகம் , மல்லி , கடலை பருப்பு , மிளகாய் , வெந்தயம் , பெருங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ,பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
![]() |
![]() |
![]() |

உ) பின்பு நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து , மிதமான சூட்டில் கத்திரிக்காய் நன்றாக வதங்க விடவும் .

எ) கத்திரிக்காய் நன்றாக சுருங்கி , மெதுமெதுப்பாக வதங்கியவுடன் , அரைத்த பொடியை சேர்த்து ஒரு முறை கிளறவும்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |

குறிப்பு :
அ) நல்லெண்ணை மட்டுமே நன்றாக இருக்கும் அதனால் வேறு எண்ணெய் வேண்டாம்.
ஆ) பிரிட்ஜ்ல் வைத்தால் ஒரு வாரம்வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.
இ) வேண்டுமென்றால் வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment