வெந்நீர் சப்பாத்தி

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,புதிதாக சமையல் கற்றுக்கொள்பவர்கர்களுக்கு மிருதுவான சப்பாத்தி என்பது மிகவும் கடினம்.நான் சமையல் கற்றுக்கொள்ளும்பொழுது எனது சப்பாத்தி சாப்பிடமுடியாதளவு இருக்கும் , ஒன்று மிகவும் கடினமாக அப்பளம் போல் இருக்கும் அல்லது பல் வலி எடுக்குமளவு கெட்டியாக இருக்கும் .அபோழுது மிருதுவான சப்பாத்தி செய்வதற்காக நிறைய வழிகள் முயற்சி செய்வேன் , அதில் ஒன்று தான் இந்த சுடுதண்ணீர் சப்பாத்தி,இந்த முறையில் சப்பாத்தி செய்வது மிகவும் மிருதுவாக இருக்கும். மிகவும் மிருதுவான சப்பாத்தி செய்முறை உங்களுக்காக கிழே ,
தேவையானவை :
கோதுமை மாவு – 2 கப்
உப்பு -1/2 தேக்கரண்டி
சுடுதண்ணீர் – 1கப்
நெய் / எண்ணெய் -2 தேக்கரண்டி
செய்முறை :
அ) ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , உப்பு சேர்த்து கலக்கவும் .
ஆ) மாவின் நடுவே குழி செய்து , சுடு தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும்.

இ) மாவு ஈரப்பதம் ஆனவுடன் , தண்ணீர் ஊற்றுவதை நிறுத்திவிட்டு ,பிசைய ஆரம்பிக்கவும்.

ஈ) பிசையும் பொழுது மாவு மிகவும் வரவரப்பாக ( தண்ணீர் பற்றாமல் ) இருந்தால் சிறிது சுடு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
உ) மாவு பிசுபிசுப்பான பக்குவத்திற்கு வந்தவுடன் , தண்ணீர் ஊற்றுவதை நிறுத்திவிட்டு(படத்தில் இருப்பதுபோல் ) , நன்றாக பிசையவும் .

ஊ) மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் , மிருதுவான பந்துபோல் ஆகும் வரை பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
![]() |
![]() |
ஏ) தேய்க்கும் இடத்தில சிறிதளவு மாவு தூவி , அதன் மேல் உருண்டையை வைத்து , மேலே சிறிது மாவு தூவி , மெதுவாக தேய்க்கவும்.
![]() |
![]() |
![]() |
![]() |

ஓ) பின்பு மறுபக்கம் திருப்பி , குமிழ்கள் வரும்வரை விட்டு ,பின்பு சட்டுவத்தில் மெதுவாக சப்பாத்தியின் மேல் அமுற்றிவிடவும்.இவ்வாறு அமுற்றுவதனால் சப்பாத்தி நன்றாக உப்பி வரும் .
![]() |
![]() |

அஅ ) சூடான சப்பாத்தியின் மேல் ஒரு துளி நெய் தேய்த்து , காற்றுப் புகாபாத்திரத்தில் வைத்து மூடிவைக்கவும்.

அஆ) இவ்வாறு அணைத்து சப்பாத்திகளையும் சுட்டு எடுத்து , பிடித்தமான க்ராவ்ய் அல்லது சட்னியுடன் பரிமாறவும்.
அஇ) நான் பன்னீர் வெள்ளை குர்மாவுடன் பரிமாறினேன் , நீங்கள் மட்டன் குருமா , விருதுநகர் சால்னா என்று உங்களுக்கு பிடித்தமான குருமாவுடன் பரிமாறலாம்.

குறிப்பு :
அ) தண்ணீர் அளவு மாவின் தரத்திற்கு தகுந்தாற்போல் மாறும் , அதனால் சிறிது சிறிதாக சேர்க்கவும்.

No comments:
Post a Comment