எங்கள் ஆலப்புழா பயணம்

TO VIEW IN ENGLISH : CLICK
வணக்கம் ,நான் பழைய போஸ்ட்களில் எங்களது ஆலப்புழா ட்ரிப் பற்றி கூறியுள்ளேன்.
நாங்கள் இந்த முறை விடுமுறையை எவ்வாறு கழிக்கவேண்டும் என்று முடிவெடுக்காத நிலையில் திடீரென்று இந்த ஆலப்புழா ட்ரிப் முடிவுசெய்தோம்.
நாங்கள் கொச்சினில் ஒரு வாரம் தங்கியிருந்தோம் அதில் ஆலப்புழா இரண்டு நாட்கள்.
ஆலப்புழா படகு வீட்டில் இரண்டு நாட்கள் களித்தோம் , முதல் நாள் காலை 11 மணிக்கு படகு கரையிலிருந்து கிளம்புகிறது.கரை முழுவதும் படகுகள் ,ஒவொரு படகுகளிலும் ஊழியர்கள் மிகவும் ஒற்றுமையுடன் , ஒருவருக்கொருவர் உதவியுடன் இருக்கின்றனர்.

நாங்கள் இரண்டு தூங்கும் அறை உள்ள படகை புக் செய்திருந்தோம்.இரண்டு அறை, ஒரு சமையல் அறை , ஒரு திறந்த பாலகானி அதில் சாப்பிடும் மேஜை ,நாட்காலி , சோபா,தொலைக்காட்சி , ஸ்பீக்கர் போன்றவை இயற்கை ரசிப்பது எதுவாக அமைத்திருந்தார்கள்.

படகு கிளம்பியவுடன் எலுமிச்சை சர்பத் கொடுக்கப்பட்டது.கரையின் இருபக்கத்திலும் கிராமங்கள் , அழகிய வீடுகள் , கரை ஓரத்தில் மக்கள் மீன் பிடிக்கிறார்கள் , துவைப்பது , தண்ணீர் எடுப்பது என்று அனைத்திற்கும் மக்கள் நீருக்கு வருகிறார்கள்.அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தால் கரை இருக்கிறது .
அதே போல் அவர்கள் போக்குவரத்திற்கும் படுகளையே உபோயோகப்படுத்துகிறார்கள்.சிறிய படகுகள் முதல் பெரிய மின்விசை படகுகள் வரை உபயோகப்படுத்துகிறார்கள் .அவரவர் வீட்டின் முன்னாள் கரையில் படகுகளை நிறுத்திவிடுகிறார்கள்.
மதியம் 2 மணிக்கு ,மத்திய உணவு பரிமாறப்பட்டது. வறுத்த முழு மீன் , வெண்டைக்காய் மசால் , கோவக்காய் பொரியல் , முருங்கை சாம்பார் , மட்டை அரிசி , ரசம் ,தயிர் , அப்பளம் என்று அருமையான கேரளா உணவாக பரிமாறப்பட்டது.

பின்பு கரையோரம் படகு ஒரு மணிநேரம் ஓய்வெடுப்பதற்காக நிறுத்தினார்கள் . அங்கு மீன்,நண்டு ,இறால் போன்றவை கிராமத்தில் விற்றுக்கொண்டிருந்தார்கள் , நாம் வாங்கி கொடுத்தால் படகில் நமக்கு சமைத்து தருவார்கள் , நாங்கள் இறால் வாங்கி கொடுத்து கேரளா உணவு முறையில் சமைக்க கூறி இறால் தேங்காய் கறி செய்தார்கள் .
மாலை குளிர் காற்றுடன் படகு கிளம்பியது , தேனீர் மற்றும் பழம்பொரியுடன் மாலை பயணம் தொடங்கியது.

சிலமணிநேரப்பயணத்திற்கு பிறகு சூரியன் முழுவதும் மறைந்துவிட்டதும் , படகு மரங்கள் மற்றும் செடிகள் அடர்ந்த பகுதியில் நிறுத்தப்பட்டது.சுற்றிலும் தண்ணீர் , ஒரு புறம் மட்டும் மரங்கள் மற்றும் காடு சற்று திகிலாக இருந்தது. சிறிது நேரத்தில் மற்றொரு படகும் எங்கள் படைக்கருகில் வந்து நின்றது , இப்பொழுது இருந்த சிறிது பயமும் போய்விட்டது.


இரவு உணவாக இறால் தேங்காய் மசால் , ரொட்டி ,சாதம் , பருப்பு , சிக்கன் மசால் ஆகியவை பரிமாறப்பட்டது.
காலை 8 மணிக்கு தேநீர் , புட்டு , கடலை கறிஉடன் காலை தொடங்கியது

உணவுக்கு பின் படகு கிளம்பி சிறிது நேரம் பயணித்து 10. 30 மணிக்கு கரை வந்து சேர்ந்தது.
மிகவும் அருமையான பயணமாக இருந்தது .
நீங்கள் அலம்புழா செல்வதாக இருந்தால் சில குறிப்புக்கள் ,
அ) நல்ல பெயர் பெற்ற படகு கம்பெனியை தேர்வு செய்யுங்கள் .அந்த கம்பெனி பற்றிய கருத்துக்களை கூகுளை சர்ச்சில் தேடி பார்த்து முடிவு செய்யுங்கள் .
ஆ) தங்கள் உணவு முறை பற்றி அவர்களிடம் முன்பாகவே கூறிவிடுங்கள் .
இ) அங்கேயே தொலைக்காட்சி இருக்கும் ,நீங்கள் பட கிட் , பாடல்கள் கிட் ஆகியவற்றை எடுத்துச்செல்லுங்கள் , இரவில் திறந்தவெளியில் படம் பார்ப்பது சிறந்த அனுபவம் .
ஈ) உங்களுக்கு தனியாக எதாவது சமைக்க வேண்டும் என்றால் அந்த பொருளை கரையிலேயே வாங்கிச்சென்று விடுங்கள் . பயணத்தின் பொது வாங்குவது மிகவும் அதிக விலை கொடுக்கவேண்டிவரும் .
உ) நீங்கள் செல்வதற்கு சிறந்த மாதம் பெப்ரவரி , மார்ச் ,ஏப்ரல் ,மே .மழை இல்லாமல் வானிலை சிறப்பாக இருக்கும் .


No comments:
Post a Comment