Showing posts with label SIDEDISH RECIPES. Show all posts
Showing posts with label SIDEDISH RECIPES. Show all posts

Wednesday, 14 February 2018

இறால் வெங்காய புளி குழம்பு

TO VIEW IN ENGLISH : PLS CLICK
இறால் வெங்காய புளி குழம்பு 

தேவையானவை :
இறால் - 500 கிராம்
சிறிய வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 2
புளி - நெல்லியளவு
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
பட்டை -1 " துண்டு - 1
தேங்காய் எண்ணெய்/ நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையானளவு
கருவேப்பிலை - ஒரு கொத்து

வறுத்து அரைப்பதற்கு :
தேங்காய் - 1/2 கப்
வரமல்லி - 2 மேஜைக்கரண்டி
சோம்பு - 1தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
சிறிய வெங்காயம் - 1/2 கப்
பட்டை -1 " துண்டு - 2
கருவேப்பிலை - ஒரு கொத்து .

செய்முறை :
) வாணலியை சூடாக்கி எண்ணெய் சேர்க்காமல் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
) வெங்காயம் சிறிது வதங்கியவுடன் , மல்லி , சோம்பு , மிளகாய் , கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் மிதமான சூட்டில் வதக்கவும் .
) இறுதியாக தேங்காய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கவும்.
) வறுத்தபொருட்கள் ஆறியவுடன் பட்டை சேர்த்து , சிறிது கரகரப்பாக தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும் .
) வெந்நீரில் புளியை 10 நிமிடம் ஊறவைத்து , சாறு எடுத்து வைக்கவும்.
) வாணலில் எண்ணெய் சூடாக்கி , கடுகு , வெந்தயம், பட்டை,கருவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
 எ) அத்துடன் அரைத்த விழுது , புளி தண்ணீர் சேர்த்து , பச்சை வாடை மறையும் வரை கொதிக்கவைக்கவும்.
) சுத்தம் செய்த இறால் , வெங்காயம் , உப்பு சேர்த்து , இறால் வேகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு:
) இறாலை உப்பு, எலுமிச்சை , மஞ்சள் தூள் சேர்த்து அரைமணிநேரம் ஊறவைத்து கழுவினால் வாடை இருக்காது.





Thursday, 11 January 2018

பெப்பர் சிக்கன் / மிளகு கோழி மசாலா

 பெப்பர் சிக்கன் / மிளகு கோழி மசாலா


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம்,
நாங்கள் வெளியே சாப்பிட சென்றால் முதலில் எனது கணவர் ஆர்டர் செய்வது பெப்பர் சிக்கன் தான் , மற்றவையெல்லாம் பிறகு தான் .நான் பெப்பர் சிக்கன் பலமுறை செய்தாலும் , இந்த ரெசிபி தான் ஹோட்டலில் கிடைப்பதுபோல் இருந்தது.
காரசாரமான மிளகு சிக்கன் கிரேவ்ய் உங்களுக்காக ,
தேவையானவை :
சிக்கன் – 1 கிலோ .
வெங்காயம் – 1
தக்காளி – 1 சிறியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மல்லி பொடி – 1 1/2 தேக்கரண்டி
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
சிக்கன் மசாலா – 1 தேக்கரண்டி ( தேவையென்றால் சேர்க்கலாம் ).
தயிர் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
உப்பு தேவையானளவு
கருவேப்பில்லை ஒரு கொத்து
நல்லெண்ணெய் ( அல்லது ) தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி .
அரைப்பதற்கு :
வெங்காயம் – 3
இஞ்சி – 1” துண்டு – 2
பூண்டு – 6 பல் .
வரமிளகாய் – 6
பட்டை -1” துண்டு – 2
கிராம்பு – 6
வறுத்து பொடித்துக்கொள்ள :
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1தேக்கரண்டி
செய்முறை :
) வெங்காயம் மற்றும் தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
) மிளகு , சீரகத்தை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் பொறியும் வரை வறுத்து பொடியாக்கிக்கொள்ளவும்.

