Showing posts with label IDLI RECIPES. Show all posts
Showing posts with label IDLI RECIPES. Show all posts

Wednesday, 10 January 2018

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

 கடலைப்பருப்பு இனிப்பு இட்லி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
மூன்று வாரங்களுக்கு பின்பு இன்றுதான் எனது வெப்சைட்ஐ திறந்துள்ளேன் .
இந்த வருட கோடை விடுமுறை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது , ஆனால் மொபைல் நெட்ஒர்க் சரியாக வேலை செய்யாததால் ரெசிபி போஸ்ட் செய்யமுடியவில்லை.இன்று நான் உங்களுக்காக ஒரு சுலபமான ,மாலை நேர தேநீருடன் சாப்பிட சுவையான ஸ்னாக்கடலைப்பருப்பு இனிப்பு இட்லி ரெசிபி போஸ்ட் செய்யவுள்ளேன் .
நாங்கள் பொள்ளாச்சியில் இருந்தபொழுது எனது அம்மா எங்களுக்காக இந்த இட்லியை செய்தார்கள் , மிகவும் மெதுமெதுவென்று , அளவான இனிப்புடன் ,சூடாக இருந்தது .
சுவையான கடலைப்பருப்பு இனிப்பு இட்லி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
கடலை பருப்பு – 300 கிராம் .
பச்சரிசி – 25 கிராம்.
வெல்லம் – 200 கிராம் .
துருவிய தேங்காய் – 1 கப் (தேவையென்றால் இன்னும் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்).
சமையல் சோடா – 1 / 4 தேக்கரண்டி .
ஏலம் – 4 .
செய்முறை :
) கடலைபருப்பு மற்றும் அரிசியை நன்றாக கழுவி , போதுமான தண்ணீரில் சுமார் 8 மணிநேரம் ஊறவைக்கவும் .

) ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசியை தண்ணீர் வடித்துவிட்டு , கரகரப்பான பதத்திற்கு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
) இறுதியாக வெல்லம் மற்றும் ஏலம் சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும் .

) ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து , அத்துடன் துருவிய தேங்காய் , சமையல் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும் .

) கலவை இட்லி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும் , கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
) இட்லித்தட்டில்  இட்லி போல் ஊற்றி , 10 நிமிடம் (கத்தி ஒட்டாமல் வரும் வரை) வேகவைத்து எடுக்கவும் .

) சூடான ,சத்தான இனிப்பு இட்லி தயார் .சூடாக பரிமாறவும் .

குறிப்பு :
) வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை சேர்க்கலாம் , ஆனால் பனை வெல்லம் அல்லது கரும்பு வெல்லம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Friday, 5 January 2018

காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் இட்லி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
காஞ்சிபுரம் இட்லி ! காஞ்சிபுரத்தில் இந்த இட்லி மிகவும் பிரபலம் , அங்கு இட்லியை மூங்கில் குழாயில் செய்வார்கள் மேலும் ஒரு சில இடங்களில் வாழை இலையில் செய்வதும் உண்டு.காலை நேர உணவாக இட்லி செய்வது எனக்கு மிகவும் சௌகரியம் ,அவசரத்தில் யாரும் சரியாக சாப்பிடமாட்டார்கள் அதனால் இட்லி செய்தல் விரைவாக மற்றும் நிறைவாக சாப்பிடுவார்கள்.
எப்பொழுதும் ஒரே மாதிரி இட்லி செய்யாமல் சற்று வித்யாசமாக செய்யலாம் என்று இந்த காஞ்சிபுரம் இட்லியும் , தட்ட இட்லியும் செய்தேன் , இரண்டுமே அருமையாகவும் ,வித்தியாசமாகவும் இருந்தது.நான் வாழையிலையில் செய்தேன் , உங்களுக்கு வாழையிலை கிடைக்கவில்லையென்றால் சாதாரணமாக இட்லி தட்டில் இட்லி போல் ஊற்றியும் செய்யலாம்.
பாரம்பரிய காஞ்சிபுரம் இட்லி செய்முறை கிழே,
நேரம் : 10 மணிநேரம்
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
நபர்கள் : 10
தேவையானவை :
பச்சரிசி – 1கப்
இட்லி அரிசி – 1கப்
உளுந்து – 1கப்
வெந்தயம் – 1தேக்கரண்டி
உப்பு தேவையானஅளவு
கடுகு – 1தேக்கரண்டி
கடலை பருப்பு -1 தேக்கரண்டி
கருவேப்பில்லை ஒரு கொத்து
மிளகு – 1தேக்கரண்டி
சீரகம் – 1தேக்கரண்டி
முந்திரி – 10
இஞ்சி – 1தேக்கரண்டி (நறுக்கிய ).
நெய் – 2தேக்கரண்டி
செய்முறை :
) பச்சரிசி மற்றும் இட்லி அரிசியை கழுவி , நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

) உளுந்து ,வெந்தயத்தை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
) ஊறியபின் முதலில் உளுந்து ,வெந்தயத்தை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

) பின்பு ஊறவைத்த அரிசியை தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
) அரிசி மாவு மற்றும் உளுந்து மாவை ஒன்றாக சேர்த்து , உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.மாவை மூடிவைத்து சுமார் 8 மணிநேரம் புளிக்கவிடவும்.

