Showing posts with label SNACKS RECIPES. Show all posts
Showing posts with label SNACKS RECIPES. Show all posts

Tuesday, 7 November 2017

நிலக்கடலை சுண்டல்

நிலக்கடலை சுண்டல்


TO VIEW IN ENGLISH :  PLS CLICK

வணக்கம் ,
நிலக்கடலை சுண்டல் ! சிறுவயதில் எங்கள் தோட்டத்தில் நிலக்கடலை விளைவிப்போம்,ஒவ்வொரு முறையும் அறுவடை முடிந்ததும் நிலக்கடலையை தரம் பிரிப்போம்.முதல் தர முத்துக்களை விதை முத்துக்களாகவும் , அடுத்த தர முத்துக்களை எங்கள் உபயோகத்திற்கும்,சந்தைக்கும் அனுப்பிவிடுவோம்.
புதிய நிலக்கடலை சுண்டல் சுவை அருமையாக இருக்கும்.
அந்த சுவையான நிலக்கடலை சுண்டல் செய்முறை உங்களுக்காக ,
சமைக்கும் நேரம் : 30 நிமிடம்
நபர்கள் : 3
தேவையானவை :
நிலக்கடலை – 1 கப்
சின்ன வெங்காயம் – 10
துருவிய தேங்காய் – 1/4 கப்
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையானளவு
தேங்காய் எண்ணெய் – 2தேக்கரண்டி
கடுகு -1/8 தேக்கரண்டி
வெல்லம் -1 தேக்கரண்டி
செய்முறை :
அ) நிலக்கடலையை தண்ணீரில் 5 மணிநேரம் ஊறவைக்கவும்.

ஆ) தண்ணீரை வடித்துவிட்டு , குக்கர்இல் நிலக்கடலை , 2 கப் தண்ணீர் , உப்பு சேர்த்து 5 விசில் விடவும் .விசில் அடங்கியவுடன் தண்ணீர் வடித்து , கடலையை தனியாக வைக்கவும்.

இ) வெங்காயம் , மிளகாய் , கருவேப்பிலை ஆகியவற்றை நறுக்கிவைக்கவும்.

ஈ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , கடுகு , பச்சை மிளகாய் , வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
உ) பின்பு நிலக்கடலையை சேர்த்து , ஒரு முறை கிளறி , உப்பு , தேங்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.
ஊ) அடுப்பில் இருந்து இறக்கி , வெல்லத்துடன் பரிமாறவும்.

குறிப்பு :
அ) வெல்லம் செரிமானத்திற்கு உதவும் , நிலக்கடலை செரிமானத்திற்கு அதிகநேரம் ஆகும் , அதனால் வெல்லத்துடன் உண்டால் எளிதாக செரிமானம் ஆகும்.

பீட்ரூட் போண்டா

பீட்ரூட் போண்டா

Posted in : SNACKS on by : Saranya Arun Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
எங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த போண்டா மிகவும் பிடிக்கும் . வாரம் ஒரு முறை எதாவது பஜ்ஜி ,போண்டா செய்வது வழக்கம் .இந்த போண்டா செய்தால் போட்டோ எடுப்பதற்குள் காலியாகிவிடும் .அதனால் இந்த முறை போட்டோ எடுத்தபின்பே அனைவர்க்கும் கொடுத்தேன்.
இந்த பீட்ரூட் மசியலை போண்டா செய்யாமலேயே அப்படியா சாப்பிடவும் நன்றாக இருக்கும்.போண்டா செய்து சாப்பிட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.
எங்களுக்கு மிகவும் பிடித்தமான பீட்ரூட் போண்டா செய்முறை உங்களுக்காக,
தேவையானவை :
பீட்ரூட் -2 கப் ( துருவியது).
வெங்காயம் – 1(பெரியது).
பச்சை மிளகாய் -2
உருளைக்கிழங்கு -2
எண்ணெய் -1 தேக்கரண்டி + பொரிப்பதற்கு.
கடுகு -1/4 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 1/2 தேக்கரண்டி
பஜ்ஜி மிஃஸ் -1 கப்.
உப்பு – தேவையானஅளவு
செய்முறை :
அ) உருளைக்கிழங்கை வேகவைத்து , தோல் நீக்கி , நன்றாக குருணை இல்லாமல் மசித்துக்கொள்ளவும்.
ஆ) பீட்ரூட்டை தோல் சீவி , துருவிக்கொள்ளவும்.வெங்காயம் மற்றும் மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

இ) வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சூடாக்கி , கடுகு , பச்சை மிளகாய் , வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

ஈ) அத்துடன் பீட்ரூட் சேர்த்து ,பச்சை வாடை போகும் வரை வதக்கி ,பின்னர் மச்சாள் தூள் , மிளகாய் தூள் , 2 தேக்கரண்டி தண்ணீர் ,உப்பு சேர்த்து ,வேகவிடவும்.
உ) குலைய வேகவிடவேண்டாம் , பீட்ரூட் கொஞ்சம் கடிக்கும் பக்குவத்தில் இருக்கவேண்டும்.

