Showing posts with label CHUTNEY RECIPES. Show all posts
Showing posts with label CHUTNEY RECIPES. Show all posts

Wednesday, 10 January 2018

முள்ளங்கிசட்னி

 முள்ளங்கிசட்னி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
முள்ளங்கிசட்னி ! பெரும்பாலான காய்களில் நாம் சட்னி அரைக்கலாம் .
காய்கள் சட்னி செய்வதற்கும் மிகவும் சுலபம் , சத்தானது மேலும் சுவையானது.
இந்த சட்னி இட்லி , தோசை ,சப்பாத்தியுடன் சுவைக்க நன்றாக இருக்கும்.
சுவையான முள்ளங்கி சட்னி செய்முறை உங்களுக்காக ,
செய்யும் நேரம் : 20 நிமிடம் .
நபர்கள் : 2
தேவையானவை :
முள்ளங்கி – 1கப்
கடலை பருப்பு – 1தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு -1 தேக்கரண்டி .
வரமிளகாய் – 2
தேங்காய் -1 தேக்கரண்டி
புளி – 1துண்டு
உப்பு தேவையானளவு
எண்ணெய் -2 தேக்கரண்டி .
செய்முறை :
) முள்ளங்கி தோல் சீவி , சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

) வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் சூடாக்கி , நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து குறைந்த சூட்டில் பச்சை வாடை நீங்கி , பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
) வதங்கிய முள்ளங்கியை ஒரு தட்டிற்கு மாற்றிவிட்டு , அதே வாணலியில் மீதமிருக்கும் ஒரு கரண்டி எண்ணையை சேர்த்து , கடலை பருப்பு ,உளுந்தம் பருப்பு , வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

) வறுத்த பொருட்கள் அனைத்தையும் முள்ளங்கியுடன் சேர்த்து , உப்பு , புளி சேர்த்து ,மைய அரைத்துக்கொள்ளவும்.

) இட்லி , தோசை , சப்பாத்தியுடன் பரிமாறலாம்..       

போண்டா சட்னி

போண்டா சட்னி


TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம்,
போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியிருந்தேன், அதன் செய்முறை இன்று உங்களுக்காக .இந்த போண்டா சட்னி எங்கள் வீட்டின் அருகில் உள்ள ஒரு கடையில் போண்டா , பஜ்ஜியுடன் வாழையிலையில் கொடுப்பார்கள் . அதே போல் சட்னி நான் வீட்டில் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் , ஒரு நாள் தொலைக்காட்சியில் இந்த சட்னி செய்து காட்டினார்கள் .அன்றிலிருந்து போண்டா செய்தால் இந்த சட்னி இல்லாமல் செய்வதில்லை.
5 நிமிடத்தில் செய்யக்கூடிய ,சுவையான போண்டா சட்னி செய்முறை உங்களுக்காக ,
செய்யும் நேரம் : 5 நிமிடம் .
நபர்களுக்கு : 3
தேவையானவை :
வெங்காயம் – 1பெரியது
துருவிய தேங்காய் – 2தேக்கரண்டி
வெல்லம் -1/2 தேக்கரண்டி
வரமிளகாய் -2
புளி – 1″துண்டு .
உப்பு – தேவையானளவு
நல்லெண்ணெய் – 2தேக்கரண்டி
கடுகு -1/4 தேக்கரண்டி
வரமிளகாய் – 1
செய்முறை :
அ) வெங்காயம் , மிளகாய் , தேங்காய் ,வெல்லம் , புளி , உப்பு ஆகியவற்றை அரைத்துக்கொள்ளவும் .
ஆ) வாணலியில் என்னை சூடாக்கி ,கடுகு , வரமிளகாய் சேர்த்து வதக்கி , அரைத்த சட்னியுடன் சேர்த்து கலக்கி பரிமாறவும்.

இ) பஜ்ஜி , போண்டா , காரதோசை ஆகியவற்றுடன் நன்றாக இருக்கும்.

கடலை பருப்பு சட்னி


 கடலை பருப்பு சட்னி

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
சென்ற வாரம் , எனது வீட்டில் சட்னி செய்வதற்கு ஒன்றுமே இல்லை , ஒரு சிறிய தக்காளி ,மற்றும் சில பூண்டு மட்டுமே இருந்தது .அதனால் கடலை பருப்பு சட்னி செய்தேன் .
மிகவும் சுலபமான சட்னி செய்முறை உங்களுக்காக ,
தேவையானவை :
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி .
உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி .
தக்காளி – 1 சிறியது .
பூண்டு – 4 பல்.
வரமிளகாய் – 2 .
உப்பு தேவையானவை .
பெருங்காயப்பொடி – 1 / 8 தேக்கரண்டி .
தேங்காய் – 2 தேக்கரண்டி ( தேவையென்றால் சேர்க்கலாம் ).
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி .
தாளிப்பதற்கு :
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி .
கடுகு – 1 / 8 தேக்கரண்டி .
கருவேப்பில்லை சிறிது .
உளுந்தம் பருப்பு – 1 / 2 தேக்கரண்டி .
வரமிளகாய் – 1 .
செய்முறை :

