Showing posts with label SWEETS. Show all posts
Showing posts with label SWEETS. Show all posts

Wednesday, 10 January 2018

பாதாம் லட்டூ

பாதாம் லட்டூ


TO VIEW IN ENGLISH :  PLS CLICK

வணக்கம் ,
பாதாம் லட்டூ ! மிக குறைந்த நேரத்தில் எளிமையாக செய்யக்கூடிய பாதாம் உருண்டை.என் மகளின் பள்ளிக்கு கொடுத்தனுபவதற்கு மிகவும் ஏற்றது , மேலும் என்னுடைய பேலியோ டைட்டிற்கும் ஏற்ற ஸ்னாக் ஆகும்.
சுவையான ,சத்தான பாதாம் உருண்டை செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
பாதாம் – 3/4 கப்
முந்திரி -1/8 கப்
வெல்லம் – 4தேக்கரண்டி
ஏலம் – 1
செய்முறை :
அ) வாணலியில் பாதாமை குறைந்த சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.
ஆ) பாதாம் பொறிந்து, பொன்னிறமான பின்பு முந்திரி சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.

இ) அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
ஈ) அறியபின்பு மிக்ஸியில் வறுத்த பொருட்கள் , ஏலம் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

உ) மைய அரைத்தபின் , வெல்லம் சேர்த்து ,எண்ணெய் விடும்வரை அரைத்துஎடுக்கவும் .
ஊ) அரைத்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி ,கையால் பிசைந்து , உருண்டைகளாக்கவும்.
எ) காற்றுபுகா டப்பாவில் அடைத்து ஒரு வாரம் வரை சுவைக்கலாம்.
குறிப்பு :
அ) வெல்லம் அளவை உங்கள் தேவைக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம்.

பேலியோ டயட் :
அ) வெல்லம் சேர்ப்பதற்கு பதில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து ,பிசைந்து உருண்டைகளாக்கவும்.
ஆ) உங்கள் திடீர் பசியை போக்க உதவுவதுடன் , உடலுக்கும் நல்லது.


நொங்கு பாயசம்

நொங்கு பாயசம்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
பெங்களூரில் இப்பொழுது அதிகளிடத்தில் நொங்கு விற்பதை கண்டேன்.
சிறுவயதில் கோடை விடுமுறையில் தினமும் எங்கள் தோட்டத்தில்  நாங்கள் நொங்கு சுவைப்போம் .இப்பொழுது இங்கு எல்லா இடங்களிலும் நொங்கு விற்பதை கண்டவுடன் நிறைய வாங்கிவிட்டேன்.
என்ன செய்யலாம் என்று யோசித்தபொழுது எனது அம்மா கொடுத்த புத்தகங்கள் நினைவுக்கு வந்தது .
இந்த முறை விடுமுறையில் ஊருக்கு சென்றுந்தபொழுது எனது அம்மா எனக்கு அவர் 20 வருடங்கங்களாக சேர்த்து வைத்திருந்த சமையல் குறிப்புக்கள் புத்தங்களை கொடுத்தார்.அதில் தேடிய பொழுது இந்த செய்முறை எனக்கு கிடைத்தது.
கோடை வெய்யிலுக்கு மிகவும் ஏற்ற நொங்கு பாயசம் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
நொங்கு – 3 கண்.
பால் – 2 கப் + 1 / 4 கப்.
முந்திரி – 7
கசகசா -1 தேக்கரண்டி.
ஏலம் – 2
சர்க்கரை – 5 தேக்கரண்டி .
செய்முறை :
அ) பாலை நன்றாக பொங்கும் வரை காயவைக்கவும் .

ஆ) அதிலுருந்து ஒரு கால் கப் பாலை எடுத்து அதில் முந்திரி , கசகசாவை ஒரு 10 நிமிடம் ஊறவைக்கவும்.

இ) பின்பு ஊறிய பொருட்களை மைய அரைத்துக்கொள்ளவும்.