ஊ) இத்துடன் மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து , நன்றாக திரண்டு வரும்வரை கிளறவும்.
எ) அடுப்பில் இருந்து இறக்கி , சிறுஉருண்டைகளாக பிடிக்கவும்.

ஏ) பஜ்ஜி மாவுடன் போதுமானளவு தண்ணீர் சேர்த்து , இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.

இ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , பீட்ரூட் உருண்டைகளை பஜ்ஜி மாவு நன்றாக மூழ்கி எடுத்து , எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
ஓ) நான் போண்டா சட்னியுடன் பரிமாறினேன் ( ரெசிபி இரண்டு நாட்களில் போஸ்ட் செய்கிறேன்) , நீங்கள் உங்களுக்கு பிடித்தமான சட்னியுடன் அல்லது அப்படியேவும் சாப்பிடலாம்.

குறிப்பு :
அ) பீட்ரூட்டுடன் உங்களுக்கு பிடித்தமான காய்களை ( கேரட் , கோஸ்,பட்டாணி ) சேர்க்கலாம் .
ஆ) காய்களை குலைய வேகவிடாதீர்கள் , 90 % வெந்தால் போதும்.
இ) பஜ்ஜி மாவிற்கு பதில் , கடலை மாவுடன் , உப்பு , மிளகாய் தூள் ,பெருங்காயம் ,சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து கலக்கியும் போண்டா செய்யலாம்.


சைனீஸ் பிரட் பாக்கெட்

சைனீஸ் பிரட் பாக்கெட்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
சைனீஸ் பிரட் பாக்கெட்! இந்த எளிதான ஸ்னாக் செய்முறையை நான் ஒரு சமையல் புத்தகத்தில் கண்டேன்.குழந்தைகளை காய்கறிகள் சாப்பிடவைக்க இது ஒரு எளிமையான வழியாக இருந்ததால் செய்தேன்.
புத்தகத்தில் சுட்ட பிரட்ஐ தண்ணீரில் நனைத்து செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுருந்தது ஆனால் தண்ணீரில் நனைத்தால் எண்ணெய் அதிகமாக பிடிக்கும் என்பதால் நான் தண்ணீரில் நனைக்காமல் செய்தேன்.
சுலபமாக செய்யக்கூடிய சைனீஸ் பிரட் பாக்கெட் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
துருவிய காய்கறிகள் – 3கப் ( நான் கேரட் , கோஸ் , பீட்ரூட் சேர்த்தேன் ).
வெங்காயம் – 1
நெய் – 2தேக்கரண்டி.
வெண்ணை – 1தேக்கரண்டி.
உப்பு – தேவையானஅளவு.
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
கரம் மசாலா -1 தேக்கரண்டி.
மஞ்சள் பொடி – 1தேக்கரண்டி .
பிரட் – 10துண்டு
எண்ணெய் – பொரிப்பதற்கு.
செய்முறை :
அ) காய்கறிகளை மெலிதாக துருவிக்கொள்ளவும்.வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஆ) வாணலியில் நெய் சூடாக்கி , துருவிய காய்கறிகளை சேர்த்து அதிக சூட்டில் வதக்கவும், காய்கறிகள் நன்றாக வதங்கி ,ஆனால் சிறிது முறுமுறுப்பாக இருக்கவேண்டும்.
இ) இப்பொழுது உப்பு , மஞ்சள் பொடி , மிளகாய் பொடி , கரம் மசாலா சேர்த்து நன்றாக கலக்கி பச்சை வடை போகும் வரை வதக்கி , அடுப்பில் இருந்து இறக்கவும்.
உ) பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டிவிட்டு ,தோசைக்கல்லில் வெண்ணை தடவி ,பிரட் துண்டுகளை இரு பக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
ஊ) ஆரிய பின்பு பிரட் துண்டுகளின் மேல் வதக்கிய காய்கறிகளை 2 தேக்கரண்டி வைத்து ,மேலே இன்னுமொரு பிரட் துண்டை வைத்து ,ஈர விரல்களால் ஓரங்களை அமுக்கி ஒட்டிவிடவும்.

எ) விரல்களை தண்ணீரில் நனைத்து ,பிரட் ஓரங்களை அமுற்றினால் பிரட் ஓரங்கள் இரண்டும் ஒட்டிக்கொள்ளவும்.
ஏ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , ஒட்டிய பிரட் துண்டுகளை மெதுவாக போட்டு பொறித்துஎடுக்கவும்.
ஐ) சூடான பிரட் பாக்கெட் , தக்காளி கெட்சுப்உடன் சுவைக்க நன்றாக இருக்கும்.

