Showing posts with label BREAKFAST AND DINNER RECIPES. Show all posts
Showing posts with label BREAKFAST AND DINNER RECIPES. Show all posts

Friday, 5 January 2018

கோதுமை பட்டுரா

கோதுமை பட்டுரா


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
கோதுமை பட்டுரா ! எனது சகோதரி பட்டுரா நன்றாக செய்வார்கள் , நான் பட்டுரா செய்முறையை அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் .பட்டுரா மைதா மாவில் தான் செய்வார்கள் ,நான் கோதுமை மாவில் செய்தேன்.
பட்டுரா கடலை கறியுடன் பரிமாறுவார்கள் ,நான் பூண்டு காளான் கறிஉடன் பரிமாறினேன்.
சுவையான கோதுமை பட்டுரா செய்முறை உங்களுக்காக !
எனது மற்ற பூரி ரெசிபிகள் :
அ) கார பூரி.
ஆ) குபூஸ் (தயிர் பூரி).
இ) உப்பு ரொட்டி ( அரிசி பூரி )
நேரம் : 4 மணிநேரம் .
நபர்கள் : 5
தேவையானவை :
கோதுமை மாவு – 2கப்
தயிர் – 3/4 கப்
ரவா – 1/4கப்
சமையல் சோடா -1/4 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – பொறிப்பதற்கு
செய்முறை :

அ) ஒரு பாத்திரத்தில் மாவு , உப்பு , ரவா ,சோடா சேர்த்து கலக்கிக்கொள்ளவும்.
ஆ) பின்பு அத்துடன் தயிர் சேர்த்து கலக்கவும்.

இ) இப்பொழுது மாவு உதிரி உதிரியாக இருக்கும் , இத்துடன் நெய் , தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து மிருதுவான உருண்டை பக்குவத்திற்கு பிசையவும்.
ஈ) சிறிது நெய் மேலே தடவி , 3 மணிநேரம் மூடிவைக்கவும் .
உ) 3 மணிநேரத்திற்கு பிறகு , மாவை சிறு உருண்டைகளாக்கி , சிறிது தடினமான பூரிகளாக தேய்க்கவும்.


ஊ) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , பூரிகளை இருபுறமும் உப்புமாறு பொறித்தெடுக்கவும்.

எ) பட்டுரா தயார் …கடலை கறி அல்லது உங்களுக்கு பிடித்தமான காரசாரமான மசாலாவுடன் பரிமாறலாம் . நான் பூண்டு காளான் மசாலாவுடன் பரிமாறினேன்..

குறிப்பு :
அ) சிறிய பட்டுராவாக தேய்க்கவும் , இதனால் எண்ணெய் அதிகமாக உறியாது .
ஆ) தடினமான பட்டுரா நன்றாக உப்பும்.

பேலியோ சாண்ட்விச் பிரட்

பேலியோ சாண்ட்விச் பிரட்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
பேலியோ சாண்ட்விச் பிரட் ! எனக்கு பேலியோவில் மிகவும் பிடித்த உணவு இந்த ரொட்டியாகும்.சீக்கிரம் செய்துவிடலாம் , மேலும் சத்தானது , சுவையானதும்கூட.
பேலியோ டயட் அல்லாது அனைவரும் சாப்பிட ஏற்றது .
சுவையான , சத்தான 1 நிமிட மைக்ரோவேவ் ( நுண்ணலை அடுப்பு) சாண்ட்விச் ரொட்டி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
பிரட் செய்வதற்கு :
பாதாம் பொடி – 1/3 கப்.
முட்டை – 1
பேக்கிங் பவுடர் -1/2 தேக்கரண்டி .
உப்பு -1/8 தேக்கரண்டி .
சாண்ட்விச் செய்வதற்கு :
தக்காளி – 1.
வெங்காயம் -1.
வெள்ளரி – 1/2.
சீஸ் – 2 தேக்கரண்டி
வெண்ணை – 1தேக்கரண்டி
செய்முறை :

அ) மைக்ரோவேவ் கப்பில் பாதாம் பொடி , உப்பு , பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஆ) அத்துடன் ஒரு முட்டை சேர்த்து கலக்கவும்.

இ) மைக்ரோவேவ் அடுப்பில் வைத்து 1 நிமிடம் அதிக சூட்டில் வேகவிடவும் , ஒரு குச்சியை கப்பின் நடுவே செலுத்தினால் அது ஒட்டாமல் வரவேண்டும்.
ஈ) பிரட் வெந்தவுடன் , அடுப்பில் இருந்து எடுத்து , ஆறவிட்டு , துண்டுகளாக்கவும்.
சாண்ட்விச் செய்வதற்கு :
அ) தோசை கல்லை சூடாக்கி , வெண்ணை தேய்த்து , ரொட்டி துண்டுகளை வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டு எடுக்கவும்.
ஆ) சுட்ட ரொட்டி மேல் சீஸ் ,நறுக்கிய தக்காளி , வெங்காயம் , வெள்ளரி வைத்து , மேலே ரொட்டி வைத்து மூடி சுவைக்கவும்.

