Showing posts with label CAKE RECIPES. Show all posts
Showing posts with label CAKE RECIPES. Show all posts

Tuesday, 9 January 2018

ரெட் வெல்வெட் ரவா கேக்

ரெட் வெல்வெட் ரவா கேக்


TO VIEW IN ENGLISH : CLICK HERE

வணக்கம் ,
ரெட் வெல்வெட் ரவா கேக் / பசுபோஸ ..நான் ஏற்கனவே ஆங்கிலத்தில் ரவா கேக் ரெசிபி போஸ்ட் சேர்த்துளேன் .இது அந்த கேக்கில் இருந்து சிறிது மாறுதல் செய்த ரெட் வெல்வெட் ரவா கேக்.எனது மகளின் பள்ளியில் சத்தான ஸ்னாக் மட்டுமே கொடுத்தனுப்பவேண்டும் என்பது விதிமுறை ,அதனால் ஏதாவது சத்தான மற்றும் சுவையானதாக செய்யவேண்டும் என்பதால் இந்த கேக்கை செய்தேன்.
மைதா மற்றும் கலர் இல்லாததால் குழந்தைகள் சாப்பிட தைரியமாக கொடுக்கலாம்.
சுவையான , குழைந்தைகள் விரும்பக்கூடிய ரெட் வெல்வெட் ரவா கேக் செய்முறை உங்களுக்காக கீழே,
அளவு : 25 கேக் துண்டுகள்.
தேவையானவை :
ரவை – 1கப்.
தயிர் – 1/4கப்
வெண்ணை – 1/4கப்
துருவிய தேங்காய் -1/4 கப்
சர்க்கரை – 1/2கப்
பேக்கிங் பவுடர் -1/2 தேக்கரண்டி
உப்பு -1/4 தேக்கரண்டி
வெண்ணிலா எசென்ஸ் – 1தேக்கரண்டி .
அரைத்த பீட்ரூட் – 1/2கப் ( செய்முறை கிழே).
வினிகர் -1/2 தேக்கரண்டி .
தேன் -1/4 தேக்கரண்டி
ரோஸ் வாட்டர் -1 தேக்கரண்டி
நட்ஸ் – சிறிது
மைதா – 1தேக்கரண்டி ( பேக்கிங் பானில் தூவுவதற்கு).
செய்முறை :

அ) 2 பீட்ரூட்களை 2 துண்டாக்கி குக்கர்இல் வைத்து , தேவையானளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் விடவும் . வெந்தவுடன் தோல் சீவி ,மைய அரைத்துக்கொள்ளவும்.

ஆ) அரைத்த பீட்ரூட்டிலிருந்து 1/2 கப் மட்டும் எடுத்துவைத்துக்கொள்ளவும் (மீதமிருக்கும் பீட்ரூட்டை குழம்பில் ஊற்றிக்கொள்ளலாம்).
இ)பேக்கிங் தட்டில் வெண்ணை தடவி , மைதா மாவு தூவி தனியே வைக்கவும் .

ஈ) ஒரு பாத்திரத்தில் ரவா , பேக்கிங் பவுடர் , சர்க்கரை , தேங்காய் ,உப்பு சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.

உ ) அத்துடன் வெண்ணை , தயிர் ,வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலங்கும்படி கலக்கவும்.
ஊ ) பின்னர் அரைத்த பீட்ரூட் சேர்த்து கலக்கவும் .

எ) இறுதியாக வினிகர் சேர்த்து கலக்கி ,மாவு தூவிய பேக்கிங் தட்டில் ஊற்றவும்.

ஏ) மேலே நட்ஸை வைத்து , பிரிட்ஜ்ல் அரைமணிநேரம் வைக்கவும் , இதனால் ரவா நன்றாக ஊறி , சரியான பதத்திற்கு வந்துவிடும்.

ஐ) ஓவென்ஐ 170 ” சி – 30 நிமிடம் ப்ரீ-ஹீட் செய்யவும்.
ஒ) பேக்கிங் தட்டை பிரிட்ஜ்ல் இருந்து எடுத்து ,கத்தியால் தேவையனாளவில் கீறல் போட்டு , ப்ரீ-ஹீட் செய்த ஓவெனில் வைத்து அரைமணிநேரம் அல்லது கத்தி சுத்தமாக வரும்வரை வேகவிடவும்.

ஒவ்) ஒரு சிறிய பாத்திரத்தில் தேன் மட்டும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கி , கேக் வெதுவெதுப்பாக இருக்கும் பொழுதே மேலே தடவவும்.

அஅ) ஆரிய பின்பு , துண்டுகளாக்கி பிரிட்ஜ்ல் வைத்து சுவைக்கவும்.

