Thursday 11 January 2018

காலிஃளார் பிரைட் ரைஸ்

  காலிஃளார் பிரைட் ரைஸ்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
காலிஃளார் பிரைட் ரைஸ் ! இப்பொழுது மறுபடியும் நான் மார்க்கெட்டில் காலிஃளார் அதிகம் வந்திருப்பதை கண்டேன் . அதனால் ஒரு பெரிய காலிஃளார் வாங்கிவிட்டேன் ஆனால் இன்று எனக்கு அதில் எனது பேலியோ உணவு செய்ய விருப்பம் இல்லை அதனால் பிரைட் ரைஸ் செய்துவிட்டேன்.எனது பேலியோ உணவையும் இதிலிருந்தே எடுத்துவிட்டேன்:)).
சுவையான , சத்தான பிரைட் ரைஸ் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
காலிஃளார் -4 கப்
கேரட் – 1/2கப்
முட்டைகோஸ் – 1/2கப்
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
சோயா சாஸ் – 1/2தேக்கரண்டி
தக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையானஅளவு
மிளகுத்தூள் -1 தேக்கரண்டி .
கருவேப்பிலை – சிறிது
மல்லியிலை -5 தேக்கரண்டி
வெண்ணெய் ( அல்லது ) நெய் – 6தேக்கரண்டி
காலிஃளாருடன் கலக்குவதற்கு:
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2தேக்கரண்டி
கரம் மசாலா – 1தேக்கரண்டி
மல்லி தூள் – 1தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தயிர் – 1 தேக்கரண்டி
உப்பு – 1தேக்கரண்டி
செய்முறை :
அ) காலிஃளார்ஐ சிறுதுண்டுகளாக நறுக்கி , கொதிக்கும் நீரில் 5 நிமிடம் வேகவிடவும் ,காலிஃளார் 90 % வெந்து ,கொஞ்சம் நறுக்கென்று இருக்கவேண்டும் . தண்ணீர் வடித்துவிட்டு , குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசவும் ( இதனால் காலிஃளார் குலைய வேகாமல் இருக்கும் ).
ஆ) தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு காலிஃளாருடன் உப்பு , மல்லி தூள் ,மஞ்சள் தூள் , மிளகாய் தூள் ,கரம் மசாலா , இஞ்சி பூண்டு விழுது ,தயிர் சேர்த்து கலக்கி , 30 நிமிடம் ஊறவைக்கவும்.

இ) 30 நிமிடத்திற்கு பிறகு , வாணலியில் 2 தேக்கரண்டி வெண்ணை சூடாக்கி ,அதில் காலிஃளார் துண்டுகளை சேர்த்து அதிக சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும் .
ஈ) அரிசியை கழுவி , குக்கர்இல் 2 கப் தண்ணீர் ,அரிசி சேர்த்து 2 விசில் விடவும் , விசில் அடங்கியவுடன் 1 தேக்கரண்டி வெண்ணை சேர்த்து , உதிரியாக கிளறிவிடவும்.

உ) கேரட் , கோஸ் ,குடை மிளகாயை நீளவாக்கில் ,மெலிதாக வெட்டிக்கொள்ளவும் .வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஊ) வாணலியில் மீதமிருக்கும் வெண்ணை சேர்த்து ,வெங்காயம் , கருவேப்பிலை , நறுக்கிய காய்களை சேர்த்து அதிக சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.காய்கள் வெந்து சிறிது நறுக்கென்று இருக்கவேண்டும்.
எ) அத்துடன் சோயா சாஸ் , தக்காளி சாஸ் ,உப்பு சேர்த்து கிளறி , வறுத்த காலிஃளார் சேர்த்து கலக்கவும்.

ஏ) இறுதியாக சாதம் , மிளகு தூள் , மல்லி இலை சேர்த்து கிளறி ,சூடாக பரிமாறவும்.
குறிப்பு :
அ) காலிஃளார் மொறுமொறுப்பாக வேண்டுமானால் எண்ணையில் பொறித்தெடுக்கலாம் ,ஆனால் நான் சத்தான உணவாக இருக்கவேண்டும் என்பதால் சிறிது எண்ணையில் வறுத்தெடுத்தேன்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...