Showing posts with label இறால் வெங்காய புளி குழம்பு. Show all posts
Showing posts with label இறால் வெங்காய புளி குழம்பு. Show all posts

Wednesday, 14 February 2018

இறால் வெங்காய புளி குழம்பு

TO VIEW IN ENGLISH : PLS CLICK
இறால் வெங்காய புளி குழம்பு 

தேவையானவை :
இறால் - 500 கிராம்
சிறிய வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 2
புளி - நெல்லியளவு
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பட்டை -1 " துண்டு - 1
தேங்காய் எண்ணெய்/ நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கருவேப்பிலை - ஒரு கொத்து

வறுத்து அரைப்பதற்கு :
தேங்காய் - 1/2 கப்
வரமல்லி - 2 மேஜைக்கரண்டி
சோம்பு - 1தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
சிறிய வெங்காயம் - 1/2 கப்
பட்டை -1 " துண்டு - 2
கருவேப்பிலை - ஒரு கொத்து .

செய்முறை :
) வாணலியை சூடாக்கி எண்ணெய் சேர்க்காமல் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
) வெங்காயம் சிறிது வதங்கியவுடன் , மல்லி , சோம்பு , மிளகாய் , கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும் .
) இறுதியாக தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கவும்.
) வறுத்தபொருட்கள் ஆறியவுடன் பட்டை சேர்த்து , சிறிது கரகரப்பாக தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும் .
) வெந்நீரில் புளியை 10 நிமிடம் ஊறவைத்து , சாறு எடுத்து வைக்கவும்.
) வாணலில் எண்ணெய் சூடாக்கி , கடுகு , வெந்தயம், பட்டை,கருவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
 எ) அத்துடன் அரைத்த விழுது , புளி தண்ணீர் சேர்த்து , பச்சை வாடை மறையும் வரை கொதிக்கவைக்கவும்.
) சுத்தம் செய்த இறால் , வெங்காயம் , உப்பு சேர்த்து , இறால் வேகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு:
) இறாலை உப்பு, எலுமிச்சை , மஞ்சள் தூள் சேர்த்து அரைமணிநேரம் ஊறவைத்து கழுவினால் வாடை இருக்காது.





Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...