குறிப்பு :
அ) ஈரப்பதம் இல்லாத பாதாமை பொடியாக அரைத்துக்கொள்ளவும் .
ஆ) காய்களுக்கு பதில் சிக்கன் அல்லது உங்களுக்கு பிடித்தமான இறைச்சியை சேர்க்கலாம்.
இ) ரொட்டியுடன் சீஸ் சுவையாக இருக்கும் , அதனால் சீஸ் நிச்சயமாக சேர்க்கவும்.

உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட்

உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட்


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
உருளைக்கிழங்கு பிரட் டோஸ்ட் ! நான் இப்பொழுதெல்லாம் சீக்கிரம் செய்யக்கூடிய காலை உணவுகள் பல செய்கிறேன்.

சிலநாட்களுக்கு முன்பு காலையில் எழுவத்திற்கு நேரமாகிவிட்டது , எனது மகளின் பள்ளி ஆரம்பிப்பதற்கு அரைமணிநேரம் முன்புதான் எழுந்தேன்.
அதனால் சீக்கிரம் செய்யக்கூடிய இந்த பிரட் டோஸ்ட் செய்தேன்,20 நிமிடத்தில் செய்துவிட்டேன்.
சுலபமான ,சீக்கிரம் செய்யக்கூடிய பிரட் டோஸ்ட் செய்முறை உங்களுக்காக ,
செய்யும் நேரம் : 20 நிமிடங்கள்.
நபர்கள் : 2 .
தேவையானவை:
பிரட் துண்டு – 4 துண்டுகள்
உருளைக்கிழங்கு -2
வெங்காயம் -1
பச்சை மிளகாய் – 2
குடை மிளகாய் – 1
உப்பு – தேவையானஅளவு
நெய் -2 தேக்கரண்டி
கடுகு – 1/8தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/8 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
மல்லியிலை – சிறிது
செய்முறை :
அ) உருளைக்கிழங்கை குக்கர்இல் தேவையானஅளவு தண்ணீர் சேர்த்து ,1 தேக்கரண்டி உப்பு சேர்த்து 3 விசில் விடவும்.
ஆ) வெந்த உருளைக்கிழங்கை தோல் உரித்து ,நன்றாக மசித்துக்கொள்ளவும்.

இ) வெங்காயம் ,குடை மிளகாய் , மிளகாய் ,கருவேப்பிலை , மல்லி ஆகியவற்றை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஈ) கடாயில் 1 தேக்கரண்டி நெய் சூடாக்கி , கடுகு ,பச்சை மிளகாய் ,வெங்காயம்,குடை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

உ) இத்துடன் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து ,மஞ்சள் தூள் , மிளகாய் தூள்,கருவேப்பிலை , மல்லியிலை ,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஊ) தோசை கல்லை சூடாக்கி , நெய் தடவி ,பிரட் துண்டை வைத்து ,அதன் மேல் 2 தேக்கரண்டி உருளைக்கிழங்கு மசியலை வைத்து சமமாக தடவவும்.

எ) மேலே நெய் தடவி , 30 நொடிகள் வேகவிட்டு , திருப்பிப்போட்டு 30 நொடிகள் வேகவிட்டு , கல்லில் இருந்து எடுத்து சூடாக பரிமாறவும்.

செட்டிநாடு கார பணியாரம்

செட்டிநாடு கார பணியாரம்


TO VIEW IN ENGLISH : CLICK HERE

வணக்கம் ,
செட்டிநாடு கார பணியாரம்..செட்டிநாடு சமையல் என்றால் பிடிக்காதவர்கள் கிடையாது .செட்டிநாடு கார பணியாரம் மிகவும் எளிதான மற்றும் மிகவும் பிரபலமான செட்டிநாட்டு உணவு .அதன் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
தோசை மாவு – 4 கப்.
கேரட் – 1/2 கப்.
வெங்காயம் – 1/4 கப்.
உளுந்து பருப்பு – 1/2 தேக்கரண்டி .
கடுகு -1/2 தேக்கரண்டி .
மிளகு -1 தேக்கரண்டி .
பெருங்காயம் -1/8 தேக்கரண்டி .
கருவேப்பில்லை ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 2
தேங்காய் (துருவியது ) – 1/8 கப்.
கொத்தமல்லி இலை -4 தேக்கரண்டி .
எண்ணெய் ( ) நெய் -1 தேக்கரண்டி + பணியாரம் செய்ய தேவையான அளவு .
உப்பு தேவையான அளவு .
செய்முறை :

) வானலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு ,பச்சை மிளகாய் , கருவேப்பில்லை ,மிளகு ,உளுந்து பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

) அத்துடன் கேரட் , வெங்காயம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

) இறுதியாக தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி , அடுப்பில் இருந்து இறக்கவும்.
) நன்றாக ஆறியவுடன் தோசை மாவுடன் சேர்த்து , உப்பு ,பெருங்காயம் சேர்த்து கலக்கவும்.
) பணியார கல்லை சூடாக்கி , எண்ணெய் தடவி , பணியார மாவை அரை குழிக்கு ஊற்றவும்.