கோதுமை போண்டா

TO VIEW IN ENGLISH : PLS HERE
வணக்கம் ,
கோதுமை போண்டா !! மிகவும் எளிதாக ,குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய போண்டா.நான் இந்த போண்டாவை வாரத்திற்கு ஒரு முறை நிச்சயம் செய்வேன்.எங்களது ஊரில் எல்லோர் வீட்டிலும் இந்த போண்டா செய்வார்கள் , ஆனால் நான் இங்கே செய்தபொழுது எல்லோரும் செய்முறை கேட்டார்கள் ,அதனால் இங்கே எல்லோரிடமும் பகிர்ந்துகொள்கிறேன்.
செய்முறை கீழே,
தேவையானவை :
கோதுமை மாவு – 1கப்.
மிளகாய் பொடி – 1தேக்கரண்டி.
உப்பு – 1/2 தேக்கரண்டி.
வெங்காயம் -1 (பெரியது).
கருவேப்பிலை – ஒரு கொத்து.
சமையல் சோடா -1/8 தேக்கரண்டி.
எண்ணெய் – பொறிப்பதற்கு.
செய்முறை :
அ) வெங்காயம் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஆ) ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு , மிளகாய் பொடி , உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

இ) தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து மாவை பஜ்ஜி மாவு பதத்திற்கு கலக்கவும்.மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் , தண்ணீராகவும் இல்லாமல் இருக்கவேண்டும்.

ஈ) இப்பொழுது அத்துடன் நறுக்கிய வெங்காயம் , கருவேப்பிலை , சமையல் சோடா சேர்த்து சமமாக கலக்கவும் .

உ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி ,மாவு கலவையை சிறு உருண்டைகளாக எண்ணையில் போடவும் .

ஊ) மிதமான சூட்டில் ,பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.
எ) எண்ணெய் வடித்து காரச்சட்னியுடன் சுவைக்கலாம்.

குறிப்பு :
அ) மிளகாய் பொடிக்கு பதிலாக பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.பச்சை மிளகாய் சேர்ப்பதால் சுவை மேலும் நன்றாக இருக்கும்.
ஆ) போண்டாவை சிறியதாக போடவும்.சிறிய போண்டா சமமாக வேகும்.

Wednesday, 1 November 2017

குபூஸ் / தயிர் பூரி

TO VIEW IN ENGLISH : PLS CLICK

குபூஸ் / தயிர் பூரி


வணக்கம் ,
குபூஸ்!! அம்மா ஒரு நாள் வீட்டில் தயிர் பூரி என்று எனக்கு எந்த பூரியை செய்து கொடுத்தார்கள் நன்றாக இருந்தது.பின்னர் நான் ஹைதெராபாத் எனது அக்கா வீட்டிற்கு போயிருந்த பொழுது எனது அக்கா குபூஸ் என்ற பெயரில் இதே பூரியை செய்து கொடுத்தாள்  ..
பெயர் மட்டுமே வேறு சுவை எங்கு சென்றாலும் ஒன்றுதான் .
இப்பொழுது  பல நாட்களுக்கு பிறகு நான் இன்று இந்த பூரியை செய்தேன்.அதிக இனிப்பு இல்லாமல் ,மாலை நேர தேநீருக்கு சிறந்த காம்பினேஷனாக இருந்தது .சுவையான தயிர் பூரி / குபூஸ் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
தயிர் -1/4 கப்.
சர்க்கரை -1/4 கப்
உப்பு – ஒரு சிட்டிகை 
மைதா – 1 கப்
சமையல் சோடா – 1/4 தேக்கரண்டி
எண்ணெய் பொரித்தெடுப்பதற்கு .
செய்முறை :
) ஒரு பாத்திரத்தில் தயிர் , உப்பு , சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து கலக்கவும் .
) நுரைவரும்வரை கலக்கவும் ,பின்னர் அத்துடன் சமையல் சோடா சேர்த்து அடிக்கவும் , நன்றாக பொங்கி 3 / 4 கப் அளவிற்கு வரும்.

) இப்பொழுது மைதா சேர்த்து கலக்கவும் .கலவை பசை பக்குவத்தில் இருக்கும்.
) பாத்திரத்தை 6 மணிநேரம் மூடி வைக்கவும்.
) 6 மணிநேரத்திற்கு பிறகு , மாவு பிசு பிசுப்பான மாவு பக்குவத்தில் இருக்கும்.

) மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி , மைதா மாவில் ஒரு முறை புரட்டி எடுத்து வைக்கவும் .

) சமமான இடத்தில சிறிதளவு மைதா தூவி , குபூஸ் உருண்டைகளை ஒன்றொன்றாக அதில் வைத்து தடினமான பூரிகளாக தேய்க்கவும் .
) வாணலியில் எண்ணெய் சூடாக்கி ,தேய்த்த பூரிகளை ஒன்றொன்றாக மிதமான சூட்டில் , பொன்னிறமாக இருபக்கமும் பொல்லும் வரை பொரித்தெடுக்கவும் .
) எண்ணையை வடித்து சூடாக சுவைக்கவும் .
குறிப்பு :
) நல்ல தரமான தயிரை உபயோகிக்கவும் .
) பூரி தேய்க்கும் பொழுது மெதுவாக ,நிதானமாக தேய்க்கவும் .
) வேண்டுமென்றால் சர்க்கரை அளவை அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...