Showing posts with label FESTIVAL RECIPES. Show all posts
Showing posts with label FESTIVAL RECIPES. Show all posts

Monday, 23 October 2017

பச்சை மிளகாய் அல்வா

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
கொச்சினில் இருக்கும் எனது சகோதரி இந்த அல்வாவை எங்களுக்கு வாங்கிவந்தார். பெயரே வித்யாசமாக இருந்தது , சுவையும் தான்.
உடனே செய்துபார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து , ஒரு முயற்சிக்கு பிறகு , கடையில் வாங்கிய அல்வாவை விட அருமையாக இருந்தது.

சுவையான , வித்யாசமான பச்சை மிளகாய் அல்வா செய்முறை உங்களுக்காக ,
சமையல் நேரம் : 1 மணிநேரம்
நபர்கள் : 5

தேவையானவை :
சோள மாவு - 1/4 கப்.
மைதா -1/4 கப்
பச்சை மிளகாய் - 4
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் -5 மேஜைக்கரண்டி
ஏலக்காய்- 3 (1/4 தேக்கரண்டி )
பச்சை கலர் - சிறிது ( தேவையென்றால் ).

செய்முறை :
) பச்சை மிளகாயினை கீறி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும்.
) வாணலியில் 1/4 கப் தண்ணீர் , 1 தேக்கரண்டி சர்க்கரை , பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
) தண்ணீரை வடித்துவிட்டு , மீண்டும் மிளகாயினை தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து வடிக்கவும் . இவ்வாறு 3 முதல் 4 முறை , மிளகாய் நிறம் மாறும்வரை கொதிக்கவைத்து வடிக்கவும் .
) மிளகாயினை சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
) ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு , மிளகாய் விழுது , கலர் பொடி( தேவையென்றால் ) , 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
) வாணலிலில் நெய் சூடாக்கி , அதில் மேலே கூறிய மாவு கலவையை சேர்த்து , மிதமான சூட்டில் வேகவிடவும்.
) அல்வா கெட்டியாகும் பொழுது , முந்திரி , ஏலப்பொடி சேர்த்து , நன்றாக எண்ணெய் திரண்டு வரும்வரை கிளறவும்.
) அல்வா வாணலியில் ஒட்டாமல் , திரண்டு வரும்பொழுது , நெய் தடவிய தட்டில் மாற்றி ஆறவிடவும்.
) ஆறியபின் வேண்டுமளவு வெட்டி பரிமாறவும்.
குறிப்பு :
) பச்சைமிளகாய் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
) அல்வாவின் நிறம் பச்சைமிளகாயின் நிறத்திற்கேற்றாற்போல் இருக்கும் , அதனால் நிறம் சேர்த்துக்கொள்ளலாம்.
) நெய் அளவை குறைக்காதீர்கள்.

Friday, 20 October 2017

இனிப்பு போண்டா

TO VIEW IN ENGLISH : PLS CLICK  HERE
வணக்கம் ,
இந்த இனிப்பு போண்டாவை ஆயுத பூஜா அன்று செய்தேன்.வேலை பளுவின் காரணமாக ரெசிபி போஸ்ட் செய்ய முடியவில்லை.
எளிதான , சத்தான இனிப்பு போண்டா செய்முறை கீழே,
தேவையானவை :
பச்சரிசி - 1 கப்
உளுந்து பருப்பு -1/2 கப்
சமையல் சோடா- ஒரு சிட்டிகை
உப்பு -ஒரு சிட்டிகை
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 3/4 கப்
எலுமிச்சை சாறு - 3 துளி
எண்ணெய்- பொரிப்பதற்கு
சிவப்பு கலர் -ஒரு சிட்டிகை

செய்முறை :
அ) அரிசி மற்றும் உளுந்து பருப்பை 4 மணிநேரம் ஊறவைக்கவும்.
ஆ) ஊறவைத்த அரிசி , பருப்பை தண்ணீர் சேர்க்காமல் மைய அரைத்துக்கொள்ளவும்.
இ) அரைத்த மாவுடன், உப்பு, சோடா, கலர் நன்றாக கலக்கவும்.
ஈ) ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கலங்கும் வரை அதிக சூட்டில் கொதிக்கவிடவும்.
உ) நெருப்பை குறைந்த சூட்டில் வைத்து ஒரு கம்பி பதம் வரும்வரை கொதிக்கவிடவும்.
ஊ) அடுப்பை அணைத்துவிட்டு , எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கிவிடுங்கள்.
எ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , மாவு கலவையை சிறு உருண்டைகளாக எண்ணையில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஏ) எண்ணெய் வடித்துவிட்டு சர்க்கரை பாகில் ஊறவைக்கவும்.
ஐ) ஒரு நாள் ஊறிய பின்பு ,வேறு பாத்திரத்தில் மாற்றி , ஒரு வாரம் வரை சுவைக்கலாம்.












































Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...