Thursday 11 January 2018

ஆந்திர பப்பு

 ஆந்திர பப்பு


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
எனது அக்கா இந்த பப்புவை அடிக்கடி செய்வது வழக்கம் ,ஆனால் அவர்கள் காரம் இல்லாமல் ,புளிப்பு இல்லாமல் செய்வதால் எங்களுக்கு பிடிக்காது,அதனால் நான் ஆந்திர பப்பு செய்ய நினைத்ததே இல்லை.
சமீபத்தில் எனது வாசக தோழி சுகன்யா என்னிடம் இந்த பப்புவை பற்றி கேட்டார் , அவர் இதை ஹைதெராபாத் சென்றிருந்த பொழுது சுவைத்தார் எனவும் , காரமாக ,புளிப்பாக ,கீரையுடன் இருந்தது என்று கூறினார்.
அதன் பின்னர் எனது பக்கத்து வீடு ஆந்திர ஆண்ட்டியிடம் இந்த செய்முறையை வாங்கினேன்.
ஆந்திர புகழ் பப்பு செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
துவரம் பருப்பு – 1/2 கப்.
பாசிப்பருப்பு – 1/2 கப்.
தக்காளி -2
வெங்காயம் – 1
மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி.
பச்சை மிளகாய் – 6
சீரகம் -1/2 தேக்கரண்டி.
கீரை – 2 கப்
புளி – 1″ துண்டு.
பெருங்காயம் -1/4 தேக்கரண்டி.
நெய் – 1தேக்கரண்டி.
கடுகு – 1/4தேக்கரண்டி.
கருவேப்பில்லை – சிறிது
வர மிளகாய் -2
மல்லியிலை – ஒரு கை.
செய்முறை :
அ) வெங்காயம் , தக்காளி , கீரை ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.புளியை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவைத்து சாறுஎடுக்கவும்.

ஆ)பருப்பை நன்றாக கழுவி ,குக்கர்இல் பருப்பு , தக்காளி , வெங்காயம் , மஞ்சள் தூள் , பச்சை மிளகாய் , சீரகம் சேர்த்து , முங்கும் அளவு தண்ணீர் சேர்த்து , 3 விசில் விடவும்.

இ) ஸ்டீம் அடங்கியவுடன் ,பருப்பு கலவையை நன்றாக மசித்துவிட்டு , அத்துடன் கீரையை சேர்த்து மீண்டும் ஒரு விசில் விடவும் .

உ) ஸ்டீம் அடங்கியவுடன் , பருப்பு கீரையுடன் , புளி தண்ணீர் , பெருங்காயம்,உப்பு சேர்த்து ஒரு கொத்திவைத்து இறக்கவும் .

ஊ) ஒரு சிறிய வாணலியில் நெய் சூடாக்கி , கடுகு , வரமிளகாய் , கருவேப்பில்லை சேர்த்து பொறிந்தவுடன் பருப்புடன் சேர்க்கவும்.
எ) இறுதியாக மல்லியிலை சேர்த்து கலக்கி , சூடாக பரிமாறவும் .

ஏ) சாதத்துடன் ,சப்பாத்தி , ரொட்டியுடன் பரிமாற நன்றாக இருக்கும் .
குறிப்பு :
அ) காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே சேர்ப்பதால் ,தேவையான அளவு சேர்க்கவும் .
ஆ) நான் பச்சை மிளகாய் கம்மியாக சேர்த்ததால் இறுதியில் சிறிது மிளகாய் தூள் சேர்த்தேன் அதனால் மஞ்சள் நிறம் சிறிது மாறிவிட்டது.
இ) கீரை அதிக நேரம் வேகவைக்கக்கூடாது என்பதால் ஒரு விசில் மட்டும் வைத்தேன்.
ஈ) குக்கர்இல் செய்வது சுலபம் என்பதால் குக்கர்இல் செய்தேன் நீங்கள் பாத்திரத்திலும் செய்யலாம் .


No comments:

Post a Comment

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...