) வாணலியில் சிறிது எண்ணெய் சூடாக்கி கடலை பருப்பு , உளுந்தம் பருப்பு,வரமிளகாய் , பூண்டு சேர்த்து , குறைந்த சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.


) இறுதியாக பெருங்காயப்பொடி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

) வாணலியில் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.


) முதலில் பருப்பு கலவையை கரகரப்பாக அரைக்கவும்.அத்துடன் வதக்கிய தக்காளியை சேர்த்து அரைக்கவும்.

) மிகவும் மைய அரைக்காமல் சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
) வாணலியில் சிறிது எண்ணெய் சூடாக்கி கடுகு , கருவேப்பில்லை , உளுந்தம் பருப்பு , வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து சட்னியுடன் சேர்த்து கலக்கி பரிமாறவும்.
 
குறிப்பு :
) குறைந்த சூட்டில் எப்பொழுதும் வறுக்கவேண்டும்.
) தக்காளிக்கு பதில் புளியும் சேர்க்கலாம்.
) தேங்காய் சேர்ப்பதாக இருந்தால் ,அரைக்கும் பொழுது சேர்க்கலாம்.

பூண்டு சட்னி

பூண்டு சட்னி

TO VIEW IN ENGLISH : PLS CLICK HERE
வணக்கம் ,
பூண்டு சட்னி !! வெங்காயம் மற்றும் பூண்டு பிரியர்களுக்கு இந்த சட்னி மிகவும் பிடிக்கும்.எளிமையான ,மிகுந்த குறைந்த நேரத்தில் செய்யகூடியே சட்னி.
காரசாரமான , சுவையான பூண்டு சட்னி ரெசிபி உங்களுக்காக ,
தேவையானவை :
வெங்காயம் – 3 ( பெரியது ).
வர மிளகாய் – 5 .
புளி கோலியுருண்டை அளவு.
பூண்டு – 7 பல்.
உப்பு தேவையானஅளவு.
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்.
செய்முறை :
) வாணலில் 1 டீஸ்பூன் என்னை ஊற்றி வெங்காயம் , மிளகாய் போட்டு நன்றாக பொன்னிறம் வரும்வரை வதக்கவும்.அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும்.
) இத்துடன் பூண்டு , புளி ,உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

) அரைத்த சட்னியுடன் , 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி பரிமாறவும்.

) நான் இந்த சட்னியை அரிசி அவல் தோசையுடன் பரிமாறினேன்.நீங்கள் இட்லியுடன்,அல்லது சப்பாத்தியுடன் பரிமாறலாம். 

Friday, 27 October 2017

இஞ்சி பூண்டு தொக்கு

TO VIEW IN ENGLISH : PLS CLICK
வணக்கம் ,
இஞ்சி பூண்டு  தொக்கு ! இந்த ரெசிபியை Betterbutter குழுமத்தில் பாலா திரு அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். மிகவும் எளிமையாக , ஜீரணத்திற்கு மிகவும் நன்மையான தொக்கு.
ஆரோகியமான இஞ்சி பூண்டு தொக்கு செய்முறை உங்களுக்காக ,
சமைக்கும் நேரம் : 15 நிமிடம்
நபர்கள் : 3 

தேவையானவை :
இஞ்சி 1”- 7 துண்டு
பூண்டு - 1/8 கப்
காய்ந்த மிளகாய் - 3
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
புளி- எலுமிச்சை அளவு
வெல்லம் - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையானளவு
நல்லெண்ணெய் / தேங்காய் எண்ணெய்/ நெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1தேக்கரண்டி .

செய்முறை :
) இஞ்சி , பூண்டு , புளி , மஞ்சள் , மிளகாய் , உப்பு அகையவற்றை சிறிது கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
) வாணலியில் எண்ணெய் சூடாக்கி , கடுகு , அரைத்த விழுது , வெல்லம் சேர்த்து , எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கி இறக்கவும்.
) சூடான இட்லி,தோசை, சப்பாத்திஉடன் பரிமாற நன்றாக இருக்கும் .
) பிரிட்ஜ்ல் வைத்து ஒரு வாரம் வரை உபோயோகப்படுத்தலாம்.


Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...