குறிப்பு :
அ) நல்ல நிறம் உள்ள பீட்ரூட்டை உபோயோகிக்கவும்.

மாம்பழ ரவா கேக் ( முட்டையில்லாமல்)

மாம்பழ ரவா கேக் ( முட்டையில்லாமல்)

Posted in : CAKES AND BAKES on by : Saranya Arun Tags: , , , , , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
இந்த வருடம் எனது பிறந்தநாளுக்கு நானே கேக் செய்யவேண்டும் என்று நினைத்தேன்.அதனால் எதாவது சற்று ஆரோக்கியமாக செய்யலாம் என்று ரவா கேக் செய்தேன் , இப்பொழுது மாம்பழ சீசன் என்பதால் ரவா மாம்பழ கேக் செய்தேன்.மேலும் முதல்முறையாக மாம்பழ ஜெனாச்சே செய்து கேக்ஐ ஜொலிக்கவைத்தேன்🙂 .அத்துடன் வெண்ணைகிரீம் மேலே வைத்து சுவையை கூட்டிவிட்டேன்.எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது , பார்ப்பதற்கு கடினமாக இருந்தாலும் செய்வது மிகவும் எளிது.நான் வெள்ளை சர்க்கரை சேர்த்தேன் , நீங்கள் கரும்பு சர்க்கரை சேர்த்து இன்னும் சத்தாக்கிக்கொள்ளலாம்.
சுவையான , சத்தான ,மாம்பழ ரவா கேக் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
ரவா – 2கப் / 360கிராம்.
மாம்பழ கூல் -1 1/2 கப்
வெண்ணை – 1/2 கப் /100 கிராம் ( மெருதுவாக இருக்கவேண்டும்)
சர்க்கரை – 1 1/2கப் / 320 கிராம்
பேக்கிங் பவுடர் -2 தேக்கரண்டி
ஏலம் -5

மைதா -1 தேக்கரண்டி
செய்முறை :

) ஓவென்ஐ 170 ” சி – 35 நிமிடம் ப்ரீஹீட் செய்யவும்.
பேக்கிங் தட்டில் , வெண்ணை தடவி , மாவு தூவி தனியே வைக்கவும்.

) சர்க்கரை பெரியதரியாக இருந்தால் அரைத்து பொடியாக்கிக்கொள்ளவும்.
) ஒரு பாத்திரத்தில் ரவா , சர்க்கரை , பொடித்த ஏலம் , பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

) அத்துடன்  வெண்ணை சேர்த்து கலக்கி , மாம்பழ கூல் ஊற்றி நன்றாக கலக்கவும்.கலவை ஒரு 15 நிமிடம் ஊறவேண்டும் .



) 15 நிமிடத்திற்கு பிறகு , கேக் கலவையை பேக்கிங் தட்டில் ஊற்றி 35 நிமிடம் வேகவிடவும்.ஒரு கத்தியை கேக் நடுவே செலுத்தினால் ஒட்டாமல் ,சுத்தமாக வரவேண்டும்.

) வெந்த கேக்ஐ வெளியே எடுத்து , ஆறவிட்டு , பிறகு பேக்கிங் தட்டில் இருந்து எடுத்து ஒரு 30 நிமிடம் நன்றாக ஆறவிடவும்.

) கேக்ஐ வெட்டி சுவைக்கலாம் , அல்லது ஜெனாச்சே மேலே ஊற்றியும் சுவைக்கலாம்.
ஜெனாச்சே செய்முறை :
தேவையானவை :
ஜெலட்டின் – 1 மேஜைக்கரண்டி.
மாம்பழ கூல் -1/2 கப்
சர்க்கரை -2 மேஜைக்கரண்டி
தண்ணீர் – 150 மில்லி.
செய்முறை :
) பாத்திரத்தில் தண்ணீர் , சர்க்கரை சேர்த்து ,சர்க்கரை கலங்கும்வரை கொதிக்கவிடவும்.

) அத்துடன் ஜெலட்டின் சேர்த்து ,நன்றாக கலங்கும்வரை கலக்கவும் .
) பின்னர் மாம்பழ கூல் சேர்த்து  கலக்கி , ஆறவிடவும்.


) ஆரிய பின்னர் கேக்இன் மேல் இந்த ஜெனாச்சேஐ சமமாக ஊற்றவும் ( கரண்டியால் தடவாதீர்கள்) .

) கேக்ஐ பிரிட்ஜ்ல் ஒரு அரைமணிநேரம் ஜெனாச்சே கெட்டியாகும் வரை வைத்து , வெட்டி சுவைக்கலாம் .

