TO VIEW IN ENGLISH : PLS CLICK
எக்க் ரிங்ஸ்

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,எக்க் ரிங்ஸ் !! வெங்காயத்தின் நடுவே முட்டை ஊற்றி ,மஞ்சள் கரு பத்தி வெந்ததும் சாப்பிட நன்றாக இருக்கும் .
நான் இந்த எக்க் ரிங்ஐ ,மதியம் அல்லது இரவு உணவாக சாப்பிடுவது வழக்கம்.
வெங்காயத்தின் நடுவே முட்டை ஊற்றுவதனால் முட்டை உடைந்து போகாமல் மெதுமெது என்று இருக்கும்.
இது என்னுடைய விருப்பமான பேலியோ உணவாகும் ,
தேவையானவை :
முட்டை – 2 .
பெரிய வெங்காயம் – 1 .
மிளகு தூள் – 1 / 4 தேக்கரண்டி .
உப்பு – சிறிது .
மல்லியிலை – சிறிது .
நெய் ( அல்லது ) தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி .
செய்முறை :
அ) வெங்காயத்தை நடுவில் வெட்டி , நடுவில் அரை சென்டிமீட்டர் வளையத்தை தனியே எடுக்கவும் .
![]() |
![]() |

இ) மறுபக்கம் திருப்பி மீண்டும் பொன்னிறமாக வேகவிடவும் .

ஈ) வெங்காயம் இருபக்கமும் நன்றாக வதங்கிய பின்பு , முட்டையை மெதுவாக உடைத்து வெங்காயத்தின் நடுவே ஊற்றவும் .

உ) முட்டையின் மேல் , நறுக்கிய வெங்காயம் , மிளகு , உப்பு , மல்லி இழை தூவி , குறைந்த சூட்டில் வேகவிடவும்
.![]() |
![]() |

எ) நான் இந்த முட்டையை மிளகு கோழி மசாலாவுடன் சேர்த்து எனது மத்திய உணவை முடித்தேன்.


No comments:
Post a Comment