) அரைக்கும் பொருட்களை ( வெங்காயம் , இஞ்சி ,பூண்டு , பட்டை , கிராம்பு ,மிளகாய்) சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளளவும் .


) குக்கர்இல் எண்ணெய் சூடாக்கி ,கடுகு ,சீரகம் சேர்த்து வறுத்து ,வெங்காயம் சேர்த்து வதக்கவும் . பின்னர் தக்காளி , அரைத்த விழுது சேர்த்து ,பச்சை வாடை போய், எண்ணெய் பிரித்து வரும்வரை வதக்கவும்.



) அத்துடன் மல்லி பொடி , மிளகாய் பொடி , மஞ்சள் தூள் , சிக்கன் மசாலா ,தயிர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் .

) பின்னர் சிக்கன் சேர்த்து கலக்கி , குக்கர்ஐ மூடி , 3 விசில் விடவும்.

) விசில் அடங்கியவுடன் , மூடியை திறந்து , தேவையான பதத்திற்கு வரும்வரை கொதிக்கவிடவும்.
) இறுதியாக மிளகு சீரக தூள் , கருவேப்பில்லை சேர்த்து கலக்கி 3 நிமிடம் வேகவிடவும்( ஒரு கொதிவந்தால் போதும்).

) இறுதியாக மல்லி இலை சேர்த்து ,அடுப்பில் இருந்து இறக்கவும்.


குறிப்பு :
) அவ்வப்போது அரைக்கும் மசாலாவில்தான் சுவை அதிகம்,அதனால் பிரெஷ் மசாலாவாக அரைத்துக்கொள்ளவும்.
) குக்கர்க்கு பதில் வாணலியில் செய்யலாம்.

கொண்டக்கடலை குழம்பு


 கொண்டக்கடலை குழம்பு


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
கொண்டக்கடலை குழம்பு ! நான் எப்பொழுதும் வெள்ளை கொண்டக்கடலை அதிகமாக உபயோகிப்பது இல்லை , கருப்பு கொண்டக்கடலை சுவை எங்களுக்கு பிடித்திருப்பதால் இதையே தான் வாங்குவேன்.
கொண்டக்கடலையில் புரதம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.எனது மகள் சுண்டல் சாப்பிடமாட்டாள் அதனால் பெரும்பாலும் குழம்புதான் செய்வேன் .
காரசாரமான கொண்டக்கடலை குழம்பு செய்முறை உங்களுக்காக ,
செய்யும் நேரம் : 30நிமிடம்.
நபர்கள் : 2
தேவையானவை :
கொண்டக்கடலை – 1/2கப்
வெங்காயம் – 1
கடுகு – 1/4தேக்கரண்டி
உப்பு – தேவையானவை
மல்லியிலை -2 தேக்கரண்டி
எண்ணெய் -1 தேக்கரண்டி
கருவேப்பிலை -சிறிது
வறுத்து அரைப்பதற்கு :
வெங்காயம் -1
வர மிளகாய் – 3
பூண்டு – 4
இஞ்சி – 1”
பட்டை – 1
கிராம்பு – 2
சோம்பு – 1தேக்கரண்டி
கசகசா -1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/2தேக்கரண்டி
வரமல்லி – 3தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4தேக்கரண்டி
வறுத்த கடலை – 1தேக்கரண்டி
தேங்காய் – 3தேக்கரண்டி
எண்ணெய் – 1தேக்கரண்டி
கருவேப்பிலை -சிறிது
செய்முறை :
அ) கொண்டக்கடலையை 8 மணிநேரம் ஊறவைத்து , குக்கரில் உப்பு , தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் விடவும்.

ஆ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி அரைக்கும் பொருட்களை பின்வருமாறு சேர்க்கவும் – வெங்காயம் , மிளகாய் ,இஞ்சி , பூண்டு , பட்டை , கிராம்பு ,சோம்பு , கசகசா , வரமல்லி , சீரகம் , மஞ்சள் தூள் ,கருவேப்பிலை சேர்த்து ,மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.