ஈ) பாலை குறைந்த சூட்டில் பாதியாக குறையும் வரை கொதிக்கவைக்கவும் .
உ) பாதியாக சுண்டிய பாலுடன் , அரைத்த முந்திரி கசகசா விழுது , சர்க்கரை ,ஏலம் சேர்த்து கொதிக்கவைக்கவும் .

ஊ) பால் கொஞ்சம் கெட்டியானவுடன் , அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.


எ)பால் ஆறும் நேரத்தில் நொங்கின் தோல் சீவிவிட்டு , ஒரு நொங்கை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும் , மீதமிருக்கும் நொங்கை சிறுசிறு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.
ஏ) இப்பொழுது ஆறிய பாலுடன் , அரைத்த நொங்கு விழுது சேர்த்து கலக்கவும்.


ஐ) இறுதியாக நறுக்கிய நொங்கு துண்டுகளை சேர்த்து , பிரிட்ஜ்ல் ஒரு மணிநேரம் வைத்து சுவைக்கவும் .


குறிப்பு :
அ) பாயசம் கொஞ்ச நேரம் ஊறினால் தான் நன்றாக இருக்கும் .
ஆ) குளிர்ந்த பாயசம் அருமையாக இருக்கும் , அதனால் பிரிட்ஜ்ல் வைத்த பிறகு சுவைக்கவும் .
இ) நொங்குக்கு பதில் இளநீரும் , இளநீர் வலுக்கலும் சேர்க்கலாம் .

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

 கடலைப்பருப்பு இனிப்பு இட்லி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
மூன்று வாரங்களுக்கு பின்பு இன்றுதான் எனது வெப்சைட்ஐ திறந்துள்ளேன் .
இந்த வருட கோடை விடுமுறை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது , ஆனால் மொபைல் நெட்ஒர்க் சரியாக வேலை செய்யாததால் ரெசிபி போஸ்ட் செய்யமுடியவில்லை.இன்று நான் உங்களுக்காக ஒரு சுலபமான ,மாலை நேர தேநீருடன் சாப்பிட சுவையான ஸ்னாக்கடலைப்பருப்பு இனிப்பு இட்லி ரெசிபி போஸ்ட் செய்யவுள்ளேன் .
நாங்கள் பொள்ளாச்சியில் இருந்தபொழுது எனது அம்மா எங்களுக்காக இந்த இட்லியை செய்தார்கள் , மிகவும் மெதுமெதுவென்று , அளவான இனிப்புடன் ,சூடாக இருந்தது .
சுவையான கடலைப்பருப்பு இனிப்பு இட்லி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
கடலை பருப்பு – 300 கிராம் .
பச்சரிசி – 25 கிராம்.
வெல்லம் – 200 கிராம் .
துருவிய தேங்காய் – 1 கப் (தேவையென்றால் இன்னும் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம்).
சமையல் சோடா – 1 / 4 தேக்கரண்டி .
ஏலம் – 4 .
செய்முறை :
) கடலைபருப்பு மற்றும் அரிசியை நன்றாக கழுவி , போதுமான தண்ணீரில் சுமார் 8 மணிநேரம் ஊறவைக்கவும் .

) ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசியை தண்ணீர் வடித்துவிட்டு , கரகரப்பான பதத்திற்கு தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
) இறுதியாக வெல்லம் மற்றும் ஏலம் சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும் .

) ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதை சேர்த்து , அத்துடன் துருவிய தேங்காய் , சமையல் சோடா சேர்த்து நன்றாக கலக்கவும் .

) கலவை இட்லி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும் , கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
) இட்லித்தட்டில்  இட்லி போல் ஊற்றி , 10 நிமிடம் (கத்தி ஒட்டாமல் வரும் வரை) வேகவைத்து எடுக்கவும் .

) சூடான ,சத்தான இனிப்பு இட்லி தயார் .சூடாக பரிமாறவும் .

