Showing posts with label PALEO RECIPES. Show all posts
Showing posts with label PALEO RECIPES. Show all posts

Tuesday, 16 January 2018

பேலியோ சுரைக்காய் கூட்டு

பேலியோ சுரைக்காய் கூட்டு

TO VIEW IN ENGLISH : PLS CLICK 

வணக்கம் ,

பேலியோ சுரைக்காய் கூட்டு ! எப்பொழுதும் எனது பிரிட்ஜ்ல் சுரைக்காய் இருக்கும்.இந்த கூட்டை நான் வாரத்திற்கு மூன்று முறையாவது செய்துவிடுவேன்.மிக குறைந்த நேரத்தில் ,திருப்திகரமாக சாப்பிடக்கூடிய பேலியோ உணவு.மேலும் சுரைக்காய் எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
எனது விருப்பமான பேலியோ உணவு செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
சுரைக்காய் – 2 கப்.
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி .
உப்பு – தேவையானஅளவு.
தேங்காய் – 1/8 கப்.
வர மிளகாய் -4
தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டி.
கருவேப்பிலை – ஒரு கொத்து.
கடுகு – 1/4 தேக்கரண்டி.
செய்முறை :
அ) சுரைக்காயினை தோல் சீவி , விதைகளை நீக்கிவிட்டு , சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
ஆ) பாத்திரத்தில் உப்பு , மஞ்சள் தூள் , தேவையான அளவு தண்ணீருடன் சுரைக்காய்ஐ வேகவைக்கவும்.

இ) தேங்காய் , வரமிளகாய் இரண்டையும் சிறிது தண்ணீர் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
ஈ) அரைத்த விழுதை வெந்த சுரைக்காயுடன் சேர்த்து , கெட்டியாகும் வரை சிறிது நேரம் வேகவிட்டு , அடுப்பில் இருந்து இறக்கவும்.
உ) ஒரு சிறிய வாணலியில் எண்ணெய் சூடாக்கி , கடுகு சேர்த்து , பொறிந்த பின்னர் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும் .

ஊ) தாளித்த பொருட்களை சுரைக்காயுடன் சேர்த்து ஒருமுறை கிளறி , பரிமாறவும்.
எ) நான் டயட்இல் இருப்பதால் ஆம்லெட்யுடன் உண்டேன் , நீங்கள் சாதத்துடன் ,சாம்பார் சாதத்துடன் , தோசை , சப்பாத்திஉடன் பரிமாறலாம்.
ஏ) தேங்காய் எண்ணெய் மட்டுமே இந்த கூட்டிற்கு நன்றாக இருக்கும் , வேறு எண்ணெய் வேண்டாம்.
ஐ ) தேங்காய் விழுது சேர்த்தபிறகு அதிகநேரம் கொதிக்கவைக்கவேண்டாம் , அதனால் தேங்காய்ஐ கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

Friday, 5 January 2018

பேலியோ சாண்ட்விச் பிரட்

பேலியோ சாண்ட்விச் பிரட்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
பேலியோ சாண்ட்விச் பிரட் ! எனக்கு பேலியோவில் மிகவும் பிடித்த உணவு இந்த ரொட்டியாகும்.சீக்கிரம் செய்துவிடலாம் , மேலும் சத்தானது , சுவையானதும்கூட.
பேலியோ டயட் அல்லாது அனைவரும் சாப்பிட ஏற்றது .
சுவையான , சத்தான 1 நிமிட மைக்ரோவேவ் ( நுண்ணலை அடுப்பு) சாண்ட்விச் ரொட்டி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
பிரட் செய்வதற்கு :
பாதாம் பொடி – 1/3 கப்.
முட்டை – 1
பேக்கிங் பவுடர் -1/2 தேக்கரண்டி .
உப்பு -1/8 தேக்கரண்டி .
சாண்ட்விச் செய்வதற்கு :
தக்காளி – 1.
வெங்காயம் -1.
வெள்ளரி – 1/2.
சீஸ் – 2 தேக்கரண்டி
வெண்ணை – 1தேக்கரண்டி
செய்முறை :

அ) மைக்ரோவேவ் கப்பில் பாதாம் பொடி , உப்பு , பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஆ) அத்துடன் ஒரு முட்டை சேர்த்து கலக்கவும்.

இ) மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து 1 நிமிடம் அதிக சூட்டில் வேகவிடவும் , ஒரு குச்சியை கப்பின் நடுவே செலுத்தினால் அது ஒட்டாமல் வரவேண்டும்.
ஈ) பிரட் வெந்தவுடன் , அடுப்பில் இருந்து எடுத்து , ஆறவிட்டு , துண்டுகளாக்கவும்.
சாண்ட்விச் செய்வதற்கு :
அ) தோசை கல்லை சூடாக்கி , வெண்ணை தேய்த்து , ரொட்டி துண்டுகளை வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
ஆ) சுட்ட ரொட்டி மேல் சீஸ் ,நறுக்கிய தக்காளி , வெங்காயம் , வெள்ளரி வைத்து , மேலே ரொட்டி வைத்து மூடி சுவைக்கவும்.

குறிப்பு :
அ) ஈரப்பதம் இல்லாத பாதாமை பொடியாக அரைத்துக்கொள்ளவும் .
ஆ) காய்களுக்கு பதில் சிக்கன் அல்லது உங்களுக்கு பிடித்தமான இறைச்சியை சேர்க்கலாம்.
இ) ரொட்டியுடன் சீஸ் சுவையாக இருக்கும் , அதனால் சீஸ் நிச்சயமாக சேர்க்கவும்.

