Tuesday 7 November 2017

கோதுமை போண்டா

TO VIEW IN ENGLISH : PLS HERE
வணக்கம் ,
கோதுமை போண்டா !! மிகவும் எளிதாக ,குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய போண்டா.நான் இந்த போண்டாவை வாரத்திற்கு ஒரு முறை நிச்சயம் செய்வேன்.எங்களது ஊரில் எல்லோர் வீட்டிலும் இந்த போண்டா செய்வார்கள் , ஆனால் நான் இங்கே செய்தபொழுது எல்லோரும் செய்முறை கேட்டார்கள் ,அதனால் இங்கே எல்லோரிடமும் பகிர்ந்துகொள்கிறேன்.
செய்முறை கீழே,
தேவையானவை :
கோதுமை மாவு – 1கப்.
மிளகாய் பொடி – 1தேக்கரண்டி.
உப்பு – 1/2 தேக்கரண்டி.
வெங்காயம் -1 (பெரியது).
கருவேப்பிலை – ஒரு கொத்து.
சமையல் சோடா -1/8 தேக்கரண்டி.
எண்ணெய் – பொறிப்பதற்கு.
செய்முறை :
அ) வெங்காயம் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஆ) ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , மிளகாய் பொடி , உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இ) தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து மாவை பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் , தண்ணீராகவும் இல்லாமல் இருக்கவேண்டும்.

ஈ) இப்பொழுது அத்துடன் நறுக்கிய வெங்காயம் , கருவேப்பிலை , சமையல் சோடா சேர்த்து சமமாக கலக்கவும் .

உ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி ,மாவு கலவையை சிறு உருண்டைகளாக எண்ணையில் போடவும் .

ஊ) மிதமான சூட்டில் ,பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
எ) எண்ணெய் வடித்து காரச்சட்னியுடன் சுவைக்கலாம்.

குறிப்பு :
அ) மிளகாய் பொடிக்கு பதிலாக பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.பச்சை மிளகாய் சேர்ப்பதால் சுவை மேலும் நன்றாக இருக்கும்.
ஆ) போண்டாவை சிறியதாக போடவும்.சிறிய போண்டா சமமாக வேகும்.

No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...