இ) மேலேயுள்ள பொருட்கள் வறுத்தவுடன் , அடுப்பில் இருந்து இறக்கி, வறுத்த கடலை , தேங்காய் சேர்த்து ஒரு முறை கலக்கவும் ( கடலை , தேங்காய் வறுக்கத்தேவையில்லை).

ஈ) சூடு ஆறியவுடன் வறுத்த பொருட்களை தேவையானளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

உ) பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொறிந்தபின் , வெங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி ,அரைத்த விழுதை சேர்த்து ,ஒரு கொதி விடவும்.

ஊ) குழம்பு கொதிக்காரம்பித்தவுடன் வேகவைத்த கொண்டைக்கடலையை அதன் தண்ணீருடன் சேர்த்து குழம்பில் ஊற்றி , கெட்டியாகவும் வரை கொதிக்கவிடவும்.

எ) இறுதியாக மல்லியிலை தூவி , அடுப்பில் இருந்து இறக்கி , இட்லி ,தோசை , சப்பாத்தி , ஆப்பம் என்று உங்கள் விருப்பம் போல் பரிமாறவும்.
குறிப்பு :
அ) வரமல்லிக்கு பதில் மல்லிப்பொடியும் சேர்க்கலாம் ,பொடி சேர்ப்பதாக இருந்தால் தேங்காயுடன் சேர்த்து சேர்க்கவும்.

ஆந்திர பப்பு

 ஆந்திர பப்பு


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
எனது அக்கா இந்த பப்புவை அடிக்கடி செய்வது வழக்கம் ,ஆனால் அவர்கள் காரம் இல்லாமல் ,புளிப்பு இல்லாமல் செய்வதால் எங்களுக்கு பிடிக்காது,அதனால் நான் ஆந்திர பப்பு செய்ய நினைத்ததே இல்லை.
சமீபத்தில் எனது வாசக தோழி சுகன்யா என்னிடம் இந்த பப்புவை பற்றி கேட்டார் , அவர் இதை ஹைதெராபாத் சென்றிருந்த பொழுது சுவைத்தார் எனவும் , காரமாக ,புளிப்பாக ,கீரையுடன் இருந்தது என்று கூறினார்.
அதன் பின்னர் எனது பக்கத்து வீடு ஆந்திர ஆண்ட்டியிடம் இந்த செய்முறையை வாங்கினேன்.
ஆந்திர புகழ் பப்பு செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
துவரம் பருப்பு – 1/2 கப்.
பாசிப்பருப்பு – 1/2 கப்.
தக்காளி -2
வெங்காயம் – 1
மஞ்சள் பொடி -1/4 தேக்கரண்டி.
பச்சை மிளகாய் – 6
சீரகம் -1/2 தேக்கரண்டி.
கீரை – 2 கப்
புளி – 1″ துண்டு.
பெருங்காயம் -1/4 தேக்கரண்டி.
நெய் – 1தேக்கரண்டி.
கடுகு – 1/4தேக்கரண்டி.
கருவேப்பில்லை – சிறிது
வர மிளகாய் -2
மல்லியிலை – ஒரு கை.
செய்முறை :
அ) வெங்காயம் , தக்காளி , கீரை ஆகியவற்றை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.புளியை சுடுநீரில் 10 நிமிடம் ஊறவைத்து சாறுஎடுக்கவும்.

ஆ)பருப்பை நன்றாக கழுவி ,குக்கர்இல் பருப்பு , தக்காளி , வெங்காயம் , மஞ்சள் தூள் , பச்சை மிளகாய் , சீரகம் சேர்த்து , முங்கும் அளவு தண்ணீர் சேர்த்து , 3 விசில் விடவும்.

இ) ஸ்டீம் அடங்கியவுடன் ,பருப்பு கலவையை நன்றாக மசித்துவிட்டு , அத்துடன் கீரையை சேர்த்து மீண்டும் ஒரு விசில் விடவும் .

உ) ஸ்டீம் அடங்கியவுடன் , பருப்பு கீரையுடன் , புளி தண்ணீர் , பெருங்காயம்,உப்பு சேர்த்து ஒரு கொத்திவைத்து இறக்கவும் .

