காய்கறிகள் சாலட்

TO VIEW IN ENGLISH : CLICK
வணக்கம் ,காய்கறிகள் சாலட் ! நான் பேலியோ டயட் தொடங்கும் முன் இந்த சாலடை அடிக்கடி செய்வேன் , இப்பொழுது பேலியோவில் மாங்காய் சேர்க்கக்கூடாது என்பதால் மாங்காய்யை தவிர்த்து மற்றவைகளை சேர்த்து காலை உணவாக அல்லது மதியஉணவாக எடுத்துக்கொள்வேன்.
சுலபமான,சத்தான சாலட் செய்முறை உங்களுக்காக,
தேவையானவை :
முட்டைகோஸ் – 1 / 2 கப்.
கேரட் – 1 .
மாங்காய் – 1 .
குடை மிளகாய் – 1
எலுமிச்சை – 1 / 2 மூடி.
வெள்ளரிக்காய் – 1 .
குருமிளகு தூள் – 1 தேக்கரண்டி .
உப்பு – தேவையானஅளவு .
செய்முறை :

அ) அணைத்து காய்கறிகளையும் நன்றாக கழுவி , சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் .

ஆ) நறுக்கிய காய்களுடன் , எலுமிச்சை சாறு , உப்பு ,மிளகு தூள் சேர்த்து சுவைக்கலாம் .

அ) சாலடை செய்தவுடன் சாப்பிடவும் , முடியவில்லை என்றால் ஒரு நாள் பிரிட்ஜ்ல் வைக்கலாம் .
ஆ) பிடித்தமான காய்களை சேர்க்கலாம் .
இ) ஆலிவ் ஆயில் சிறிது சேர்க்கலாம் , நான் ஆலிவ் ஆயில் உபோயோகிப்பது இல்லை அதனால் நான் சேர்க்கவில்லை .
ஈ) பேலியோ டயட் என்றால் மாங்காய் சேர்க்கக்கூடாது .

No comments:
Post a Comment