Showing posts with label சுரைக்காய் தோசை. Show all posts
Showing posts with label சுரைக்காய் தோசை. Show all posts

Friday, 5 January 2018

சுரைக்காய் தோசை

சுரைக்காய் தோசை

Posted in : BREAKFAST AND DINNER on by : Saranya Arun Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
சுரைக்காய் தோசை! எனது பழைய போஸ்ட்களை படித்தீர்களானால் உங்களுக்கு தெரியும் தோசை மாவு எனக்கு எவ்வளவு முக்கியம் என்று 🙂 .
தோசை மாவு இல்லை என்றால் காலை நேர சமையல் எனக்கு மிகவும் கடினம் ,அதனால் விதவிதமான தோசை மாவு அரைத்துவைத்துக்கொள்வது வழக்கம்.
பிரிட்ஜ்ல் கொஞ்சம் சுரைக்காய் இருந்தது , எனக்கு சுரைக்காய் சாப்பிட்டு அலுத்துவிட்டதால் தோசை செய்து அனைவர்க்கும் கொடுத்துவிட்டேன்.
எனது வீட்டில் தோசை வடிவில் எது கொடுத்தாலும் சாப்பிடுவார்கள் :).
சத்தான , சுவையான சுரைக்காய் தோசை செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
பச்சரிசி – 2 கப்.
உளுந்து -1/4 கப்
சுரைக்காய் – 1 1/2கப் ( நறுக்கியது ).
வரமிளகாய் – 4
பெருங்காயம் -1/8 தேக்கரண்டி.
கருவேப்பிலை – ஒரு கையளவு.
இஞ்சி – 1 ” துண்டு – 1
சீரகம் – 1தேக்கரண்டி.
உப்பு – தேவையானஅளவு.
செய்முறை :
அ) அரிசி மற்றும் உளுந்தை தண்ணீரில் கழுவி ,4 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

ஆ) சுரைக்காயினை தோல் சீவி , விதைகளை நீக்கிவிட்டு ,சிறுதுண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய சுரைக்காயினை தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும்.
இ) வரமிளகாய் , சீரகம் , கருவேப்பிலை , இஞ்சி , பெருங்காயம் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
ஈ) ஊறவைத்த அரிசி மற்றும் உளுந்தை ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.

உ) அரைத்த மாவுடன் , அரைத்த சுரைக்காய் விழுது , வரமிளகாய் மசாலா விழுது,உப்பு சேர்த்து ஒரு முறை நன்றாக கலங்கும்படி அரைத்துக்கொள்ளவும்.
ஊ) மாவை குறைந்தது 4 மணிநேரம் புளிக்கவைக்கவும்.

எ) தோசை கல்லை சூடாக்கி ,சிறிது நெய் தடவி ,ஒரு கரண்டி மாவை மெல்லிய தோசையாக ஊற்றி , சிறிது எண்ணெய் தெளித்து பொன்னிறமாக வேகவிடவும்.

ஏ) தோசையை திருப்பி ,2 நிமிடம் வேகவிடவும்.

ஐ) தோசை வெந்ததும் , சூடாக பரிமாறவும்.
ஓ) வெங்காய சட்னியுடன் பரிமாற அருமையாக இருக்கும் ,நீங்கள் உங்கள் விருப்பம்போல் பூண்டு சட்னி , நிலக்கடலை சட்னியுடன் பரிமாறலாம்.

குறிப்பு :
அ) அரைத்தவுடன் மாவு புளிக்காமலுமும் உடனே தோசை செய்யலாம் ,ஆனால் எனக்கு மாவின் பச்சை வாடை பிடிக்காததால் நான் புளிக்கவைத்து செய்வேன்.புளிக்காமல் செய்தல் அடை பக்குவத்தில் செய்யவேண்டும்.
ஆ) பச்சரிசிக்கு பதில் இட்லி அரிசியும் சேர்க்கலாம்.

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...