Tuesday 7 November 2017

பீட்ரூட் போண்டா

பீட்ரூட் போண்டா

Posted in : SNACKS on by : Saranya Arun Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
எங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த போண்டா மிகவும் பிடிக்கும் . வாரம் ஒரு முறை எதாவது பஜ்ஜி ,போண்டா செய்வது வழக்கம் .இந்த போண்டா செய்தால் போட்டோ எடுப்பதற்குள் காலியாகிவிடும் .அதனால் இந்த முறை போட்டோ எடுத்தபின்பே அனைவர்க்கும் கொடுத்தேன்.
இந்த பீட்ரூட் மசியலை போண்டா செய்யாமலேயே அப்படியா சாப்பிடவும் நன்றாக இருக்கும்.போண்டா செய்து சாப்பிட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.
எங்களுக்கு மிகவும் பிடித்தமான பீட்ரூட் போண்டா செய்முறை உங்களுக்காக,
தேவையானவை :
பீட்ரூட் -2 கப் ( துருவியது).
வெங்காயம் – 1(பெரியது).
பச்சை மிளகாய் -2
உருளைக்கிழங்கு -2
எண்ணெய் -1 தேக்கரண்டி + பொரிப்பதற்கு.
கடுகு -1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 1/2 தேக்கரண்டி
பஜ்ஜி மிஃஸ் -1 கப்.
உப்பு – தேவையானஅளவு
செய்முறை :
அ) உருளைக்கிழங்கை வேகவைத்து , தோல் நீக்கி , நன்றாக குருணை இல்லாமல் மசித்துக்கொள்ளவும்.
ஆ) பீட்ரூட்டை தோல் சீவி , துருவிக்கொள்ளவும்.வெங்காயம் மற்றும் மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இ) வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சூடாக்கி , கடுகு , பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

ஈ) அத்துடன் பீட்ரூட் சேர்த்து ,பச்சை வாடை போகும் வரை வதக்கி ,பின்னர் மச்சாள் தூள் , மிளகாய் தூள் , 2 தேக்கரண்டி தண்ணீர் ,உப்பு சேர்த்து ,வேகவிடவும்.
உ) குலைய வேகவிடவேண்டாம் , பீட்ரூட் கொஞ்சம் கடிக்கும் பக்குவத்தில் இருக்கவேண்டும்.

ஊ) இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து , நன்றாக திரண்டு வரும்வரை கிளறவும்.
எ) அடுப்பில் இருந்து இறக்கி , சிறுஉருண்டைகளாக பிடிக்கவும்.

ஏ) பஜ்ஜி மாவுடன் போதுமானளவு தண்ணீர் சேர்த்து , இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.

இ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , பீட்ரூட் உருண்டைகளை பஜ்ஜி மாவு நன்றாக மூழ்கி எடுத்து , எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஓ) நான் போண்டா சட்னியுடன் பரிமாறினேன் ( ரெசிபி இரண்டு நாட்களில் போஸ்ட் செய்கிறேன்) , நீங்கள் உங்களுக்கு பிடித்தமான சட்னியுடன் அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.

குறிப்பு :
அ) பீட்ரூட்டுடன் உங்களுக்கு பிடித்தமான காய்களை ( கேரட் , கோஸ்,பட்டாணி ) சேர்க்கலாம் .
ஆ) காய்களை குலைய வேகவிடாதீர்கள் , 90 % வெந்தால் போதும்.
இ) பஜ்ஜி மாவிற்கு பதில் , கடலை மாவுடன் , உப்பு , மிளகாய் தூள் ,பெருங்காயம் ,சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து கலக்கியும் போண்டா செய்யலாம்.


No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...