பூண்டு ரசம்
TO VIEW IN ENGLISH : CLICK HERE
வணக்கம் ,பூண்டு ரசம் ..நான் பல விதமான ரசங்கள் செய்தாலும் இந்த பூண்டு ரசமும், மிளகு ரசமும் மிகவும் ஸ்பெஷல்.வயிறு உபாதைகளில் இருந்து சளி ,இருமல் வரை எந்த பிரச்சனைக்கும் இந்த இரண்டு ரசமும் விடுதலை அளிக்கும்.
மிகவும் சுவையான பூண்டு ரசம் செய்முறை உங்களுக்காக ,
எண்ணிக்கை : 4 நபர்கள் .
தேவையானவை :
பூண்டு – 15 பல்.
புளி – 2 ” துண்டு .
கருவேப்பில்லை – சிறிது.
உப்பு – தேவையானஅளவு.
கொத்தமல்லித்தழை – ஒரு கை அளவு.
வரமிளகாய் – 1 .
பெருங்காயப்பொடி – 1 / 8 தேக்கரண்டி.
தக்காளி – 1 .
கடுகு – 1 /4 தேக்கரண்டி.
சீரகம் – 1 / 4 தேக்கரண்டி .
தேங்காய் எண்ணெய் ( அல்லது ) நெய் – 1 தேக்கரண்டி.
அரைக்க :
பூண்டு – 5 பல் .
குருமிளகு – 1 தேக்கரண்டி.
மஞ்சள் பொடி – 1 / 4 தேக்கரண்டி.
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி.
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி .
வரமல்லி – 1 / 2 தேக்கரண்டி.
வரமிளகாய் – 2 .
தேங்காய் எண்ணெய் (அ) நெய் – 1 தேக்கரண்டி.
செய்முறை :
௧) புளியை சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து ,சாறு எடுத்துக்கொள்ளவும்.
௨) தக்காளியை கரகரப்பாக மசித்துக்கொள்ளவும் .அதே போல் பூண்டையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
௫) பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி ,கடுகு ,சீரகம் சேர்த்து பொரித்த பின்பு , நசுக்கிய பூண்டு , கருவேப்பில்லை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
௬) அத்துடன் புளி தண்ணீர் , அரைத்த மசாலா , உப்பு , பெருங்காயம் ,அரைத்த தக்காளி விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.
No comments:
Post a Comment