சைனீஸ் பிரட் பாக்கெட்

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,சைனீஸ் பிரட் பாக்கெட்! இந்த எளிதான ஸ்னாக் செய்முறையை நான் ஒரு சமையல் புத்தகத்தில் கண்டேன்.குழந்தைகளை காய்கறிகள் சாப்பிடவைக்க இது ஒரு எளிமையான வழியாக இருந்ததால் செய்தேன்.
புத்தகத்தில் சுட்ட பிரட்ஐ தண்ணீரில் நனைத்து செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுருந்தது ஆனால் தண்ணீரில் நனைத்தால் எண்ணெய் அதிகமாக பிடிக்கும் என்பதால் நான் தண்ணீரில் நனைக்காமல் செய்தேன்.
சுலபமாக செய்யக்கூடிய சைனீஸ் பிரட் பாக்கெட் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
துருவிய காய்கறிகள் – 3கப் ( நான் கேரட் , கோஸ் , பீட்ரூட் சேர்த்தேன் ).
வெங்காயம் – 1
நெய் – 2தேக்கரண்டி.
வெண்ணை – 1தேக்கரண்டி.
உப்பு – தேவையானஅளவு.
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
கரம் மசாலா -1 தேக்கரண்டி.
மஞ்சள் பொடி – 1தேக்கரண்டி .
பிரட் – 10துண்டு
எண்ணெய் – பொரிப்பதற்கு.
செய்முறை :
அ) காய்கறிகளை மெலிதாக துருவிக்கொள்ளவும்.வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஆ) வாணலியில் நெய் சூடாக்கி , துருவிய காய்கறிகளை சேர்த்து அதிக சூட்டில் வதக்கவும், காய்கறிகள் நன்றாக வதங்கி ,ஆனால் சிறிது முறுமுறுப்பாக இருக்கவேண்டும்.
![]() |
![]() |

உ) பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டிவிட்டு ,தோசைக்கல்லில் வெண்ணை தடவி ,பிரட் துண்டுகளை இரு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
![]() |
![]() |

எ) விரல்களை தண்ணீரில் நனைத்து ,பிரட் ஓரங்களை அமுற்றினால் பிரட் ஓரங்கள் இரண்டும் ஒட்டிக்கொள்ளவும்.

ஏ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , ஒட்டிய பிரட் துண்டுகளை மெதுவாக போட்டு பொறித்துஎடுக்கவும்.

ஐ) சூடான பிரட் பாக்கெட் , தக்காளி கெட்சுப்உடன் சுவைக்க நன்றாக இருக்கும்.

No comments:
Post a Comment