ஊ) ஒரு சிறிய வாணலியில் நெய் சூடாக்கி , கடுகு , வரமிளகாய் , கருவேப்பில்லை சேர்த்து பொறிந்தவுடன் பருப்புடன் சேர்க்கவும்.
எ) இறுதியாக மல்லியிலை சேர்த்து கலக்கி , சூடாக பரிமாறவும் .

ஏ) சாதத்துடன் ,சப்பாத்தி , ரொட்டியுடன் பரிமாற நன்றாக இருக்கும் .
குறிப்பு :
அ) காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே சேர்ப்பதால் ,தேவையான அளவு சேர்க்கவும் .
ஆ) நான் பச்சை மிளகாய் கம்மியாக சேர்த்ததால் இறுதியில் சிறிது மிளகாய் தூள் சேர்த்தேன் அதனால் மஞ்சள் நிறம் சிறிது மாறிவிட்டது.
இ) கீரை அதிக நேரம் வேகவைக்கக்கூடாது என்பதால் ஒரு விசில் மட்டும் வைத்தேன்.
ஈ) குக்கர்இல் செய்வது சுலபம் என்பதால் குக்கர்இல் செய்தேன் நீங்கள் பாத்திரத்திலும் செய்யலாம் .


பூண்டு ரசம்

பூண்டு ரசம்


TO VIEW IN ENGLISH : CLICK HERE

வணக்கம் ,
பூண்டு ரசம் ..நான் பல விதமான ரசங்கள் செய்தாலும் இந்த பூண்டு ரசமும், மிளகு ரசமும் மிகவும் ஸ்பெஷல்.வயிறு உபாதைகளில் இருந்து சளி ,இருமல் வரை எந்த பிரச்சனைக்கும் இந்த இரண்டு ரசமும் விடுதலை அளிக்கும்.
மிகவும் சுவையான பூண்டு ரசம் செய்முறை உங்களுக்காக ,
எண்ணிக்கை : 4 நபர்கள் .
தேவையானவை :
பூண்டு – 15 பல்.
புளி – 2 ” துண்டு .
கருவேப்பில்லை சிறிது.
உப்பு தேவையானஅளவு.
கொத்தமல்லித்தழை ஒரு கை அளவு.
வரமிளகாய் – 1 .
பெருங்காயப்பொடி – 1 / 8 தேக்கரண்டி.
தக்காளி – 1 .
கடுகு – 1 /4 தேக்கரண்டி.
சீரகம் – 1 / 4 தேக்கரண்டி .
தேங்காய் எண்ணெய் ( அல்லது ) நெய் – 1 தேக்கரண்டி.
அரைக்க :
பூண்டு – 5 பல் .
குருமிளகு – 1 தேக்கரண்டி.
மஞ்சள் பொடி – 1 / 4 தேக்கரண்டி.
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி.
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி .
வரமல்லி – 1 / 2 தேக்கரண்டி.
வரமிளகாய் – 2 .
தேங்காய் எண்ணெய் () நெய் – 1 தேக்கரண்டி.
செய்முறை :
) புளியை சுடுதண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து ,சாறு எடுத்துக்கொள்ளவும்.

) தக்காளியை கரகரப்பாக மசித்துக்கொள்ளவும் .அதே போல் பூண்டையும் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

) வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் அரைக்க வேண்டிய பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
) வதக்கிய பொருட்களை கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

) பாத்திரத்தில் எண்ணெய் சூடாக்கி ,கடுகு ,சீரகம் சேர்த்து பொரித்த பின்பு , நசுக்கிய பூண்டு , கருவேப்பில்லை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

) அத்துடன் புளி தண்ணீர் , அரைத்த மசாலா , உப்பு , பெருங்காயம் ,அரைத்த தக்காளி விழுது சேர்த்து கொதிக்கவிடவும்.



) ரசம் கொதிக்க ஆரம்பித்தவுடன் மல்லி தலை சேர்த்து ,அடுப்பில் இருந்து இறக்கி சூடான சாதத்துடன் பரிமாறவும்.
          

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...