வாழைப்பழ பான் கேக் (வாழைப்பழ முட்டை தோசை)

வாழைப்பழ பான் கேக் (வாழைப்பழ முட்டை தோசை)


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
வாழைப்பழ பான் கேக் (வாழைப்பழ முட்டை தோசை) !
நான் இந்த பான் கேக்ஐ பேலியோ உணவாக எடுத்துக்கொள்வேன்.தமிழ் பேலியோவில் பழம் மற்றும் தேன் உண்ண அனுமதியில்லை , ஆனால் மற்ற பேலியோ குரூப்பில் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.அதனால் நான் எப்பொழுதாவது இந்த பான் கேக் செய்து சாப்பிடுவதுண்டு.
மேலும் இதில் மைதா மற்றும் சோடா சேர்க்காததால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மிகவும் ஆரோகியமானது.
வெறும் 3 பொருட்களை கொண்டு 10 நிமிடத்தில் செய்யக்கூடிய எளிமையான ,சத்தான வாழைப்பழ பான் கேக் செய்முறை உங்களுக்காக ,
செய்யும் நேரம் : 15 நிமிடம் .
நபர்கள் : 1 .
செய்முறை மூல காரணம் : gimmedelicious.com
தேவையானவை :
வாழைப்பழம் – 1
முட்டை – 2
பட்டை பொடி – ஒரு சிட்டிகை (தேவையென்றால் சேர்த்துக்கொள்ளலாம் ).
நெய் – 1தேக்கரண்டி
தேன் -1 தேக்கரண்டி .
செய்முறை :
அ) வாழைப்பழத்தை தோல் உரித்து , நன்றாக மசித்துக்கொள்ளவும்.
ஆ) அத்துடன் இரண்டு முட்டை சேர்த்து கலக்கவும்.
இ) பட்டை சேர்ப்பதாக இருந்தால் இப்பொழுது சேர்த்து கலக்கிக்கொள்ளலாம்.
ஈ) தோசை கல்லை சூடாக்கி , நெய் தடவி , இந்த மாவை 2 தேக்கரண்டி ஊற்றவும்.

உ) சிறிது நெய் தெளித்து , பொன்னிறமாகும் வரை வேகவிடவும்.

ஊ) பின்னர் மெதுவாக திருப்பி , மறுபக்கம் ஒரு நிமிடம் வேக விடவும்.

எ) வெந்தவுடன் தட்டிற்கு மாற்றிவிட்டு , இதே போல் அணைத்து பான் கேக்களையும் சுட்டு எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கவும்.

ஏ) இறுதியாக தேன் மேலே ஊற்றி ,சுவைக்கவும்.
குறிப்பு :
அ) நன்கு பழுத்த பழங்களை உபயோகிக்கவும் .
ஆ) எந்த ஒரு மாவும் சேர்க்காததால் பான் கேக் மிகவும் மிருதுவாக இருக்கும் ,திருப்பும் பொழுது பிய்ந்துவிடும் அதனால் சிறிய வட்டங்களாக ஊற்றினால் திருப்புவதற்கு சுலபமாக இருக்கும்.

Wednesday, 1 November 2017

எக்க் ரிங்ஸ் / முட்டை ரிங்ஸ்

TO VIEW IN ENGLISH : PLS CLICK

எக்க் ரிங்ஸ்

Posted in : DRY SIDEDISHES, SIDEDISH RECIPES on by : Saranya Arun Tags: , , ,

TO VIEW IN ENGLISH :  PLS CLICK

வணக்கம் ,
எக்க் ரிங்ஸ் !! வெங்காயத்தின் நடுவே முட்டை ஊற்றி ,மஞ்சள் கரு பத்தி வெந்ததும் சாப்பிட நன்றாக இருக்கும் .
நான் இந்த எக்க் ரிங்ஐ ,மதியம் அல்லது இரவு உணவாக சாப்பிடுவது வழக்கம்.
வெங்காயத்தின் நடுவே முட்டை ஊற்றுவதனால் முட்டை உடைந்து போகாமல் மெதுமெது என்று இருக்கும்.
இது என்னுடைய விருப்பமான பேலியோ உணவாகும் ,
தேவையானவை :
முட்டை – 2 .
பெரிய வெங்காயம் – 1 .
மிளகு தூள் – 1 / 4 தேக்கரண்டி .
உப்பு – சிறிது .
மல்லியிலை – சிறிது .
நெய் ( அல்லது ) தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி .
செய்முறை :
அ) வெங்காயத்தை நடுவில் வெட்டி , நடுவில் அரை சென்டிமீட்டர் வளையத்தை தனியே எடுக்கவும் .
ஆ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி வெங்காய வளையத்தை வைத்து ,பொன்னிறமாகும் வரை வேகவிடவும் .

இ) மறுபக்கம் திருப்பி மீண்டும் பொன்னிறமாக வேகவிடவும் .

ஈ) வெங்காயம் இருபக்கமும் நன்றாக வதங்கிய பின்பு , முட்டையை மெதுவாக உடைத்து வெங்காயத்தின் நடுவே ஊற்றவும் .

உ) முட்டையின் மேல் , நறுக்கிய வெங்காயம் , மிளகு , உப்பு , மல்லி இழை தூவி , குறைந்த சூட்டில் வேகவிடவும்
.
ஊ) வெள்ளை கரு நன்றாக வெந்து , மஞ்சள் கரு பாதி வெந்தவுடன் , அடுப்பில் இருந்து இறக்கி , சூடாக பரிமாறவும் .

எ) நான் இந்த முட்டையை மிளகு கோழி மசாலாவுடன் சேர்த்து எனது மத்திய உணவை முடித்தேன்.


W3Counter Web Stats

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...