Showing posts with label SALAD RECIPES. Show all posts
Showing posts with label SALAD RECIPES. Show all posts

Thursday, 11 January 2018

பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் பழ சாலட்

பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் பழ சாலட்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
பழசாலட்..சித்திரை கனி அன்று பொள்ளாச்சி அய்யப்பன் கோவிலில் பிரசாதமாக இந்த பழங்கள் கலவையை வழுங்குவார்கள் , சுவை தேவார்மிதமாக இருக்கும்.நானும் அதேபோல் சாலட் செய்யவேண்டும் என்று இந்த சாலட்ஐ செய்தேன் .
நான் ஐஸ்கிரீம் உடன் பரிமாறினேன் நீங்கள் தெய்வத்திற்கு படைக்கும்பொழுது ஐஸ்கிரீம் இல்லாமல் , பழங்களுடன் தேன் கலந்து படைக்கவும்.
தேவையானவை :
பலாப்பழம் – 8 சொலை .
திராட்சை – 1 /2 கப்.
ஆப்பிள் -1
கொய்யா -1
வாழைப்பழம் -1
மாம்பழம் -1
பேரிச்சம்பழம் -5
மாதுளம்பழம் – 1 /2 கப்.
தேன் – 2 தேக்கரண்டி
நெயில் வறுத்த முந்திரி – 2 தேக்கரண்டி
ஐஸ் கிரீம் – 1 ( தேவையென்றால் ).
செய்முறை :

) திராட்சையை தவிர மற்ற பழங்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும் .

) ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பழங்கள் , திராட்சை சேர்த்து மெதுவாக கலக்கிக்கொள்ளவும்.

) பரிமாறுவதற்கு முன்பு வறுத்த முந்திரி , தேன் சேர்க்கவும் .

) ஐஸ்கிரீம் சேர்ப்பதாக இருந்தால் சாப்பிடுவதற்கு முன்பு சலாடின் மேல் ஐஸ்கிரீம் வைத்து கொடுக்கவும்.


குறிப்பு :
) கடவுளுக்கு படைக்கப்படுவதென்றால் ஐஸ்கிரீம் சேர்க்காமல் படைக்கவும்.
) தங்கள் விருப்பம் போல் பழங்கள் சேர்க்கலாம் .
) சாலடை பிரிட்ஜ்ல் ஒரு மணிநேரம் வைத்தும் உண்ணலாம்.ஆனால் தேன் மற்றும் முந்திரியை உண்ணும் முன்பு சேர்க்கவும் .

Friday, 5 January 2018

காய்கறிகள் சாலட்

காய்கறிகள் சாலட்


TO VIEW IN ENGLISH : CLICK

வணக்கம் ,
காய்கறிகள் சாலட் ! நான் பேலியோ டயட் தொடங்கும் முன் இந்த சாலடை அடிக்கடி செய்வேன் , இப்பொழுது பேலியோவில் மாங்காய் சேர்க்கக்கூடாது என்பதால் மாங்காய்யை தவிர்த்து மற்றவைகளை சேர்த்து காலை உணவாக அல்லது மதியஉணவாக எடுத்துக்கொள்வேன்.
சுலபமான,சத்தான சாலட் செய்முறை உங்களுக்காக,
தேவையானவை :
முட்டைகோஸ் – 1 / 2 கப்.
கேரட் – 1 .
மாங்காய் – 1 .
குடை மிளகாய் – 1
எலுமிச்சை – 1 / 2 மூடி.
வெள்ளரிக்காய் – 1 .
குருமிளகு தூள் – 1 தேக்கரண்டி .
உப்பு – தேவையானஅளவு .
செய்முறை :

அ) அணைத்து காய்கறிகளையும் நன்றாக கழுவி , சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும் .
ஆ) நறுக்கிய காய்களுடன் , எலுமிச்சை சாறு , உப்பு ,மிளகு தூள் சேர்த்து சுவைக்கலாம் .குறிப்பு :
அ) சாலடை செய்தவுடன் சாப்பிடவும் , முடியவில்லை என்றால் ஒரு நாள் பிரிட்ஜ்ல் வைக்கலாம் .
ஆ) பிடித்தமான காய்களை சேர்க்கலாம் .
இ) ஆலிவ் ஆயில் சிறிது சேர்க்கலாம் , நான் ஆலிவ் ஆயில் உபோயோகிப்பது இல்லை அதனால் நான் சேர்க்கவில்லை .
ஈ) பேலியோ டயட் என்றால் மாங்காய் சேர்க்கக்கூடாது .    
W3Counter Web Stats

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...