)8 மணிநேரம் புளித்த பிறகு மாவு நன்றாக பொங்கி வரும் ,கலக்கி வைக்கவும்.
) சீரகம் மற்றும் மிளகை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

) ஒரு சிறிய வாணலியில் நெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொறித்த பின் , கடலை பருப்பு ,முந்திரி ,கருவேப்பில்லை சேர்த்து வறுக்கவும்.அத்துடன் சீராக மிளகு பொடியை சேர்த்து ஒரு முறை வறுத்து மாவுடன் சேர்த்து கலக்கவும்.
) இட்லி தட்டில் ,வாழையிலை  வைத்து அதன் மேல் இட்லி மாவை ஊற்றி ,15 நிமிடம் ,இட்லி வேகும் வரை வேகவிடவும்.
) வாழையிலை இல்லையென்றால் சாதாரண இட்லி போலும் ஊற்றலாம்.
ஓஒ) நான் டிபன் சாம்பாருடன் பரிமாறினேன் , நீங்கள் சாம்பார் அல்லது காரச்சட்னியுடன் பரிமாறலாம்.


W3Counter Web Stats

கர்நாடக தட்ட இட்லி

கர்நாடக தட்ட இட்லி

Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
கர்நாடக தட்ட இட்லி ! நாங்கள் பெங்களூரு வந்த முதல் நாள் இந்த இட்லியை சுவைத்தேன்.அன்று எங்கள் பொருட்கள் எல்லாம் வர தாமதம் ஆனதால் பக்கத்தில் இருந்த ஹோட்டலில் இட்லி வாங்கினோம் , இட்லியை பார்த்ததும் எனக்கு ஒரே அதிர்ச்சி , தட்டையாக இருந்தது .ஹோட்டலில் தவறாக கொடுத்துவிட்டார்கள் என்று நினைத்து கேட்டபொழுது ,இது கர்நாடக புகழ் தட்ட இட்லி என்றார்கள் .
சுவைத்த பின் தான் தெரிந்தது இது நிச்சயம் புகழ் பெற்ற உணவுதான் என்று , மிகவும் மெது மெதுவென்று ,சுவையாக சாம்பாருடன் சாப்பிட அருமையாக இருந்தது.அன்றிலிருந்து இந்த இட்லியை வீட்டில் செய்யவேண்டும் என்று நினைத்து இன்று செய்தேன்.
சுவையான , தட்ட இட்லி செய்முறை உங்களுக்காக ,
ரெசிபி : smithakalluraya.com.
தேவையானவை :
பச்சரிசி – 4 கப் .
உளுந்தம் பருப்பு -1 கப்
அவல் -1 கப்.
ஜவ்வரிசி – 1/2 கப்.
சமையல் சோடா – 1/2 தேக்கரண்டி.
உப்பு தேவையான அளவு .
நெய் -1 தேக்கரண்டி .
செய்முறை :
) அரிசி , பருப்பு மற்றும் ஜவ்வரிசியை நன்றாக கழுவி , தனி தனியாக ஊறவைக்கவும் .அரிசி , ஜவ்வரிசியை 4 மணி நேரமும் , உளுத்தம்பருப்பை 1 .5 மணி நேரமும் ஊறவைக்கவும்.

) ஊறவைத்தபிறகு உளுந்தம் பருப்பை முதலில் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும் .

) பின்னர் அரிசி,ஜவ்வரிசி , அவல் ஆகியவற்றை அரைத்து , உளுந்தம் மாவுடன் சேர்த்து கலக்கவும் .

) உப்பு சேர்த்து கலக்கி , 8 மணிநேரம் புளிக்கவிடவும்.
) மறுநாள் மாவு புளித்து பொங்கிவரும் , அத்துடன் சமையல் சோடா சேர்த்து கலக்கவும் .

) விளிம்பு சற்று உயரமாக இருக்கும் தட்டில் நெய் தடவி , அரை தட்டிற்கு மாவை ஊற்றி மிதமான சூட்டில் 15 நிமிடம் அல்லது கத்தி சுத்தமாக வரும்வரை வேகவிடவும் .

) வாழை இழை இருந்தால் தட்டின் மேல் இழை வைத்து மாவை ஊற்றி வேகவிடலாம்.
.

) இட்லி வெந்தவுடன் , அடுப்பில் இருந்து இறக்கி ஒரு நிமிடம் காத்திருக்கவும் , பின்பு தட்டில் இருந்து எடுத்து பெரியதுண்டுகளாக வெட்டி சாம்பாருடன் அல்லது விருப்பமான சட்னியுடன் பரிமாறலாம் ,நான் தக்காளி குழம்புடன் பரிமாறினேன்.


குறிப்பு :
) சமையல் சோடா சேர்க்காமலும் இட்லி நன்றாக இருக்கும் .
) வாழை இழையில் வேகவைப்பது ஆரோகியத்திற்கு மிகவும் நல்லது , அது மட்டுமல்லாது இட்லியின் சுவையும் கூடும்.
) இட்லியை அதிகநேரம் வேகவைக்கவேண்டாம்.
) இட்லி வெந்தபிறகு ஒரு நிமிடம் கழித்து ,தட்டில் இருந்து எடுத்தால் இட்லி வெட்டுவதற்கு சுலபமாக ,பிய்ந்துபோகாமல் வரும்.
) மீதமிருக்கும் இந்த இட்லி மாவில் தோசையும் செய்யலாம் ,மெல்லிய தோசையாக இல்லாமல் ஊத்தப்பம் போல் செய்தால் சுவை நன்றாக இருக்கும்                

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...