Showing posts with label SUMMER DRINKS. Show all posts
Showing posts with label SUMMER DRINKS. Show all posts

Thursday, 11 January 2018

கேரட் தக்காளி ஜூஸ்

 கேரட் தக்காளி ஜூஸ்


TO VIEW IN ENGLISH : CLICK

வணக்கம் ,
கேரட் தக்காளி ஜூஸ் ! இது ஒரு சத்தான , சுலபமான, வெயிலுக்கு ஏற்ற , டயட் ஜூஸ் .
எனக்கு தக்காளி பிடிக்கும் என்பதால் ஒரு கேரட் மற்றும் சேர்த்தேன் .நீங்கள் கேரட் அதிகமாகவும் சேர்க்கலாம்.மேலும் நான் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பேன் , நீங்கள் வேண்டுமானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை கீழே,
தேவையானவை :
பழுத்த தக்காளி – 3 .
கேரட் – 1 .
கிராம்பு – 2 .
சர்க்கரை – 3 தேக்கரண்டி ( தேவையென்றால் ).
செய்முறை :


) கேரட்ஐ நன்றாக கழுவி , சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

) நறுக்கிய கேரட் மற்றும் கிராம்பு இரண்டையும்  மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

) அத்துடன் தக்காளி சேர்த்து அரைத்து , வடித்து பருகவும்.


) தேவையென்றால் சர்க்கரை சேர்த்து பருகலாம் .
குறிப்பு :
) அரைத்தவுடன் குடித்துவிடவும் , பிரிட்ஜ்ல் வைத்தால் சுவை சற்று மாறிவிடும்.
) வடிகட்டியபின்பு சக்கையை , எண்ணெய் விட்டு தாளித்து , உப்பு ,மிளகாய் போடி சேர்த்து கொதிக்கவைத்து சட்னியாக பரிமாறலாம்.
) கேரட்ஐ அதிகப்படுத்திக்கொள்ளலாம்.      

Wednesday, 10 January 2018

நீர் மோர்

நீர் மோர்


TO VIEW IN ENGLISH : CLICK HERE

வணக்கம் ,
நீர் மோர் !! சித்திரை திருநாள் அன்று பானகத்துடன் நீர் மோரும் படைக்கப்படும் .நான் ஏற்கனவே பானகம் செய்முறை போஸ்ட் செய்துளேன்.
இப்பொழுது நீர் மோர் செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
தயிர் – 1 கப்.
உப்பு – 1 / 2 தேக்கரண்டி.
இஞ்சி – 1 / 2 தேக்கரண்டி.
பச்சை மிளகாய் – 2 .
புதினா -1 தேக்கரண்டி .
கொத்தமல்லி இலை – 1 தேக்கரண்டி .
பெருங்காயம் – 1 / 8 தேக்கரண்டி .
தாளிப்பதற்கு :
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி .
கடுகு – 1 / 8 தேக்கரண்டி
கருவேப்பில்லை – 2 தேக்கரண்டி .
செய்முறை :

) தயிரை நன்றாக அடித்து மோர் ஆக்கிக்கொள்ளவும் .
) அத்துடன் பெருங்காயம் ,உப்பு , மசித்த இஞ்சி , நறுக்கிய மல்லி , நறுக்கிய புதினா ,பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும் .

) வாணலியில் எண்ணெய் சூடாக்கி கடுகு , கருவேப்பில்லை சேர்த்து வதக்கி , மோருடன் சேர்த்து கலக்கி அருந்தவும் .
) மோரை பிரிட்ஜ்ல் வைத்தும் அருந்தலாம் .
   

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...