Showing posts with label BASIC RECIPES. Show all posts
Showing posts with label BASIC RECIPES. Show all posts

Tuesday, 9 January 2018

சாக்லேட் விப்பேட் கிரீம்

சாக்லேட் விப்பேட் கிரீம்

Comments : 1 Posted in : BASIC RECIPES on by : Saranya Arun Tags: , , ,

TO VIEW IN ENGLISH : PLS CLICK

வணக்கம் ,
நான் மிக்ஸியில் விப்பேட் கிரீம் செய்யமுடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன் .சமீபத்தில் ஒரு நாள் எனது பீட்டர் ஒடைந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் மிக்ஸியில் விப்பேட் கிரீம் முயற்சி செய்தேன்.
மிக்ஸியில் செய்வது மிகவும் எளிதாக ,மற்றும் குறைத்த நேரத்தில் செய்யமுடிந்தது.நான் இந்த விப்பேட் கிரீமை ரம் சாக்லேட் கேக் மேல் தடவுவதற்காக செய்தேன் .
எளிதான சாக்லேட் விப்பேட் கிரீம் செய்முறை கீழே ,
தேவையானவை :
விப்பிங் கிரீம் – 1 கப் + 2 தேக்கரண்டி .
கோகோ பவுடர் – 4 தேக்கரண்டி .
செய்முறை :
அ) மிக்ஸியில் 2 தேக்கரண்டி விப்பிங் கிரீம் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து அரை நொடி சுற்றவும் . இதனால் கோகோ பவுடர் கிரீமுடன் நன்றாக கலந்துவிடும் .

ஆ) இத்துடன் மீதமிருக்கும் கிரீமை சேர்த்து அதிகமான வேகத்தில் சுற்றவும்.

இ) ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை நிறுத்தி கிரீம் கெட்டியான பதத்திற்கு வந்துவிட்டதா என்று கவனித்து கொள்ளவும் .

ஈ) கிரீம் படத்தில் உள்ளது போல் கெட்டியாகி விட்டால் அடிப்பதை நிறுத்தி கேக்கின் மேல் தடவலாம்.

குறிப்பு :
அ ) நான் நான்-டைரி விப்பேட் கிரீம் உபயோகித்தால் சர்க்கரை மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவில்லை . நீங்கள் சாதாரண கிரீம் உபயோகித்தால் 4 தேக்கரண்டி சர்க்கரை ,1 தேக்கரண்டி வெண்ணிலா எசென்ஸ் சேர்த்துக்கொள்ளவும் .


நெய்

நெய்

Posted in : BASIC RECIPES on by : Saranya Arun Tags: ,

TO VIEW IN ENGLISH : CLICK

வணக்கம் ,
நெய் எங்களது உணவில் நிச்சயம் இருக்கும்.தினமும் சிறிதளவு நெய் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது .அதனால் நான் குழம்பு , பொரியல் தாளிக்க நெய்யை உபயோகப்படுத்துவேன்.
நான் நெய்யை கடையில் வாங்குவது இல்லை , கடையில் கலப்படமில்லாத நெய் வாங்குவது மிகவும் கடினம் அதனால் வெண்ணை வாங்கி அதிலிருந்து நெய் உருக்கி வைத்துக்கொள்வது வழக்கம்.
நெய்யை நீங்கள் வீட்டிலேயே மிகவும் சுலபமாக செய்யலாம் , அதன் செய்முறை உங்களுக்காக .
தேவையானவை :
வெண்ணை – 500 கிராம்  .
செய்முறை :
) வாணலியை சூடாக்கி அதில் வெண்ணையை போடவும் , மிதமான சூட்டில் வென்னைஉருகும் வரை கலக்கி விடவும்.
) வெண்ணை உருகிய பின்னர் , சூட்டை அதிகப்படுத்தவிடவும்.
) நுரையுடன் வேக ஆரம்பிக்கும் , 5 நிமிடத்துக்கு ஒரு முறை கிளறி விடவும். நுரை திரித்து பின்னர் கரைந்துவிடும்.

) நுரை அடங்கி , தண்ணீர் போல் கொதித்து , பின்னர் வெண்ணை நிறம் மாறி தெளிந்த நீர் போல் ஆகிவிடும்.

) இப்பொழுது நெய்யை ஒரு தேக்கரண்டி எடுத்தால் அது பொன்னிறத்தில் , நெய் நறுமணத்துடன் இருக்கும் .

) உங்கள் நெய் தயார் , சூட்டில் இருந்து இறக்கி ஆறவிடவும் .சிறிது நேரத்தில் நெய் தெளிந்தவுடன் , வடித்து பத்திரப்படுத்தவும்.

) அடியில் சேர்ந்திருக்கும் நெய் கசடை வீசவேண்டாம் , அதை குழம்பு ,மசாலா ஆகியவற்றில் சேர்த்து கொள்ளலாம் .

குறிப்பு :
) நான் பசுமாட்டு வெண்ணை வாங்கினேன் , பசுமாட்டு வெண்ணை மஞ்சள் நிறமாக ,நல்ல நறுமணமான நெய் கொடுக்கும்.நீங்கள் எருமை மாட்டு வெண்ணையும் வாங்கலாம்.
) வெண்ணையை கருகவிடக்கூடாது , கருகிய வெண்ணை சுவை மற்றும் நறுமணம் இருக்காது .அதனால் மேலே உள்ள வழிமுறைகளையும் , படங்களையும் சரியாக பின்பற்றவும்.          

கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங்



கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங்


TO VIEW THE RECIPE IN ENGLISH : CLICK HERE

கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங் !! ரெட் வெல்வெட் கேக் மற்றும் கிரீம் சீஸ் சிறந்த காம்பினேஷன்.இந்த ரெசிபிஐ நான் இரண்டு நாட்களுக்கு முன்பேயே போஸ்ட் செய்யவேண்டும் என்று நினைத்தேன் அனால் எப்படியோ மறந்து விட்டேன்.
ரெட் வெல்வெட் கேக்ஐ நீங்கள் தனியாக சுவைக்க பிரமாதமாக இருக்கும் , அத்துடன் கிரீம் சீஸ் இன்னும் ரிச்சாக இருக்கும்.
கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங் ரெசிபி உங்களுக்காக ,
தேவையானவை :
கிரீம் சீஸ் – 200 gms .
வெண்ணை – 60 gms .
சர்க்கரை – 2 கப் ( பொடியாக அரைத்து).
வெண்ணிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்.
செய்முறை :
௧) வெண்ணை மற்றும் கிரீம் சீஸ்ஐ பிரிட்ஜ்ல் இருந்து வெளியே எடுத்து , அறை சூட்டின் பதத்திற்கு கொண்டுவரவும்.

௨) பின்பு இரண்டையும் நன்றாக மைய அடிக்கவும்.


௩) அத்துடன் வெண்ணிலா எசென்ஸ் , சர்க்கரை போடி ஆகியவற்றை சிறிது சிறிதாக சேர்த்து வேகமாக அடிக்கவும்.

௪) கலவை நன்றாக கலந்து , கெட்டியான , மற்றும் நல்ல திடமான கூம்பு பதம் வரும் வரை அடிக்கவும் ( ஒரு கரண்டியில் கலவையை எடுத்தால் அது கீழேயே விழாமல் அப்படியே நிற்க வேண்டும்).

௫) இந்த பதம் வந்தவுடன் சர்க்கரை சேர்ப்பதை நிறுத்திவிட்டு ,கேக்கின் மேல் தடவி பரிமாறவும்.

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...