குறிப்பு :
) வெல்லத்திற்கு பதிலாக சர்க்கரை சேர்க்கலாம் , ஆனால் பனை வெல்லம் அல்லது கரும்பு வெல்லம் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சாக்லேட் பாட்ஜ்

 சாக்லேட் பாட்ஜ்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
சாக்லேட் பாட்ஜ்..விடுமுறை ஆரம்பித்த நாளிலிருந்து பக்கத்து வீட்டு குழந்தைகள் சாக்லேட் செய்து தர சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தார்கள்.ஆனால் பால் பவுடர் இல்லாததால் யோசித்துக்கொண்டிருந்தேன்.மேலும் பிரிட்ஜ்ல் சாகோ சிப்ஸ் இருந்தது அதனால் வெறும் சாக்லேட் செய்வதற்கு பதில் சாக்லேட் பாட்ஜ் செய்யலாம் என்று செய்தேன் .
பாட்ஜ் செய்வது மிகவும் எளிது ,15 நிமிடத்தில் செய்து 1 மணி நேரத்தில் சாப்பிட்டும் முடித்தாகிவிட்டது.
செய்முறை உங்களுக்காக ,
ரெசிபி கற்றுக்கொண்டது :YUMMYTUMMYARTHI.COM.
18 பாட்ஜ் துண்டுகள் கிடைக்கும் .
தேவையானவை :
சாகோ சிப்ஸ் – 1 கப்.
வெண்ணை – 1 டேபிள் ஸ்பூன்  .
கண்டென்ஸ்ட் மில்க் -1/3 கப்.
நறுக்கிய நட்ஸ் – 1/4 கப்.
செய்முறை :

) ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைக்கவும் .
) ஒரு வாணலியில் சாகோ சிப்ஸ் , வெண்ணை , கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கொதிக்கும் நீரில் , நீர் உள்ளே போகாமல் வைக்கவும்.
) மெதுவாக சாகோ சிப்ஸ் உருகும்.சாகோ சிப்ஸ் , வெண்ணை இரண்டும் உருகி நன்றாக கலங்கும்வரை சூடு நீர் பாத்திரத்தில் வைக்கவும்.


) உருகிய பின்பு நன்றாக கலக்கி , நறுக்கிய நட்ஸ் சேர்த்து கலக்கவும் .

) வெண்ணை தடவிய தட்டில் அல்லது அச்சில் ஊற்றி , பிரிட்ஜ்ல் 2 மணிநேரம் அல்லது சாக்லேட் கெட்டி ஆகும் வரை வைத்து , சிறு துண்டுகளாக வெட்டி பரிமாறவும் .


குறிப்பு :
) சூடு நீரில் வைப்பதற்கு பதில் ஓவென்இல் ஒரு நிமிடம் வைத்தும் எடுக்கலாம்.

பால் தேங்காய் பருப்பி

பால் தேங்காய் பருப்பி


TO VIEW IN ENGLISH : CLICK

வணக்கம் ,
பால் தேங்காய் பருப்பி ..
தேங்காய் பருப்பி எப்படி செய்தாலும் சுவை அருமையாக இருக்கும் .
நான் ஏற்கனவே தேங்காய் பருப்பி செய்முறை ஆங்கிலத்தில் போஸ்ட் செய்துள்ளேன் .இது மற்றொரு செய்முறையாகும்.
சீக்கிரம் செய்யக்கூடிய தேங்காய் பருப்பி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
துருவிய தேங்காய் – 2 கப்.
பால் – 1 1 / 2 கப் ( கொதித்து ஆறியது ) .
சர்க்கரை – 1 கப்.
ஏலம் – 4 .
நெய் – 3 தேக்கரண்டி .
கண்டென்ஸ்ட் மில்க்  – 2 தேக்கரண்டி ( தேவையென்றால் சேர்க்கலாம் ).
முந்திரி , திராட்சை மேலே தூவுவதற்கு .
சிவப்பு நிறம் – 2 சொட்டு ( தேவையென்றால் ).
செய்முறை :

) ஏலத்தை பொடியக்கி கொள்ளவும்.
) ஒரு தட்டில் நெய் தடவிவைத்து கொள்ளவும்.
) வாணலியில் பால் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.

) பால் முழுவதும் சுண்டி ,தேங்காய் கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.

