TO VIEW IN ENGLISH : PLS CLICK
பெப்பர் சிக்கன் / மிளகு கோழி மசாலா

நாங்கள் வெளியே சாப்பிட சென்றால் முதலில் எனது கணவர் ஆர்டர் செய்வது பெப்பர் சிக்கன் தான் , மற்றவையெல்லாம் பிறகு தான் .நான் பெப்பர் சிக்கன் பலமுறை செய்தாலும் , இந்த ரெசிபி தான் ஹோட்டலில் கிடைப்பதுபோல் இருந்தது.
காரசாரமான மிளகு சிக்கன் கிரேவ்ய் உங்களுக்காக ,
தேவையானவை :
சிக்கன் – 1 கிலோ .
வெங்காயம் – 1
தக்காளி – 1 சிறியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மல்லி பொடி – 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
சிக்கன் மசாலா – 1 தேக்கரண்டி ( தேவையென்றால் சேர்க்கலாம் ).
தயிர் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
உப்பு –தேவையானளவு
கருவேப்பில்லை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் ( அல்லது ) தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி .
அரைப்பதற்கு :
வெங்காயம் – 3
இஞ்சி – 1” துண்டு – 2
பூண்டு – 6 பல் .
வரமிளகாய் – 6
பட்டை -1” துண்டு – 2
கிராம்பு – 6
வறுத்து பொடித்துக்கொள்ள :
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1தேக்கரண்டி
செய்முறை :
அ) வெங்காயம் மற்றும் தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஆ) மிளகு , சீரகத்தை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் பொறியும் வரை வறுத்து பொடியாக்கிக்கொள்ளவும்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
உ) அத்துடன் மல்லி பொடி , மிளகாய் பொடி , மஞ்சள் தூள் , சிக்கன் மசாலா ,தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் .
![]() |
![]() |

எ) விசில் அடங்கியவுடன் , மூடியை திறந்து , தேவையான பதத்திற்கு வரும்வரை கொதிக்கவிடவும்.

ஏ) இறுதியாக மிளகு சீரக தூள் , கருவேப்பில்லை சேர்த்து கலக்கி 3 நிமிடம் வேகவிடவும்( ஒரு கொதிவந்தால் போதும்).

ஐ) இறுதியாக மல்லி இலை சேர்த்து ,அடுப்பில் இருந்து இறக்கவும்.
![]() |
![]() |
அ) அவ்வப்போது அரைக்கும் மசாலாவில்தான் சுவை அதிகம்,அதனால் பிரெஷ் மசாலாவாக அரைத்துக்கொள்ளவும்.
ஆ) குக்கர்க்கு பதில் வாணலியில் செய்யலாம்.


No comments:
Post a Comment