செட்டிநாடு கார பணியாரம்

TO VIEW IN ENGLISH : CLICK HERE
வணக்கம் ,செட்டிநாடு கார பணியாரம்..செட்டிநாடு சமையல் என்றால் பிடிக்காதவர்கள் கிடையாது .செட்டிநாடு கார பணியாரம் மிகவும் எளிதான மற்றும் மிகவும் பிரபலமான செட்டிநாட்டு உணவு .அதன் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
தோசை மாவு – 4 கப்.
கேரட் – 1/2 கப்.
வெங்காயம் – 1/4 கப்.
உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி .
கடுகு -1/2 தேக்கரண்டி .
மிளகு -1 தேக்கரண்டி .
பெருங்காயம் -1/8 தேக்கரண்டி .
கருவேப்பில்லை –ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 2
தேங்காய் (துருவியது ) – 1/8 கப்.
கொத்தமல்லி இலை -4 தேக்கரண்டி .
எண்ணெய் ( அ) நெய் -1 தேக்கரண்டி + பணியாரம் செய்ய தேவையான அளவு .
உப்பு – தேவையான அளவு .
செய்முறை :

அ) வானலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு ,பச்சை மிளகாய் , கருவேப்பில்லை ,மிளகு ,உளுந்து பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

ஆ ) அத்துடன் கேரட் , வெங்காயம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

இ) இறுதியாக தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி , அடுப்பில் இருந்து இறக்கவும்.
![]() |
![]() |
![]() |
![]() |

ஊ) எண்ணெய் தெளித்து ,குறைந்த சூட்டில் பணியாரத்தை பொன்னிறமாகும் வரை வேகவிடவும்.

எ) பின்னர் மறுபக்கம் திருப்பி பொன்னிறமாக வேகவிடவும்.

ஏ) வெந்தவுடன் பணியாரக்கல்லில் இருந்து எடுத்து சூடாக பரிமாறவும்.

இ) நான் நிலக்கடலை சட்னியுடன் பரிமாறினேன் , நீங்கள் உங்கள் விருப்பம் போல் பரிமாறலாம்.
குறிப்பு :
அ) பணியாரத்தை குறைத்த சூட்டில் வேகவிடவும் , இல்லையென்றால் வெளியே வெந்து உள்ளே வேகாமல் இருக்கும்.
ஆ ) உங்கள் விருப்பம் போல் காய்களை துருவி சேர்க்கலாம்.

No comments:
Post a Comment