) கண்டென்ஸ்ட் மில்க் சேர்ப்பதாக இருந்தால் , இப்பொழுது சேர்த்து ஒரு முறை கலக்கவும்.

) பின்னர் சர்க்கரை சேர்க்கவும் , சர்க்கரை உருகி மறுபடியும் தேங்காய் கலவை கொதிக்கும்.

) சர்க்கரை சுண்டி , தேங்காய் மறுபடியும் கெட்டியாகும் வரை வேகவிடவும்.

) இறுதியாக ஏலப்பொடி , நெய்,நிறம்( சேர்ப்பதாக இருந்தால் ) சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கவும்.


  
) நெய் தடவிய தட்டில் தடிமனாக பரப்பி , நறுக்கிய முந்திரி , திராட்சை சேர்த்து அமுக்கிவிடவும் .


) ஆறியபின்பு வெட்டி சுவைக்கலாம்.

குறிப்பு :
) இந்த பருப்பி 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

)கண்டென்ஸ்ட் மில்க் , கலர் இவையில்லாமலும் பருப்பி அருமையாக இருக்கும்.

Monday, 23 October 2017

பச்சை மிளகாய் அல்வா

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
கொச்சினில் இருக்கும் எனது சகோதரி இந்த அல்வாவை எங்களுக்கு வாங்கிவந்தார். பெயரே வித்யாசமாக இருந்தது , சுவையும் தான்.
உடனே செய்துபார்க்க வேண்டும் என்று முயற்சி செய்து , ஒரு முயற்சிக்கு பிறகு , கடையில் வாங்கிய அல்வாவை விட அருமையாக இருந்தது.

சுவையான , வித்யாசமான பச்சை மிளகாய் அல்வா செய்முறை உங்களுக்காக ,
சமையல் நேரம் : 1 மணிநேரம்
நபர்கள் : 5

தேவையானவை :
சோள மாவு - 1/4 கப்.
மைதா -1/4 கப்
பச்சை மிளகாய் - 4
சர்க்கரை - 2 கப்
தண்ணீர் - 1 கப்
நெய் -5 மேஜைக்கரண்டி
ஏலக்காய்- 3 (1/4 தேக்கரண்டி )
பச்சை கலர் - சிறிது ( தேவையென்றால் ).

செய்முறை :
) பச்சை மிளகாயினை கீறி உள்ளே இருக்கும் விதைகளை நீக்கிவிடவும்.
) வாணலியில் 1/4 கப் தண்ணீர் , 1 தேக்கரண்டி சர்க்கரை , பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.
) தண்ணீரை வடித்துவிட்டு , மீண்டும் மிளகாயினை தண்ணீர், சர்க்கரை சேர்த்து கொதிக்கவைத்து வடிக்கவும் . இவ்வாறு 3 முதல் 4 முறை , மிளகாய் நிறம் மாறும்வரை கொதிக்கவைத்து வடிக்கவும் .
) மிளகாயினை சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
) ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு , மிளகாய் விழுது , கலர் பொடி( தேவையென்றால் ) , 1 கப் தண்ணீர் சேர்த்து, நன்றாக கட்டி இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
) வாணலிலில் நெய் சூடாக்கி , அதில் மேலே கூறிய மாவு கலவையை சேர்த்து , மிதமான சூட்டில் வேகவிடவும்.
) அல்வா கெட்டியாகும் பொழுது , முந்திரி , ஏலப்பொடி சேர்த்து , நன்றாக எண்ணெய் திரண்டு வரும்வரை கிளறவும்.
) அல்வா வாணலியில் ஒட்டாமல் , திரண்டு வரும்பொழுது , நெய் தடவிய தட்டில் மாற்றி ஆறவிடவும்.
) ஆறியபின் வேண்டுமளவு வெட்டி பரிமாறவும்.
குறிப்பு :
) பச்சைமிளகாய் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்.
) அல்வாவின் நிறம் பச்சைமிளகாயின் நிறத்திற்கேற்றாற்போல் இருக்கும் , அதனால் நிறம் சேர்த்துக்கொள்ளலாம்.
) நெய் அளவை குறைக்காதீர்கள்.

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...