Friday, 5 January 2018

புல்ஸ் ஐ ஆப்பம்

புல்ஸ் ஐ ஆப்பம்

Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK 

வணக்கம் ,
புல்ஸ் ஐ ஆப்பம்!! நீங்கள் நல்லாஸ் ஆப்பகடை பற்றி தெரிந்திருந்தால் உங்களுக்கு இந்த புல்ஸ் ஐ ஆப்பம் பற்றி தெரிந்திருக்கும்.
முட்டைஊற்றிய ஆப்பம் மஞ்சள் கரு மட்டும் பாதி வெந்திருக்கும் , முட்டை சுவையுடன் சாப்பிடுவதற்கு வித்தியாசமாகவும் , சுவையாகவும் இருக்கும்.
புல்ஸ் ஐ ஆப்பம் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
அப்பத்திற்கு :
பச்சரிசி – 3 கப்.
இட்லி அரிசி – 1 கப்.
உளுந்தம் பருப்பு – 7 தேக்கரண்டி .
வெந்தயம் – 5 தேக்கரண்டி .
சமையல் சோடா – 1 / 4 தேக்கரண்டி .
உப்பு தேவையான அளவு
துருவிய தேங்காய் – 1 கப்.
புல்ஸ் ஐ ஆப்பத்திற்கு :
ஆப்ப மாவு – 1 கப்.
முட்டை – 2 .
உப்பு சிறிது
மிளகுத்தூள் – 1 / 4 தேக்கரண்டி .
நெய் ( ) சமையல் எண்ணெய் – 1 தேக்கரண்டி .
செய்முறை :
) அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை நன்றாக கழுவி ,வெந்தயம் சேர்த்து , தேவையானஅளவு தண்ணீரில் 5 மணிநேரம் ஊறவைக்கவும் .
) தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும் .
) இறுதியாக தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் அரைத்து , ஒரு பாத்திரத்தில் இட்டு , உப்பு ,சமையல் சோடா சேர்த்து நன்றாக கலக்கி 8 மணிநேரம் மூடிவைக்கவும் .
) 8 நேரத்திற்கு பிறகு மாவு நன்றாக பொங்கி , புளித்துவிடும் .இப்பொழுது மாவை நன்றாக கலக்கி வைக்கவும் .ஆப்ப மாவு தயார்.
புல்ஸ் ஐ ஆப்பம் :
) ஆப்ப வடச்சட்டியை சூடாக்கி , எண்ணெய் தடவவும்.
) அடுப்பின் சூட்டை குறைத்துக்கொண்டு , ஒரு கரண்டி ஆப்ப மாவை ஆப்ப சட்டியின் நடுவில் ஊற்றவும் .
) சட்டியின் இருபக்கம் பிடித்துக்கொண்டு ,மெதுவாக சுழற்றவும் .மாவு நன்றாக சட்டி முழுவதும் படரும்படி சுழற்றவும்.

) சிறிது எண்ணெய் அல்லது நெய் தெளித்து , முட்டை ஒன்றை மெதுவாக நடுவில் உடைத்து (மஞ்சள் கரு உடையாமல் ) ஊற்றவும் .
) பின்பு மறுபடியும் சட்டியை ஒரு சுற்று சுற்றினால் முட்டை வெள்ளைக்கரு ஆப்பம் முழுவதும் படர்ந்துவிடும்.
) சிறிது உப்பு , மிளகுத்தூள் தூவி ,சட்டியை மூடிவைத்து , மிதமான சூட்டில் ஆப்பத்தை முறுவலாக வேகவிடவும்.
) மஞ்சள் கரு பாதி வெந்தநிலையில் ஆப்பத்தை ,சட்டிலிருந்து எடுத்து சூடாக மட்டன் கரி அல்லது சிக்கனுடன் பரிமாறவும் .

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...