TO VIEW IN ENGLISH : PLS CLICK
குபூஸ் / தயிர் பூரி

வணக்கம் ,
குபூஸ்!! அம்மா ஒரு நாள் வீட்டில் தயிர் பூரி என்று எனக்கு எந்த பூரியை செய்து கொடுத்தார்கள் நன்றாக இருந்தது.பின்னர் நான் ஹைதெராபாத் எனது அக்கா வீட்டிற்கு போயிருந்த பொழுது எனது அக்கா குபூஸ் என்ற பெயரில் இதே பூரியை செய்து கொடுத்தாள் ..
பெயர் மட்டுமே வேறு சுவை எங்கு சென்றாலும் ஒன்றுதான் .
இப்பொழுது பல நாட்களுக்கு பிறகு நான் இன்று இந்த பூரியை செய்தேன்.அதிக இனிப்பு இல்லாமல் ,மாலை நேர தேநீருக்கு சிறந்த காம்பினேஷனாக இருந்தது .சுவையான தயிர் பூரி / குபூஸ் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
தயிர் -1/4 கப்.
சர்க்கரை -1/4 கப்
உப்பு – ஒரு சிட்டிகை
மைதா – 1 கப்
சமையல் சோடா – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் – பொரித்தெடுப்பதற்கு .
செய்முறை :
அ) ஒரு பாத்திரத்தில் தயிர் , உப்பு , சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும் .
![]() |
![]() |

இ) இப்பொழுது மைதா சேர்த்து கலக்கவும் .கலவை பசை பக்குவத்தில் இருக்கும்.
![]() |
![]() |
உ) 6 மணிநேரத்திற்கு பிறகு , மாவு பிசு பிசுப்பான மாவு பக்குவத்தில் இருக்கும்.

ஊ) மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி , மைதா மாவில் ஒரு முறை புரட்டி எடுத்து வைக்கவும் .

எ) சமமான இடத்தில சிறிதளவு மைதா தூவி , குபூஸ் உருண்டைகளை ஒன்றொன்றாக அதில் வைத்து தடினமான பூரிகளாக தேய்க்கவும் .
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
அ ) நல்ல தரமான தயிரை உபயோகிக்கவும் .
ஆ) பூரி தேய்க்கும் பொழுது மெதுவாக ,நிதானமாக தேய்க்கவும் .
இ) வேண்டுமென்றால் சர்க்கரை அளவை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment