Tuesday, 9 January 2018

ரெட் வெல்வெட் ரவா கேக்

ரெட் வெல்வெட் ரவா கேக்


TO VIEW IN ENGLISH : CLICK HERE

வணக்கம் ,
ரெட் வெல்வெட் ரவா கேக் / பசுபோஸ ..நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் ரவா கேக் ரெசிபி போஸ்ட் சேர்த்துளேன் .இது அந்த கேக்கில் இருந்து சிறிது மாறுதல் செய்த ரெட் வெல்வெட் ரவா கேக்.எனது மகளின் பள்ளியில் சத்தான ஸ்னாக் மட்டுமே கொடுத்தனுப்பவேண்டும் என்பது விதிமுறை ,அதனால் ஏதாவது சத்தான மற்றும் சுவையானதாக செய்யவேண்டும் என்பதால் இந்த கேக்கை செய்தேன்.
மைதா மற்றும் கலர் இல்லாததால் குழந்தைகள் சாப்பிட தைரியமாக கொடுக்கலாம்.
சுவையான , குழைந்தைகள் விரும்பக்கூடிய ரெட் வெல்வெட் ரவா கேக் செய்முறை உங்களுக்காக கீழே,
அளவு : 25 கேக் துண்டுகள்.
தேவையானவை :
ரவை – 1கப்.
தயிர் – 1/4கப்
வெண்ணை – 1/4கப்
துருவிய தேங்காய் -1/4 கப்
சர்க்கரை – 1/2கப்
பேக்கிங் பவுடர் -1/2 தேக்கரண்டி
உப்பு -1/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் – 1தேக்கரண்டி .
அரைத்த பீட்ரூட் – 1/2கப் ( செய்முறை கிழே).
வினிகர் -1/2 தேக்கரண்டி .
தேன் -1/4 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் -1 தேக்கரண்டி
நட்ஸ் – சிறிது
மைதா – 1தேக்கரண்டி ( பேக்கிங் பானில் தூவுவதற்கு).
செய்முறை :

அ) 2 பீட்ரூட்களை 2 துண்டாக்கி குக்கர்இல் வைத்து , தேவையானளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும் . வெந்தவுடன் தோல் சீவி ,மைய அரைத்துக்கொள்ளவும்.

ஆ) அரைத்த பீட்ரூட்டிலிருந்து 1/2 கப் மட்டும் எடுத்துவைத்துக்கொள்ளவும் (மீதமிருக்கும் பீட்ரூட்டை குழம்பில் ஊற்றிக்கொள்ளலாம்).
இ)பேக்கிங் தட்டில் வெண்ணை தடவி , மைதா மாவு தூவி தனியே வைக்கவும் .

ஈ) ஒரு பாத்திரத்தில் ரவா , பேக்கிங் பவுடர் , சர்க்கரை , தேங்காய் ,உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.

உ ) அத்துடன் வெண்ணை , தயிர் ,வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலங்கும்படி கலக்கவும்.
ஊ ) பின்னர் அரைத்த பீட்ரூட் சேர்த்து கலக்கவும் .

எ) இறுதியாக வினிகர் சேர்த்து கலக்கி ,மாவு தூவிய பேக்கிங் தட்டில் ஊற்றவும்.

ஏ) மேலே நட்ஸை வைத்து , பிரிட்ஜ்ல் அரைமணிநேரம் வைக்கவும் , இதனால் ரவா நன்றாக ஊறி , சரியான பதத்திற்கு வந்துவிடும்.

ஐ) ஓவென்ஐ 170 ” சி – 30 நிமிடம் ப்ரீ-ஹீட் செய்யவும்.
ஒ) பேக்கிங் தட்டை பிரிட்ஜ்ல் இருந்து எடுத்து ,கத்தியால் தேவையனாளவில் கீறல் போட்டு , ப்ரீ-ஹீட் செய்த ஓவெனில் வைத்து அரைமணிநேரம் அல்லது கத்தி சுத்தமாக வரும்வரை வேகவிடவும்.

ஒவ்) ஒரு சிறிய பாத்திரத்தில் தேன் மட்டும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கி , கேக் வெதுவெதுப்பாக இருக்கும் பொழுதே மேலே தடவவும்.

அஅ) ஆரிய பின்பு , துண்டுகளாக்கி பிரிட்ஜ்ல் வைத்து சுவைக்கவும்.

குறிப்பு :
அ) நல்ல நிறம் உள்ள பீட்ரூட்டை உபோயோகிக்கவும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...