) எண்ணெய் தெளித்து ,குறைந்த சூட்டில் பணியாரத்தை பொன்னிறமாகும் வரை வேகவிடவும்.

) பின்னர் மறுபக்கம் திருப்பி பொன்னிறமாக வேகவிடவும்.

) வெந்தவுடன் பணியாரக்கல்லில் இருந்து எடுத்து சூடாக பரிமாறவும்.

) நான் நிலக்கடலை சட்னியுடன் பரிமாறினேன் , நீங்கள் உங்கள் விருப்பம் போல் பரிமாறலாம்.
குறிப்பு :
) பணியாரத்தை குறைத்த சூட்டில் வேகவிடவும் , இல்லையென்றால் வெளியே வெந்து உள்ளே வேகாமல் இருக்கும்.
) உங்கள் விருப்பம் போல் காய்களை துருவி சேர்க்கலாம்.

காஞ்சிபுரம் இட்லி

காஞ்சிபுரம் இட்லி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
காஞ்சிபுரம் இட்லி ! காஞ்சிபுரத்தில் இந்த இட்லி மிகவும் பிரபலம் , அங்கு இட்லியை மூங்கில் குழாயில் செய்வார்கள் மேலும் ஒரு சில இடங்களில் வாழை இலையில் செய்வதும் உண்டு.காலை நேர உணவாக இட்லி செய்வது எனக்கு மிகவும் சௌகரியம் ,அவசரத்தில் யாரும் சரியாக சாப்பிடமாட்டார்கள் அதனால் இட்லி செய்தல் விரைவாக மற்றும் நிறைவாக சாப்பிடுவார்கள்.
எப்பொழுதும் ஒரே மாதிரி இட்லி செய்யாமல் சற்று வித்யாசமாக செய்யலாம் என்று இந்த காஞ்சிபுரம் இட்லியும் , தட்ட இட்லியும் செய்தேன் , இரண்டுமே அருமையாகவும் ,வித்தியாசமாகவும் இருந்தது.நான் வாழையிலையில் செய்தேன் , உங்களுக்கு வாழையிலை கிடைக்கவில்லையென்றால் சாதாரணமாக இட்லி தட்டில் இட்லி போல் ஊற்றியும் செய்யலாம்.
பாரம்பரிய காஞ்சிபுரம் இட்லி செய்முறை கிழே,
நேரம் : 10 மணிநேரம்
சமைக்கும் நேரம் : 20 நிமிடம்
நபர்கள் : 10
தேவையானவை :
பச்சரிசி – 1கப்
இட்லி அரிசி – 1கப்
உளுந்து – 1கப்
வெந்தயம் – 1தேக்கரண்டி
உப்பு தேவையானஅளவு
கடுகு – 1தேக்கரண்டி
கடலை பருப்பு -1 தேக்கரண்டி
கருவேப்பில்லை ஒரு கொத்து
மிளகு – 1தேக்கரண்டி
சீரகம் – 1தேக்கரண்டி
முந்திரி – 10
இஞ்சி – 1தேக்கரண்டி (நறுக்கிய ).
நெய் – 2தேக்கரண்டி
செய்முறை :
) பச்சரிசி மற்றும் இட்லி அரிசியை கழுவி , நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

) உளுந்து ,வெந்தயத்தை 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
) ஊறியபின் முதலில் உளுந்து ,வெந்தயத்தை சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

) பின்பு ஊறவைத்த அரிசியை தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
) அரிசி மாவு மற்றும் உளுந்து மாவை ஒன்றாக சேர்த்து , உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.மாவை மூடிவைத்து சுமார் 8 மணிநேரம் புளிக்கவிடவும்.

)8 மணிநேரம் புளித்த பிறகு மாவு நன்றாக பொங்கி வரும் ,கலக்கி வைக்கவும்.
) சீரகம் மற்றும் மிளகை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

) ஒரு சிறிய வாணலியில் நெய் சூடாக்கி , கடுகு சேர்த்து பொறித்த பின் , கடலை பருப்பு ,முந்திரி ,கருவேப்பில்லை சேர்த்து வறுக்கவும்.அத்துடன் சீராக மிளகு பொடியை சேர்த்து ஒரு முறை வறுத்து மாவுடன் சேர்த்து கலக்கவும்.
) இட்லி தட்டில் ,வாழையிலை  வைத்து அதன் மேல் இட்லி மாவை ஊற்றி ,15 நிமிடம் ,இட்லி வேகும் வரை வேகவிடவும்.
) வாழையிலை இல்லையென்றால் சாதாரண இட்லி போலும் ஊற்றலாம்.
ஓஒ) நான் டிபன் சாம்பாருடன் பரிமாறினேன் , நீங்கள் சாம்பார் அல்லது காரச்சட்னியுடன் பரிமாறலாம்.


W3Counter Web Stats

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...