நெய்
Posted in : BASIC RECIPES on by : Saranya Arun Tags: GHEE RECIPES, HOMEMADE GHEETO VIEW IN ENGLISH : CLICK
வணக்கம் ,நெய் எங்களது உணவில் நிச்சயம் இருக்கும்.தினமும் சிறிதளவு நெய் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது .அதனால் நான் குழம்பு , பொரியல் தாளிக்க நெய்யை உபயோகப்படுத்துவேன்.
நான் நெய்யை கடையில் வாங்குவது இல்லை , கடையில் கலப்படமில்லாத நெய் வாங்குவது மிகவும் கடினம் அதனால் வெண்ணை வாங்கி அதிலிருந்து நெய் உருக்கி வைத்துக்கொள்வது வழக்கம்.
நெய்யை நீங்கள் வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யலாம் , அதன் செய்முறை உங்களுக்காக .
தேவையானவை :
வெண்ணை – 500 கிராம் .
செய்முறை :
அ) வாணலியை சூடாக்கி அதில் வெண்ணையை போடவும் , மிதமான சூட்டில் வென்னைஉருகும் வரை கலக்கி விடவும்.
இ) நுரையுடன் வேக ஆரம்பிக்கும் , 5 நிமிடத்துக்கு ஒரு முறை கிளறி விடவும். நுரை திரித்து பின்னர் கரைந்துவிடும்.
உ ) இப்பொழுது நெய்யை ஒரு தேக்கரண்டி எடுத்தால் அது பொன்னிறத்தில் , நெய் நறுமணத்துடன் இருக்கும் .
ஊ ) உங்கள் நெய் தயார் , சூட்டில் இருந்து இறக்கி ஆறவிடவும் .சிறிது நேரத்தில் நெய் தெளிந்தவுடன் , வடித்து பத்திரப்படுத்தவும்.
ஏ) அடியில் சேர்ந்திருக்கும் நெய் கசடை வீசவேண்டாம் , அதை குழம்பு ,மசாலா ஆகியவற்றில் சேர்த்து கொள்ளலாம் .
குறிப்பு :
அ) நான் பசுமாட்டு வெண்ணை வாங்கினேன் , பசுமாட்டு வெண்ணை மஞ்சள் நிறமாக ,நல்ல நறுமணமான நெய் கொடுக்கும்.நீங்கள் எருமை மாட்டு வெண்ணையும் வாங்கலாம்.
ஆ) வெண்ணையை கருகவிடக்கூடாது , கருகிய வெண்ணை சுவை மற்றும் நறுமணம் இருக்காது .அதனால் மேலே உள்ள வழிமுறைகளையும் , படங்களையும் சரியாக பின்பற்றவும்.

No comments:
Post a Comment