) நான் அதன் மேல் வெண்ணைகிரீம் வைத்தேன் , நீங்கள் வெண்ணைகிரீம் வைக்காமலும் சுவைக்கலாம். அனால் வெண்ணைகிரீம் , மாம்பழ காம்பினேஷன் நன்றாக இருந்தது.

குறிப்பு :
) மாம்பழ கூல் தண்ணீராகவும் இல்லாமல் அதிக கெட்டியாகவும் இல்லாமல் கிரீம் போல் இருக்கவேண்டும்.தண்ணீராக இருந்தால் ரவையுடன் கலக்கிபின்பு அதிகநேரம் வைத்திடுங்கள் , இதனால் ரவை தண்ணீரை உறிஞ்சிவிடும்.
) மாம்பழ கூல் கெட்டியாக இருந்தால் , சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.


ரம் சாக்லேட் கேக்

ரம் சாக்லேட் கேக்


TO VIEW IN ENGLISH : CLICK

வணக்கம் ,
கிறிஸ்துமஸ் கேக் செய்தபிறகு மீதமிருந்த ரம்ஐ தீர்ப்பது பெரும்பாடாகிவிட்டது.
ஆரஞ்சு காக்டெய்ல் , மறுபடியும் ஒரு முறை கிறிஸ்துமஸ் கேக் எல்லாம் செய்தபிறகும் 1 / 2 கப் ரம் இருந்தது .இறுதியாக சாக்லேட் கேக் செய்து முடித்தேன்.
சுவையான சாக்லேட் கேக் ரெசிபி உங்களுக்காக ,
தேவையானவை :
மைதா – 2கப் /265 கிராம்.
சர்க்கரை -1 3/4கப் / 380 கிராம்.
எண்ணெய் – 3/4கப்.
முட்டை – 4
கோகோ பவுடர் – 1கப்.
ரம் – 1/2 கப்.
பேக்கிங் பவுடர் – 1தேக்கரண்டி
சமையல் சோடா – 1 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி.
ஜாதிக்காய் பொடி – 1/8 தேக்கரண்டி
சுடு நீர் – 1கப்.
வெண்ணிலா எசென்ஸ் – 1தேக்கரண்டி .
செய்முறை :

அ) ஓவென்ஐ 170 ” சி – 30 நிமிடத்திற்கு ப்ரீ-ஹீட் செய்யவும் .
ஆ) பேக்கிங் தட்டில் வெண்ணை (அல்லது) எண்ணெய் தடவி ,மைதா தூவி வைக்கவும் .

இ) மைதா , உப்பு , கோகோ பவுடர் , பேக்கிங் பவுடர் , சமையல் சோடா , ஜாதிக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாக சலித்து வைத்துக்கொள்ளவும் .

ஈ) எண்ணெய் மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலங்கும்படி அடித்துக்கொள்ளவும் .

உ) அத்துடன் முட்டை ஒன்றொன்றாக எண்ணெய் கலவையுடன் சேர்த்து அடித்துக்கொள்ளவும்.

ஊ) இந்த கலவையை ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் மைதா கலவை மற்றும் சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலக்கவும்.
எ) இறுதியாக ரம்ஐ ஊற்றி கலக்கவும் .

ஏ) கேக் கலவை ரிப்பன் பக்குவத்தில் இருக்கவேண்டும் , கெட்டியாக இருந்தால் சுடு தண்ணீர் சிறிது சிறிதாக சேர்க்கலாம் .

ஐ) கேக் கலவையை மாவு தடவிய பேக்கிங் தட்டில் ஊற்றி , 30 நிமிடம் அல்லது கத்தி சுத்தமாக வரும்வரை வேகவிடவும் .

ஓ) கேக் வெந்ததும் ஓவென்இலிருந்து வெளியே எடுத்து நன்றாக ஆறவிடவும்.

ஒவ்) பிரிட்ஜ்ல் சிறிதுநேரம் வைத்தபிறகு , இரண்டாக வெட்டி பிடித்தமான கிரீம் தடவவும்.நான் சாக்லேட் கிரீம் பிரோஸ்ட்டிங் செய்தேன்.

குறிப்பு :
அ) வேகும் நேரம் ஒவொரு ஒவேணுற்கும் வேறுபடும் , அதனால் 30 நிமிடத்திற்கு பிறகு , கத்தியை உள்ளே செலுத்தி சுத்தமாக வரவில்லையென்றால் இன்னும் 5 நிமிடம் வேகவிடவும் .
ஆ) பிரோஸ்ட்டிங் செய்வதற்கு முன்பு பிரிட்ஜ்ல் வைப்பதனால் கேக் பிய்ந்துபோகாமல் ,சுலபமாக வெட்டலாம் .

