காஞ்சிபுரம் இட்லி

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,காஞ்சிபுரம் இட்லி ! காஞ்சிபுரத்தில் இந்த இட்லி மிகவும் பிரபலம் , அங்கு இட்லியை மூங்கில் குழாயில் செய்வார்கள் மேலும் ஒரு சில இடங்களில் வாழை இலையில் செய்வதும் உண்டு.காலை நேர உணவாக இட்லி செய்வது எனக்கு மிகவும் சௌகரியம் ,அவசரத்தில் யாரும் சரியாக சாப்பிடமாட்டார்கள் அதனால் இட்லி செய்தல் விரைவாக மற்றும் நிறைவாக சாப்பிடுவார்கள்.
எப்பொழுதும் ஒரே மாதிரி இட்லி செய்யாமல் சற்று வித்யாசமாக செய்யலாம் என்று இந்த காஞ்சிபுரம் இட்லியும் , தட்ட இட்லியும் செய்தேன் , இரண்டுமே அருமையாகவும் ,வித்தியாசமாகவும் இருந்தது.நான் வாழையிலையில் செய்தேன் , உங்களுக்கு வாழையிலை கிடைக்கவில்லையென்றால் சாதாரணமாக இட்லி தட்டில் இட்லி போல் ஊற்றியும் செய்யலாம்.
பாரம்பரிய காஞ்சிபுரம் இட்லி செய்முறை கிழே,
நேரம் : 10 மணிநேரம்
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
நபர்கள் : 10
தேவையானவை :
பச்சரிசி – 1கப்
இட்லி அரிசி – 1கப்
உளுந்து – 1கப்
வெந்தயம் – 1தேக்கரண்டி
உப்பு – தேவையானஅளவு
கடுகு – 1தேக்கரண்டி
கடலை பருப்பு -1 தேக்கரண்டி
கருவேப்பில்லை – ஒரு கொத்து
மிளகு – 1தேக்கரண்டி
சீரகம் – 1தேக்கரண்டி
முந்திரி – 10
இஞ்சி – 1தேக்கரண்டி (நறுக்கிய ).
நெய் – 2தேக்கரண்டி
செய்முறை :
அ) பச்சரிசி மற்றும் இட்லி அரிசியை கழுவி , நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

ஆ) உளுந்து ,வெந்தயத்தை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
இ) ஊறியபின் முதலில் உளுந்து ,வெந்தயத்தை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

ஈ) பின்பு ஊறவைத்த அரிசியை தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
உ) அரிசி மாவு மற்றும் உளுந்து மாவை ஒன்றாக சேர்த்து , உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.மாவை மூடிவைத்து சுமார் 8 மணிநேரம் புளிக்கவிடவும்.

ஊ)8 மணிநேரம் புளித்த பிறகு மாவு நன்றாக பொங்கி வரும் ,கலக்கி வைக்கவும்.
எ) சீரகம் மற்றும் மிளகை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

ஏ) ஒரு சிறிய வாணலியில் நெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொறித்த பின் , கடலை பருப்பு ,முந்திரி ,கருவேப்பில்லை சேர்த்து வறுக்கவும்.அத்துடன் சீராக மிளகு பொடியை சேர்த்து ஒரு முறை வறுத்து மாவுடன் சேர்த்து கலக்கவும்.
![]() |
![]() |
![]() |
![]() |
ஓஒ) நான் டிபன் சாம்பாருடன் பரிமாறினேன் , நீங்கள் சாம்பார் அல்லது காரச்சட்னியுடன் பரிமாறலாம்.


No comments:
Post a Comment