Showing posts with label கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங். Show all posts
Showing posts with label கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங். Show all posts

Tuesday, 9 January 2018

கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங்



கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங்


TO VIEW THE RECIPE IN ENGLISH : CLICK HERE

கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங் !! ரெட் வெல்வெட் கேக் மற்றும் கிரீம் சீஸ் சிறந்த காம்பினேஷன்.இந்த ரெசிபிஐ நான் இரண்டு நாட்களுக்கு முன்பேயே போஸ்ட் செய்யவேண்டும் என்று நினைத்தேன் அனால் எப்படியோ மறந்து விட்டேன்.
ரெட் வெல்வெட் கேக்ஐ நீங்கள் தனியாக சுவைக்க பிரமாதமாக இருக்கும் , அத்துடன் கிரீம் சீஸ் இன்னும் ரிச்சாக இருக்கும்.
கிரீம் சீஸ் பிரோஸ்ட்டிங் ரெசிபி உங்களுக்காக ,
தேவையானவை :
கிரீம் சீஸ் – 200 gms .
வெண்ணை – 60 gms .
சர்க்கரை – 2 கப் ( பொடியாக அரைத்து).
வெண்ணிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்.
செய்முறை :
௧) வெண்ணை மற்றும் கிரீம் சீஸ்ஐ பிரிட்ஜ்ல் இருந்து வெளியே எடுத்து , அறை சூட்டின் பதத்திற்கு கொண்டுவரவும்.

௨) பின்பு இரண்டையும் நன்றாக மைய அடிக்கவும்.


௩) அத்துடன் வெண்ணிலா எசென்ஸ் , சர்க்கரை போடி ஆகியவற்றை சிறிது சிறிதாக சேர்த்து வேகமாக அடிக்கவும்.

௪) கலவை நன்றாக கலந்து , கெட்டியான , மற்றும் நல்ல திடமான கூம்பு பதம் வரும் வரை அடிக்கவும் ( ஒரு கரண்டியில் கலவையை எடுத்தால் அது கீழேயே விழாமல் அப்படியே நிற்க வேண்டும்).

௫) இந்த பதம் வந்தவுடன் சர்க்கரை சேர்ப்பதை நிறுத்திவிட்டு ,கேக்கின் மேல் தடவி பரிமாறவும்.

Yummy chats

போண்டா சட்னி

போண்டா சட்னி TO VIEW IN ENGLISH : PLS CLICK வணக்கம், போண்டா சட்னி ! நான் முன்பே பீட்ரூட் போண்டா போஸ்டில் போண்டா சட்னி பற்றி கூறியி...