முட்டை இல்லாத வெண்ணிலா கேக்

முட்டை இல்லாத வெண்ணிலா கேக்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
முட்டை இல்லாத வெண்ணிலா கேக்!! நான் இதுவரை முட்டை இல்லாத கேக் செய்தது இல்லை.எனது பக்கத்து வீடு புது மணத்தம்பதிகள் காதலர் தினத்தன்று முட்டை இல்லாத கேக் என்னிடம் கேட்டபோது முடியாது என்று சொல்லமுடியவில்லை.
அதனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்று செய்துவிட்டேன்.
முட்டை இல்லாத கேக் மிகவும் எளிது ,சீக்கிரமும் செய்துவிடலாம்.
சுலபமான முட்டையில்லாத கேக் செய்முறை உங்களுக்காக

தேவையானவை :
மைதா – 1 1 / 2 கப் / 180 கிராம்.
பேக்கிங் பவுடர் – 1 1 /4 தேக்கரண்டி.
பேக்கிங் சோடா – 1 / 2 தேக்கரண்டி.
சர்க்கரை – 3 / 4 கப் / 150 கிராம்.
உப்பு – 1 / 4 தேக்கரண்டி.
ரீபைன்ட் ஆயில் – 1 / 2 கப் / 120 மில்லி.
கெட்டி தயிர் – 1 கப் / 240 மில்லி.
பால் – தேவையான அளவு.
வெண்ணிலா எசென்ஸ் – 1 தேக்கரண்டி.
செய்முறை :
௧) ஓவென் 170 ” சி -40 நிமிடம் ப்ரீ-ஹீட் செய்யவும்.
௨) மைதா , பேக்கிங் பவுடர் , பேக்கிங் சோடா ஆகியவற்றை சலித்து ,கலக்கிக்கொள்ளவும்.
௩) மிக்ஸி அல்லது எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு தயிர் , வெண்ணிலா எசென்ஸ் இரண்டையும் நன்றாக அடித்துக்கொள்ளவும்.
௪) அத்துடன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலங்கும்படி அடிக்கவும்.
௫) தற்போழுது சர்க்கரை சேர்த்து , சர்க்கரை நன்றாக கலங்கும்வரை அடிக்கவும்.

௬) சர்க்கரை ,தயிர் – எண்ணெய் கலவையுடன் கலங்கியவுடன் , ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
௭) மேலே சொன்ன தயிர் கலவையுடன் , மைதா கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.

௮) மாவு முழுவதும் கலங்கும்படி கலக்கவும் , தற்பொழுது கேக் மாவு ரிப்பன் பக்குவத்தில் இருக்கவேண்டும்.
௯) கலவை கெட்டியாக இருந்தால் பால் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கி , ரிப்பன் பக்குவத்திற்கு கொண்டுவரவும்.
௯) கலவை கெட்டியாக இருந்தால் பால் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கி , ரிப்பன் பக்குவத்திற்கு கொண்டுவரவும்.
 ௯) கலவை கெட்டியாக இருந்தால் பால் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கி , ரிப்பன் பக்குவத்திற்கு கொண்டுவரவும்.

 ௧௧) பேக்கிங் டிரேயில் எண்ணெய் தடவி , சமமாக மைதா மாவு தூவி , அதில் கேக் கலவையை அதில் ஊற்றவும்.ஓவெனில் வைத்து 40 நிமிடம் அல்லது ஒரு கத்தியை கேக்கின் உள்ளே செலுத்தினால் அதில் மாவு ஒட்டாமல் சுத்தமாக வரும்வரை வேகவிடவும்.
௧௩) ஒவேனிலிருந்து கேக் வெளியே எடுத்து ஆறும் வரை வைத்து , பின்னர் உங்கள் விருப்பம் போல் கிரீம் தடவி , அல்லது அப்படியேவும் சுவைக்கலாம்.நான் கிரீம் சீஸ் தடவினேன்.


குறிப்பு :
௧) கேக் வேகும் நேரம் வேறுபடலாம் , அதனால் அரைமணிநேரம் கழித்து , கத்தியை விட்டுப்பார்த்து வேகவிடவும்.
௨) எண்ணெய்க்கு பதில் வெண்ணையும் சேர்க்கலாம்.
௩) என்னுடைய கேக்கிற்கு 60 மில்லி பால் தேவைப்பட்டது , அனால் அது வேறுபடலாம் , ஆகையால் தங்கள் சிறிது சிறிதாக சேர்த்துக்கொள்ளவும்.             

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...