TO VIEW IN ENGLISH : PLS CLICK
உப்பு ரொட்டி

வணக்கம்,
உப்பு ரொட்டி !! பூரி போல் உப்பி இருப்பதால் இதற்கு உப்பு ரொட்டி என்று பெயர்.இந்த ஸ்னாக் பொள்ளாச்சியில் மிகவும் பிரபலம்.இதன் சுவை மற்றும் மனம் அரைத்தவுடன் சுடுவதில் தான் இருக்கிறது.மாவு மீதமானால் ஒரு நாள் பிரிட்ஜ்ல் வைத்து மறுநாள் சுடலாம் ,அதற்கு மேல் மாவு புளித்துவிடும்.வர மிளகாய்க்கு பதில் பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.மற்றும் மாவு அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைக்கவேண்டும்.தண்ணீர் அதிகமாகி விட்டால் சிறிது நேரம் பிரிட்ஜ்ல் வைத்தால் மாவு கெட்டியாகிவிடும்.
தேவையானவை:
இட்லி அரிசி – 1 கப்.
துவரம் பருப்பு – 1 / 4 கப்.
வெங்காயம் – 1 ( பெரியது) .
கருவேப்பில்லை – சிறிது.
சீரகம் – 1 டீஸ்பூன்.
வர மிளகாய் – 4 .
தேங்காய் – 1 / 4 கப்.
உப்பு – தேவையான அளவு.
எண்ணெய் – பொரிப்பதற்கு .
செய்முறை :
௧) அரிசி மற்றும் பருப்பை ஊறவைத்து , கிரைண்டர்யில் தண்ணீர் ஊற்றாமல் வெங்காயம்,சீரகம்,கருவேப்பில்லை,தேங்காய் ,மிளகாயுடன் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். இறுதியாக உப்பு சேர்த்து கலக்கவும் .
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
.. ![]() |
![]() |
![]() |
![]() |

No comments:
Post a Comment